" நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார் " ( 1 யோ. 4:12 )
நான் தேவனுடைய பார்வையிலே அவருடையவனா அல்லது இல்லையா என்பதை அளந்து பார்க்க நான் அவர் பேரிலும், அவருடைய ஊழியத்தின் பேரிலும், பொதுவாக உலகத்தாரிடமும்,விசேஷமாக என் பகைவனிடமும் நான் காட்டக்கூடிய அன்பே அதை ரூபிக்கக் கூடியதாக இருக்கும். நம் குணலட்சணங்களை அளந்து பார்க்க அன்பையே முதன்மையாகக் காட்ட வேண்டும். இதன் மூலமே நாம் தேவனிடம் நெருங்கி இருப்பதையும் அவரால் அங்கீகரிக்கப் பட்டவர்களாகக் காணப்படவும் ஓர் முக்கிய பரீட்சையாக எண்ண வேண்டும். பரிசுத்த ஆவியினால் பிறந்த ஒவ்வொருவரும் நல்ல குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இருளிலிருந்து வெளிச்சத்தைக் காணச் செய்தவரை புகழ நம் அனுதின வாழ்க்கையில் இந்த அன்பை வெளிப்படையாகக் காட்ட வேண்டும். ( 1 கொ. 13: 1 - 3 )