" நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷர்களாகயிருப்பீர்கள். சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும். " ( யோவான், 8: 31 - 32 )
உண்மைச் சத்தியமானது தேவனால் நியமிக்கப்பட்ட வழியின் மூலமாகவே மட்டும் கண்டுபிடிக்கப்படும்.
இந்த வழி நம் இரட்சகர், அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள் மூலமே அருளப்பட்டுள்ளது.
தேவனுடைய வார்த்தைகளில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம் என்பது அந்த வார்த்தைகளை வாசித்து, சிந்தித்து, அதற்குக் கீழ்படிந்து விசுவாசித்து நடப்பதின் மூலமே ரூபிக்கப்படும்.
நாம் இவ்விதம் தொடர்ந்து ஜீவிக்கும் போது சத்தியத்தை அறிவோம். விசுவாசத்தில் நிலைத்திருப்போம். நல்ல போராட்டத்தைப் போராடுவோம். சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கக் கூடியவர்களாகவுமிருப்போம்.
முடிவு காலம்வரை கிறிஸ்தேசுவுக்கு நல்லப் போர்ச் சேவகனாகவும் காணப்படுவோம்.