" கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு. "
( எபே. 2 : 8 )
பரிசுத்தமுள்ள தேவன் அங்கீகரிக்கத்தக்க ஊழியத்தை விழுந்துபோன மனுக்குலத்தின் சந்ததியில் ஒருவனும் செய்து நிறைவேற்ற முடியாது.
புதிய சிருஷ்டிகளாக தற்போது நாம் நிற்பது நம்முடைய பழைய மனுஷனின் எந்த கிரியையினாலும் அல்ல.
புது சிருஷ்டியானது நம்முடைய முயற்சியினால் அல்ல.
அது தேவனுடைய ஈவு.
இதை நாம் முற்றிலும் அறிந்திருக்க வேண்டும்.
இல்லையேல் நாம் அவர் கிருபையினின்று விழுந்து போகக்கூடும்.
பழைய மனிதனிலிருந்து புதிய மனிதன் படிப்படியாகத் தானே முன்னேற்றமடைந்தான் என்பது தவறான எண்ணம் என்பதை அப்போஸ்தலனான பவுல் இங்கே தெளிவாகக் கூறும்போது புதிய மனிதன் ஓர் தனிப்பட்ட புதிதான சிருஷ்டி என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
நல்ல ஊழியத்தினாலல்ல, நல்ல ஊழியம் செய்வதற்காக தேவனுடைய கைவேலையாக கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டான் என்பது உண்மையானது.