" இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால், நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும், தேவ பக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும். " ( 2 பேது. 3:11 )
தேவ பக்தி வீண் வார்த்தையிலும், அசுத்தமானதிலும், வாக்குவாதங்களிலும், அவபக்தியினாலும், புரட்சியினாலும் உண்டாவதில்லை.
கிறிஸ்துவை ஆவியிலும், உண்மையிலும் ஏற்றுக்கொண்டவர்கள் இவை யாவையும் முற்றிலும் அகற்ற வேண்டும்.
இதன் மூலம் நாம் அனுதினமும் தேவனிடம் நாம் செய்த, பேசின குற்றமான காரியம் எதாக இருப்பினும் அவற்றை அறிக்கையிட்டு மன்னிப்படைய வேண்டும்.
அனுதினமும் நம் குற்றங்களை தேவனிடம் அறிக்கையிட்டு அவர் கிருபையை நாடி நாளுக்கு நாள் தேவ பெலத்தினால் சோதனைகளை மேற்கொள்ளுவோமேயானால் நியாயத் தீர்ப்பிலே கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்பாகக் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தாவியின் மூலம் தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் இருப்போம்.