" பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். " ( நீதி. 16:32 )
கோபம் இயற்கையாக வெறுப்பையும், தீய எண்ணத்தையும், சச்சரவுகளையும், பொறாமைகளையும் உண்டாக்குவதால் தேவனுடைய குமாரனின் சாயலாக இருக்க விரும்புகிற யாவரும் கோபத்தைவிட்டு விலக வேண்டும்.
தவறானதை ஒருவர் செய்யும்போதும், சில பாவங்களை நடப்பித்தவர் பேரிலும் கோபம் வந்தாலும் தகாதவைகளைப் பேசாமல் நீதியோடும், அன்போடும் மிதமாக இதை உபயோகிக்க வேண்டியது அவசியமானது.
நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான்.
தேவன் தம்முடைய பிள்ளைகளின் பேரில் மன உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும் உள்ளவராக இருக்கிறார்.
அவர் குமாரனின் சாயலிலே இணைக்கப்பட்ட யாவரும் இதே சிந்தையுடையவர்களாயிருக்கவே பிதா விரும்புகிறார்.
கோபம் கொண்டாலும் பாவஞ் செய்யாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.