" உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். " ( மத். 5:44 )
நம்மை எதிர்த்து எதையும் செய்பவர்களிடையே எந்த அளவுக்கு நாம் விருப்பத்தைக் காட்டுகிறோம் என்பதை சோதிப்பதற்கு இது ஓர் பரீட்சை. அவர்கள் தவறுதலை உணர்த்த நாம் அவர்களிடம் அன்பைக்காட்டி அவர்களுக்கு உதவி செய்கிறோமா ? அவர்களுக்காக ஜெபித்து அவர்களுடைய பெலவீனங்களைச் சகித்து அவர்களுக்கு போதனையாக முன் மாதிரியான ஜீவியம் ஜீவிக்கிறோமா ? இப்படிச் செய்வோமானால் அநேகப் பாவங்களை மூடுகிறவர்களாக இருப்போம். பாவிகளிடையே, பாவம் என்றுமுள்ளதென்பதும், நாம் இந்த பாவத்தை வெறுக்க வேண்டுமென்பதுமே தேவ தீர்ப்பு. ( அப். 7: 59 - 60, 1 பேது. 2: 20 - 23 )