" ஆகையால் மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவர்மாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். " ( எபி. 12:1 )
மேலான அழைப்புக்குரியப் பரிசை பெறுவதற்குத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் அதைப் பெற்றுக்கொள்ள, அதற்குரிய பாதையில் ஓடும்போது தங்கள் சிந்தனையை அந்தப் பந்தயப் பொருளை நோக்கி ஒருமுகப்படுத்தி ஓட வேண்டும்.
அவர்கள் தங்கள் முயற்சிகளில் பலமுள்ளவர்களாகத் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் வைராக்கியத்தைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.
ஊக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்.
உலக ஆசை, இச்சைகளை விலக்க வேண்டும்.
மேலும் அப்போஸ்தலன் சொல்லுவது போல ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுகிறவர்களாயிராமல் பொறுமையுடன் நமக்கு முன் வைத்துள்ள பரிசை எண்ணி நிச்சயத்துடன் ஓடக்கடவோம்.