" நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத்தெரியப் படுத்துங்கள். " ( பிலி. 4: 6 )
தேவன் ஏன் நமக்குத் தேவையானவைகளை அறிந்து அதைத் தந்தருளவும், நாம் எதையும் கேளாமலே அவர் வாக்குத்தத்தம் பண்ணினவைகளை தரவும் கூடாது? என்ற கேள்வி எழும்பக்கூடும்.
மெய்யாகவே அவருடைய தயவையும் அதன் மூலம் சில சலுகைகளையும் நாம் பெற்றுக் கொள்ள, முதலாவத் நம் இருதயங்களை அவருக்கு ஏற்றதாக நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.
தேவன் நம் பேரில் கொண்டுள்ள அன்பையும், நடத்துதலையும் நாம் பூரணமாக உணர்ந்து கொள்ளக் கூடாதவர்களாகவே இருக்கிறோம்.
நம் ஜெபத்திலும், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவதிலும் கூட நன்றியுள்ளவர்களாக அவர் நமக்கு செய்து வரும் சகல காரியங்களையும் பகுத்தறிந்து அவரைத் துதிக்க வேண்டும்.