" உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காக காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. " ( எபி. 6: 10 )
தேவனுடைய ஊழியத்தில் ஈடுபடவும் தேவ ஊழியர்களுடன் ஒத்துழைப்பதிலும் தேவ பிள்ளைகள் இந்த கிருபையின் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அறுப்பின் காலத்தில் ஜீவிக்கிற பிள்ளைகள் தாங்கள் இருளிலிருந்து ஒளியிடம் அழைக்கப்பட்டதைக் குறித்தும் தேவனுடைய புகழைக் குறித்தும் தாங்களே அநேகருக்குச் சாட்சி கொடுக்க முன்வரவேண்டும்.
அதோடு கூட தேவ ஊழியர்களுக்கு உதவியாக இருந்து இந்த ஊழியத்தில் அவர்களுடன் ஒத்துழைக்கவும், பிரயாசப்படவும் வேண்டும்.
இப்படிப்பட்ட ஊழியத்தில் இவர்கள் அசதியாயிராமல் உற்சாகமுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும்.
நீதியுள்ள தேவன் அவனவன் கிரியைக்குத் தக்க பலனளிப்பார்.