" அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும். " ( பிலி. 4 :7 )
நம்முடைய சொந்த சமாதானத்தைக் குறித்து இங்கே அப்போஸ்தலன் பேசாமல் உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையே பேசுகிறார்.
இது அவர் கிருபையிலே நாம் நிலைத்திருக்கத் தக்கதாக அவரிடமிருந்து அருளப்படும் வல்லமையாக இருந்து நம்மை அவருடைய பிள்ளைகளாக நன்மையில் வழி நடத்தக் கூடியதாக உள்ளது.
இந்தச் சமாதானம், நமக்கு ஏற்படும் சகல உபத்திரவங்களிலும், பயங்கரமான சிந்தைகளிலும், மற்றெல்லாக் காரியங்களிலும் நமக்குக் காவலாகவும், கேடகமாகவும் உள்ளது.
இது ஓர் கிறிஸ்தவனுக்குத் தேவனிடம் தன் உள்ளத்திலே சமாதானத்தைக் கண்டடையச்செய்து அவ்ரோடு தொடர்பு கொள்ளவும், தன் சிந்தையைக் காத்துத் தெய்வீக வல்லமையையும், ஞானத்தையும், அன்பையும் உணரும்படி செய்கிறது.