" நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. " ( எபி. 13: 5 )
தேவனுடைய ஊழியத்தில் நாம் ஈடுபட்டு அந்த ஊழியத்தைச் செய்யும்போது, சாத்தானோ அல்லது வேறு எந்த அசுத்த ஆவியோ நம்மை எதிர்த்து நிற்குமேயானால் நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும் ?
பக்தி வைராக்கியத்துடனும், ஆர்வத்துடனும் முழு பொறுப்பும் நம்மேல் ஏற்றுத் தொடர்ந்து இவ்வூழியத்தை மன தைரியத்துடன் செய்வதோடு நம் உள்ளத்திலே முழு பலமும் உத்திரவாதமும் தேவன் பேரில் உள்ளது என்றும் நினைக்க வேண்டும்.
தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றி முடிக்கும் வரை நான் மரிப்பதில்லை என்று முற்காலத்தில் ஒருவர் கூறினார்.
தேவனுடைய ஊழியத்தில் ஈடுபட்டோருக்கு இது ஓர் உண்மையும் அங்கீகரிப்புமான வார்த்தையே. " பரிசுத்தவான்களின் மரணம் " அவர் பார்வைக்கு அருமையானது. ( மத். 6:25- 26, பிலி. 4:6 - 7 )