நித்திய ஜீவனைப்பெற விசுவாசத்திலே நாம் முதலாவது ஊக்கப்படுவது மட்டும் போதாது.
மரணச் சிறையினின்று ஜீவனுக்குள் வழி நடத்தப்பட்டபின், அந்த விசுவாசத்தில் நாம் நாளுக்கு நாள் தொடர்ந்து பரிசுத்தாவியைப் பெற்று அதன் மூலம் பலப்படவும் வளரவும் வேண்டும்.
தேவனுடைய வார்த்தையின் மூலம் பரிசுத்தாவியினாலே வழி நடத்தப்பட்டு விசுவாசத்திலே நடக்கவும் வேண்டும்.
தலையைப்போல இருதயமும் விசுவாச ஜீவியத்தில் ஓர் தனிப்பட்ட சாராம்சம் வாய்ந்தது என்பதும் உண்மை. சத்தியத்தின் மூலம் இது நம்மிலே இணைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது.
இதன் பிரதான கட்டளைகள் நமக்கு பிரதானமானதாகவும் இதன் வாக்குத்தத்தங்கள் நமக்கு ஆத்ம உணைர்ச்சியைத் தரக்கூடியதாகவும் உள்ளது.