பாதாளம் என்று தமிழில் மொழிப்பெயர்த்தவர்கள் பாவம் அந்த ஒரே எபிரேய (ஷியோல்) வார்த்தை மற்றும் கிரேக்க வார்த்தையான "ஹேடஸ்" என்பதை சரிவர புரியாமல் அதை ஏதோ "பூச்சாண்டிகள்" இருக்கும் இடம் போல் சித்தரித்து விட்டார்கள். அதை பலர் கணவுகளாகவும் காட்சிகளாகவும் பார்த்து அநேகரை குழப்பியும் கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அதாவது "யோசேப்பு", "தாவீது" போன்ற தேவனுக்கு பிரியமானவர்கள் தொடங்கி "காயின்" அல்லது மற்ற நபர்கள் சென்ற ஒரே இடமான "ஷியோல்" என்பதை நம் தமிழ் வேத மொழிப்பெயர்ப்பாளர்கள் சொதப்பி விட்டு அநேகர் இதை வைத்து பிழைப்பு நடத்த வழி வகுத்திருக்கிறார்கள். எபிரேய மொழியில் ஒரே ஷியோல் தான் ஆனால் அது தமிழில் மொழிபெயர்க்கபட்டபோது "பாதாளம்", "குழி", "படுகுழி" போன்ற வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டு, நல்லவர்கள் செத்தால் அது பிரேதக்குழி, கெட்டவர்கள் செத்தால் அது அக்கினி எரியும் ஒரு இடமாக இருக்கும் என்கிற "கோமாளித்தனமான" கற்பனை போதனைகள் வளர்த்து வருகிறார்கள் கத்தோலிக்க சபை தொடங்கி இன்று காளானை போல் முலைக்கும் குட்டி சபைகள் வரை.
அதாவது, பாவம் அப்போஸ்தலர்களுக்கு காட்சியாக காண்பிக்காத ஒரு "மாயமான" இடத்தை 2000 வருடங்களுக்கு பிறகு சிலருக்கு காண்பித்து, உங்களுக்கு இப்பொழுது காண்பித்திருக்கிறேன், கடந்த 6000 வருடங்களாக மக்கள் மரித்து சென்று இருக்கும் இடம் தான் இந்த அக்கினிமயமான இடம் என்று "தேவன்" காண்பித்ததாக "பயப்படுத்தி" வருகிறார்கள்.
அன்பானவர்களே, இப்படி பட்ட கள்ள போதனைகளை நம்ப வேண்டியதில்லை. இது எல்லாம் வேதத்தை ஆறாயமல், அதை ஆறாய்பவர்களை குறை கூறி வரும் சிலரின் சொந்த கருத்தாகும். அப்போஸ்தலர்கள் எழுதியதற்கு மிஞ்சி வேதம் இல்லை. வெளிப்படுத்தின விசேஷத்துடன் வேதம் முடிவு பெற்றது. இந்த மாபெரும் வேதத்தை படித்து புரிய அதை ஆறாய்ந்து பார்த்தால் தான் முடியுமே தவிர, அதை பக்கத்தில் வைத்து விட்டு, நம் மனதிற்கு புடித்தது மாதிரி சிந்தித்தால் அது தான் "கனவுகளாகவும்" காட்சிகளாகவும்" வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.
இவர்கள் போதிப்பது வேதத்தில் இல்லாத, மாற்று மார்கத்தார் போதிக்கும் கருத்தாகும். ஏனென்றால் இவர்கள் மாற்று மார்கமும் அதில் இருப்பவர்களும் உண்மையே என்றும் நம்புகிறவர்களாக இருக்கிறார்களே!! அதை எல்லாம் உண்மை என்று நம்புவோருக்கு, வேதம் எப்படி சத்திய வெளிச்சத்தை காண்பிக்கும், ஆகவே தான் இப்படி பட்ட போதனைகள்.
பாதாளம் என்பது, மரித்து மனிதன் வைக்கப்படும் பிரேதக்குழியே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அதை தான் பவுல் சொல்லும் போது, "பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" (1 கொரி.15:55) என்கிறார். அதாவது மரித்து அடக்கம்ப்பண்னப்பட்டவர்கள் அனைவரும் பாதாளம் என்கிற "பிரேதக்குழியில்" இருந்து வெளி வந்து விடுவார்களே. இயேசு கிறிஸ்துவின் பலியால் அனைவரும் உயிர்த்தெழுவார்களே!! இதை தான் பாதாளத்தின் மேல் ஜெயம் என்கிறார் பவுல் தவிர ஏதோ அக்கினி கடலில் இருந்து ஆவிகள் வெளியேறும் சம்பவம் போல் தான் இன்றைய "காட்சியாளர்கள்" இதை புரிந்திருக்கிறார்கள் போல். பாதாளமே உன் ஜெயம் எங்கே என்று கேட்ட பிறகாவது இவர்களுக்கு தெரிய வேண்டாமா, அங்கு யாரும் நிரந்தரமாக இருக்க போவதில்லை என்று. இதற்கு மாறாக அங்கே நிரந்தரமாக ஒரு பெரும் கூட்டம் என்றென்றும் எரிந்துக்கொண்டிருக்கும் என்று தேவன் (எந்த தேவன் என்று தான் தெரியவில்லை) இவர்களுக்கு காண்பித்து மக்களை "பயமுறுத்த" சொன்னாராம்!
அப்போஸ்தலர்கள் சொன்னது போல் கடைசி காலங்களில் இப்படி பட்ட சத்தியத்திற்கு புறம்பான போதனைகள் புறப்படும் என்பதை உறுதிப்படுத்தும் போதனைகளே இவைகள். வேதத்தை ஆறாயும் போது தான் சத்திய ஆவி, இயேசு கிறிஸ்து என்ன சொல்லி தந்தார் என்பதை வெளிப்படுத்துமே தவிர, வேதத்தை ஒரு ஓரமாக வைத்து விட்டு நமக்கு பிடித்தமான விஷயத்தை யோசித்து, அது தான் உண்மை என்று சிந்தித்தால் அது தான் காட்சியாக வருமே தவிர, இயேசு கிறிஸ்து கற்று கொடுத்தது வராது.
பிரியமானவர்களே, வேதத்தில் "நரகம்" "பாதாளம்" என்கிற வார்த்தைகள் இருக்கிறது ஆனால் இவர்கள் போதிக்கும் "பயங்கரமான" இடங்கள் அவைகள் இல்லை என்பதை வேதத்தை ஆறாய்ந்து பார்த்தால் மாத்திரமே தெரியுமே தவிர, அதை தலைகனைக்கு கீழ் வைத்து, அதை குறித்து காட்சிகள் பார்ப்பதால் வராது. தேவனுக்கு மாத்திரமே பயப்புடுங்கள், இன்றைய நவீன போதர்களின் "ஃபான்சி"யான போதனைகளுக்கு பயந்து விடாதீர்கள். பாதாளம் "பயங்கரமான" ஒரு இடம் இல்லை, மாறாக கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலினால் வெறுமையாக மாறப்போகும் ஒரு இடம் மட்டுமே.
கிறிஸ்துவின் பலியின் நிமித்தமும், தேவனின் இலவச ஈவானா இரட்சிப்பை குறித்து சந்தோஷப் படுவோம், அவருக்கு நன்றிகள் சொல்லுவோம். அன்பான தேவன் ஒரு போதும் இவர்கள் சொல்லும் போதனைகளுக்கு துனை நிறகமாட்டார்கள் என்பதை காலம் நிறைவேரும் போது அனைவரும் புரிந்து தான் கொள்ள போகிறார்கள், அது வரையில் இப்படி பட்ட போதனைகளுக்கு அடிமைகளாக வேண்டாம் என்றே சொல்லுகிறோம். ஒரு காமெடியான விஷயம் என்னவென்றால், அக்கினி என்றால் அனைத்தையும் சாம்பளாக்கி போடும் ஒரு பொருள், ஆனால் பாதாளத்தில் உள்ள அக்கினி மட்டும் ஏதோ விசேஷமான ஒன்று போல், அதில் எரியும் அனைவரும் வேதனைகளில் இருப்பார்களாம, புழுவும் பூச்சியும் அதில் சாகாதாம், கூடவே பாவிகளும் அதில் என்றென்றைக்கும் எரிந்துக்கொண்டிருப்பார்களாம். இதை தேவன் பார்த்துக்கொண்டு, ஐயோ, என் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் இப்படி அக்கினியில் என்றென்றைக்கும் எரிந்துக்கொண்டிருக்கிறார்களே, என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே, இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் கூட ஒன்றுக்கும் உதவவில்லையே என்று சொல்லிக்கொண்டிருப்பாரோ!! என்ன வேடிக்கையான விஷயம்.
அன்புள்ளவர்களே, தேவன் எப்படி அன்புள்ளவராக இருக்கிறாரோ, அவரின் நியாயத்தீர்ப்பும் அப்படியே, மனிதர்கள் என்றென்றும் வாழும்படியாகவே இந்த பூமியை சிருஷ்ட்டித்தாரே தவிர, அவர்களை அக்கினியில் போட்டு வேடிக்கை பார்ப்பதற்கு இல்லை.
இப்படி பட்ட "நரக போதகர்களை" குறித்து எச்சரிக்கையாக இருப்போமே!! காட்சிகளை நம்பிக்கொண்டு வேதத்தை ஆறாயாமல் இருக்க வேண்டாமே!! ஐயா!! நவீன கால "நரக போதகர்களே"! கொஞ்சமாவது தேவனுக்கு பயந்து இருங்களே!! போதனைகள், தீர்க்கதரிசனங்கள் எல்லாம் அப்போஸ்தலர்களுடன் முடிந்து விட்டது. நீங்கள் ஒன்று எந்த விதத்திலும் உங்களை பெரிய நீதிமானாக என்னிக்கொண்டு என்னிடம் தேவன் வந்தார், பேசினார், காண்பித்தார் என்று ரீல் மேல் ரீல் சுத்தி கிறிஸ்தவத்தை ஒரு மாயா ஜாலமாக மாற்ற வேண்டாம்! இதில் எச்சரிப்பு வேறு!!
குழந்தைகள் போல் உட்கார்ந்து கேட்பது வேதத்தில் இல்லாத போதனை, மாறாக வேதத்தை ஆறாய்ந்து பார்ப்பதும், அதினால் நித்திய ஜீவன் உண்டென்பது தான் வேத உபதேசமே! ஒரு வேலை குழந்தைகள் போல் கேட்பதினால் தான் இவர்களுக்கு மாத்திரம் பாட்டி ஜீம்பூம்பா கதைகள் சொல்லி பேரன் பேத்திகளை கொஞ்சம் மிரட்டி சாப்பிடவோ தூங்கவோ வைப்பார்களே, அது போல் இவர்களுக்கு கிடைக்கிறதோ!! இவர்களுக்கும் இவர்களுக்கு காட்சி காண்பிப்பவர்களுக்குமே அது வெளிச்சம்!!
-- Edited by bereans on Saturday 6th of March 2010 06:28:58 AM
தேவனோ தேவ ஆவியோ குழப்பத்தை ஏற்படுத்துவது அல்ல என்பதை பலர் பல இடங்களில் மறந்து, பல குழப்பமான "வெளிப்பாடுகள்" இந்த கடைசி காலத்தில் சிலருக்கு மாத்திரம் காண்பிக்கப்படும் வெளிப்படுகள் (!?) என்று புகழ்ந்து வருகிறதை பார்க்க முடிகிறது. இப்படி வேதத்தில் இல்லாத ஒன்றை நிச்சயம் தேவன் வெளிப்படுத்துவது கிடையாது. மேலும் வெளிப்படுத்தல் புத்தகத்துடன் வெளிப்பாடுகள் முடிந்து விட்டது. ஆகவே தான் அந்த புத்தகம் முடிந்தவுடம் "ஆமென்" என்கிற வார்த்தை உள்ளது. ஆனால் அத்துடன் முடியவில்லை, நாங்கள் என்ன அப்போஸ்தலர்களுக்கு சலைத்தவர்களாக என்கிற என்னத்தில் தாங்கள் நினைத்துக்கொண்டு (ஒரு குழந்தையை போல் தான்) தியானிப்பதை தேவ வெளிப்பாடுகளாகவும் அது சற்றே "ஃபான்ஸியாக" இருப்பதால் பலரின் பாராட்டுகளை பெற தான் செய்கிறது. (எத்துனை படங்கள் வந்தாலும் ஒரு 3டி படம் வரும் போது அதற்கு உண்டான மவுசு வித்தியாசமாக இருப்பதை போல்)
மக்களுக்கு சத்தியம் கேட்க காதை மூடிக்கொண்டு இது போன்ற கட்டுகதைகளுக்கு செவிசாய்க்கும் காலம் வரும் என்று அப்போஸ்தலர் என்ன தெரியாமலா சொல்லியிருக்கிறார்.
இவர்கள் பார்க்கும் இந்த தரிசனங்கள் ஏன் வேதத்தில் சேர்க்கவில்லை? ஏன் அது உலகத்திற்கு பிரயோஜனமாக இல்லை? வேதத்தில் கொடுக்கப்ப்பட்டிருக்கிற ஒவ்வொரு வெளிப்பாடும் குறைந்தபட்சம் வெதம் இருக்கிற ஒவ்வொரு வீட்டிலும் வாசிக்கப்படாகி விட்டது (அது புரிந்ததோ அல்ல புரியவில்லையோ)!! ஆனால் நவீன காலத்து காட்சியாலர்கள், அதிலும் சிலர் தொலைக்காட்சிகளிலும் தோன்றி பிதற்றும் சில பிதற்றள்கள் வேதத்தில் இடம் பெற முடியவில்லை? ஏனென்றால் கட்டு கதைகளும், ஃபான்ஸி கதைகளும், தம்மை பெரிய ஆளாக காண்பிக்கும் எந்த ஒரு காரியமும்" வேதத்தில் வர வாய்ப்பு இல்லை. அப்போஸ்தலனான யோவானுக்கு யாருக்குமே வெளிப்படுத்தப்படாத "வெளிப்படுத்தின சுவிசேஷம்" சொல்லப்பட்டது ஆனால் அவரின் தாழ்ச்சியை பாருங்களே, அவர் ஏதோ தம்மை ஒரு பெரிய அப்போஸ்தலர் என்றோ, பெரிய தீர்க்கதரிசி என்றோ வெளிப்படுத்தாமல், "உங்கள் சகோதரனும்,இயேசு கிறிஸ்துய்வினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவான்" (வெளி. 1:9) என்று தன்னை ஒரு எளிய சகோதரனாக சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த கடைசி காலத்தில் சில ஃபான்ஸி கதைகளை காண்பித்து, அப்போஸ்தலர்களுக்கே வெளிப்படுத்தாத ஒன்றை எங்களுக்கு வெளிப்படுத்தினார் என்கிற அளவிற்கு பேச துனிந்து இருப்பவர்கள் தான் பெருகி இருக்கிறார்கள், அதை கேட்கும் ஒரு பெரும் கூட்டமும் இருக்கும் என்று வேதம் ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பதை இவர்கள் ஒரு போதும் உனர்ந்துக்கொள்ள போவதில்லை போல். "அவர்கள் பொய்யை (இலாத பாதாளத்தை இருக்கிறது என்று என்னுவது போல்) விசுவாசிக்கத்தகதாக கொடிய வஞ்சகத்தைத் (இல்லாத ஒரு இடத்தின் தரிசனங்கள் போன்றவைகள்) தேவன் அவர்களுக்கு அனுப்புவார்" (2 தெச 2:12). இது போன்ற வசனங்கள் இவர்களின் தரிசனங்களை கேட்கும் மக்களின் கண்களுக்கோ காதுகளுக்கோ ஏனோ போய் சேருவதில்லை, ஏனென்றால் இவர்களின் இந்த கட்டுகதைகளை ரசிக்க இவர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களோ என்னமோ!!
பாதாளம்! பயங்கரமா!!........ இன்னும் தொடரும்......
அநேகர் நரகத்திற்கு போய் என்றென்றும் எரிந்துக்கொண்டு இருப்பார்கள் என்று (வேதத்தில் இல்லாத ஒன்றை) சொல்லுவதை காட்டிலும், வேதத்தில் சொல்லப்பட்டபடி "எல்லாரும் மீட்கப்படுவார்கள்" என்கிற தேவத்திட்டத்தை "சுவிசேஷமாக" சொல்லுவது எங்கள் வேலை. சுவிசேஷம் என்றால் இப்படி தான் இருக்க முடியுமே தவிர ஒருவனை பயமுறுத்தி அந்த பயமுறுத்தலின் நிமித்தம் மனமாறுவது மனமாற்றம் அல்ல, அது பயத்தினால் வருகிற மாற்றம்.
போலிஸை பார்த்தவுடன் ஹெல்மெட் அனிவது எப்படி தவறோ அப்படி தான் நரகம் சென்று விடுவேனோ என்று பயந்துக்கொண்டு "கிறிஸ்தவனாக" மாறுவது.
சில பலர் கனவுகளையும் காட்சிகளையும் பார்த்து அதன் அடிப்படையில் "சுவிசேஷத்தை" அறிவிக்கிறார்கள், ஆனால் நாங்களோ "எழுதுவதற்கு அதிகமாக என்னாமல்" என்ன எழுதியிருக்கிறதோ, அதை வைத்து தான் சொல்லி வருகிறோம். தீமையும் பொய்யும் மிகவும் சுலபமாக சென்றடையும், ஆனால் உண்மையும் சத்தியமும் அப்படி அல்ல.
எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று என்னம் கொண்டுள்ளோருக்கு எப்படி தான் தேவன் "நரகத்தை" காண்பித்து, அங்கு ஏற்கனவே வாதிக்கப்படுவோரும், இனிமேலும் வாதிக்கப்படுவோரையும் காண்பிப்பாரோ! வியப்பாக இருக்கிறதே!! ஒன்று அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும், அல்லது "காட்சியாளர்களின்" படி பெரும்பாளுமானோர் "நரகத்திற்கு" செல்ல வேண்டும். எல்லோரும் இரட்சிக்கப்படும் ஆசையுடன் நரகம் சமாச்சாரம் ஒத்து போவதில்லையே!!
இது போன்றவர்களை தான் இயேசு கிறிஸ்து மத்.ல் "என்னை விட்டு அகன்று போங்கள் அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் யார் என்று நான் அறியேன்" என்கிறாரே!! அக்கிரம செய்கை என்றவுடன் ஏதோ பெரிய கொலைபாதகர்களை அல்ல, மாறாக கிரமம் இல்லாமல் செய்வதை தான் இங்கு சொல்லுகிறார். கிரமம் என்றால் நேர்த்தியாக ஒன்று நடந்துக்கொண்டிருக்கும் போது, அதை குழைப்பதாகும். தேவன் எல்லாரையும் இரட்சிக்க வல்லவர் என்றும் அவரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை என்றும் சொல்லிக்கொண்டு, அதுவும் கடந்த 2000 ஆண்டுகளாக யாருக்கும் (அப்போஸ்தலர்கள் உட்பட) தெரிவிக்காமல், இந்த கடைசி நேரத்தில் அவசர அவசரமாக சில பலருக்கு இப்படி ஃபான்ஸியான விஷயங்களை (வேதத்தில் இல்லாததை) காண்பித்து என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்?
இல்லாத ஒன்றையே இவ்வுளவு சத்தமாக சொல்ல துனிந்தவர்கள் மத்தியில் தேவனின் அன்பினால் வரவிருக்கும் நல்லதை "சுவிசேஷமாக" அறிவிப்பதை நாங்கள் ஏன் நிறுத்திக்கொள்ள வேண்டும்? மேலும் பல மார்கங்களை விசுவசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு எந்த தேவன் தான் இப்படியான வெளிப்பாடுகளை தருகிறாரோ, அதை ஆமோதிப்பவர்களாவது சற்று யோசிக்க வேண்டாமா!!
தேவ கற்பனைகளை கைக்கொள்ளாம், ஆனால் மனிதனின் காட்சிகளை கைக்கொள்ளாமா!!