வெளி 13:3,4 "...பூமியிலுள்ள யாவரும் ஆச்ச்ரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, அந்த மிருகத்திற்கு அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்."
பூமியிலுள்ள யாவரும் மிருகத்தைப் பின்பற்றி(துர் உபதேசங்கள்), வலுசர்ப்பத்தை(பிசாசின் போதனைகளை) வணங்கி இவ்வண்ணமாய் மோசம்போவார்கள் என்ற இந்த தீர்க்கதரிசனம் தேவ திட்டத்தின்படி முழுமையாக நிறிவேறிவருகிறது.
இது புரியாமல் ஆவிக்குரிய வேசித்தனம் பண்ணும் ஊழியக்காரர்கள்(?) உலகை மாற்றும் முயற்சியில் இருப்பதாகக் காண்பித்துக்கொண்டு எல்லாரும் கிறிஸ்துவைப் பின்பற்றுவார்கள் என்று சொல்லி தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி பாபிலோன் என்றாலே குழப்பம் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
வெளிப்படுத்தல் புத்தகம் ஒரு குறியீட்டின் புத்தகம். அதிலுள்ள பெரும்பாலான சொற்களை நேரடி அர்த்தம் கொள்வதற்கில்லை. சமுத்திரம், சூரியன், சந்திரன், ஸ்திரீ, நான்கு ஜீவன்கள், 24 மூப்பர்கள், மிருகம், வலுசர்ப்பம், கள்ளத்தீர்க்கதரிசி, வானம், பரலோகம், நட்சத்திரம், அக்கினிக்கடல், அக்கினிகலந்த கண்ணாடிக்கடல், குத்துவிளக்கு... எல்லாவற்றுக்கும் சொல்லர்த்தம் கொண்டால் குழப்பமே மிஞ்சும். இதைக்குறித்து பதிய இருக்கிறோம்.
மிருகம், மலைகள், பர்வதங்கள் என்பது அரசாங்கங்களைக் குறிக்கும் (தானியேல் சொப்பனம்). மிருகத்தை வணங்குவது அரசாங்கத்துக்கு அதிமுக்கிய ஸ்தானத்தைக் கொடுப்பதாகும். அதனால்தான் தேவனுடைய பர்வதம் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படும் என்பது தேவனுடைய ராஜ்ஜியம் மற்ற எல்லா 'மலை'களையும் மேற்கொண்டு பூமியில் ஸ்தாபிக்கப்படும். ஸ்திரீ என்பதும் உபதேசங்களையே குறிக்கும். ஸ்திரீகளால் கறைபடாதவர்கள் என்பது துர் உபதேசத்தால் பாதிக்கப்படாமல் தங்களைக் காத்துக்கொண்டவர்கள் என்று அர்த்தம். இதை விடுத்து அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் இருக்கிறவர்கள் உண்டு.
கள்ளத்தீர்க்க தரிசி என்றால் தேவனுடைய வசனத்தைப் புரட்டுகிறவன் என்றே அர்த்தம். வெளிப்படுத்தல் புத்தகத்தில் இது யாரோ ஒரு கள்ளத்தீர்க்கதரிசியைக் குறிக்காமல் வேதவசனத்துக்கு முற்றிலும் முரணாகப் போதிக்கும் அமைப்புகளையே குறிக்கும்.
வெளிப்படுத்தல் புத்தகத்தின் நிகழ்வுகள் முதல் நூற்றாண்டு முதலே சம்பவிக்க ஆரம்பித்துவிட்டது என்பது நமக்கு ஆச்ச்ரியமளிக்கும். இதோ சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிறவைகள் என்ற பதத்தை நாம் 'நான் வாசித்தபிறகு சம்பவிக்கபோகிறவைகள்' என்று தப்பர்த்தம் கொள்கிறோம்.
பொதுவாக வெளிப்படுத்தின விசேஷத்தை சபைகள் ஏதோ ஒரு பெரிய மாயா ஜால கதைகள் போல் அவர் அவர் காதில் விழுந்தது போல் விளக்கத்தை தருகின்றன. சகோ சோல் சொல்யூஷன் அவர்கள் சற்றே முயற்சித்து நேரம் எடுத்து வெளிப்படுத்தின விசேஷம் என்கிற இந்த மகா உன்னதமான தீர்க்கதரிசன புத்தகத்தை சற்றே இந்த சொந்த காது உள்ள சபைகள் புரிந்துக்கொள்ளும்படியாக விளக்கம் தர முயற்சிக்க கேட்டு கொள்கிறேன். இடைஇயில் நானும் பகிர்ந்துக்கொள்ளுகிறேன். விசேஷமாக பாபிலோன் என்கிறதான அந்த மகா வேசி சபை யார் என்றும் அவளோடு சேர்ந்து மதுபானம் செய்கிற ராஜாக்கள் யார் என்பதை சபைகள் புரிந்துக்கொள்ளட்டும்.
மேலும் ஸ்திரி என்பது துர் உபதேசங்களை தாங்கி இருக்கும் சபைகள் என்பது இன்னும் சரியான விளக்கமாக இருக்கும்.