" கற்பனையின் பொருள் என்னவெனில் சுத்தமான இருதயத்திலும், நல் மனசாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. " ( 1 தீமோ. 1:5 )
தேவ நடத்துதலிலே அவர் நம்மிடத்திலும் நமக்காகவும் வைத்துள்ள பல வாக்குத்தத்தங்களை பெற அன்பில் நாம் நாளுக்கு நாள் வளர வேண்டும் என்பதே.
இதுவே நமக்கு முன் வைக்கப்பட்ட தெளிவுள்ள சிந்த்தனையாக இருக்க வேண்டும்.
இந்த அன்பே தெய்வீகத் தன்மையுள்ளது.
ஏனென்றால் தேவன் அன்பாகவே இருக்கிறார்.
தேவன் விரும்பிய அளவுக்கு இந்த அன்பு நமக்குள் வளர இது சுத்தமுள்ள இருதயத்திலிருந்தே வர வேண்டும்.
தேவ சித்தத்திற்கு ஒத்திருக்கும்படி அவர் கொடுத்த அன்பின் பிரமாணத்திற்குட்பட்டதாகவும் தன்னயம் வாய்ந்த சாத்தானின் போதகங்களுக்கு விரோதமானதாகவும் இருக்க வேண்டும்.
இதுவே தேவ கற்பனை. கற்பனையைக் கைக்கொள்ளுவதே நித்திய ஜீவனுக்குரிய வழி.
அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.