"எஙகளால் கட்டளை பெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனம் மடையவேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள்..." அப்15:24
அப்போஸ்தலர்களே சொல்லாத விஷயங்களை தற்கால நூதன ஊழியர்கள், இவர்கள் எப்படியென்றால் மற்ற எல்லா ஊழியர்களிலிருந்தும் தங்களை வேறுபடுத்தி விசேஷித்தவர்களாக் காண்பித்துக்கொண்டு நித்திய ஜீவனை சுதந்தரிக்க நாம் நீதிமான்களாக வேண்டுமென்றும், நீதிமானாவது தேவகிருபையினால் அல்ல நம் சுயமுயற்சியே போதும் என்றும் அதற்காக நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் நம்மைக் கலக்கி, நம்முடைய ஆத்துமாக்களைப் புரட்டுகிறார்கள்.
3. எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.
4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
5. நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
6. இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.
7. இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.