" ஆகையால் நீங்கள் உங்கள் மனதின் அறையைக்கட்டிக்கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படும் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்." ( 1 பேது. 1:13 )
நம் மனதின் அறையை மாறாததும் உறுதியானதுமாக நீண்ட காலத்திற்குரியதாக கட்டிகொண்ட பிறகு தெளிந்த புத்தியுடையவர்களாக இருக்க வேண்டும்.
நம் மனதில் எவ்வித கிளர்ச்சியும், கோபமூட்டும் அளவில் ஏற்படக் கூடாது. அவ்விதம் ஏற்படும்போது குறுகிய நேரத்தில் நம் ஆவிக்குரிய ஜீவியம் மாறுதலடைந்து பல நிந்தைகளுக்குட்படச் செய்யும்.
இதனால் தேவனுடைய மேலான வாக்குத்தத்தங்களைப் பெற நம்மைத் தகுதியற்றவர்களாகக் காணப்படச் செய்து, விசுவாசத்தின் பரீட்சையிலே விழுந்துபோகச் செய்யும்.
இந்த சோதனையை மேற்கொள்பவர்களே பரிசை பெற முடியும்.
ஜீவப் பாதையிலே நம் ஓட்டமானது விட்டு விட்டு ஓடக்கூடியதாக இராமல் பொறுமையோடு தொடர்ந்து ஓட வேண்டியதாக உள்ளது.