" ஆகையால் நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கும் நன்மை செய்யக்கடவோம். " ( கலா. 6:10)
ஓர் கிறிஸ்தவன் தன் நேரத்தையும், சுகத்தையும் பாராமல் மற்றவர்களுக்கு நன்மையான உதவிகளைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
தன் சகோதரருக்காக தன் ஜீவனையும் தத்தம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வித ஊழியம் செய்யத் தக்க சந்தர்ப்பத்தை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
விசேஷமாக சத்தியத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேச தன் நேரத்தையும், தீங்கு நாளிலே சத்தியத்தில் நிலைத்து நிற்க சர்வாயுதவர்க்கம் தரித்துக் கொள்ள சகோதரர்களை எச்சரித்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
உபத்திரவ காலத்தில் விசுவாச வீட்டாரை ஸ்திரப்படுத்துவதே இவர்களின் முக்கிய ஊழியமாகக் காணப்பட வேண்டும்.