இந்த உறுதியான வார்த்தையின் மூலம் நமக்கு எவ்வள்வு ஆறுதலும் சமாதானமும் உண்டாயிருக்கிறது.
இவை ஜீவனுக்குரிய வார்த்தைகளே.
இவை நம்மில் நம்பிக்கையை உண்டுபண்ணுகிறது.
நாம் மாமிசத்தில் பூரணராக இல்லாதிருந்தும் வாஞ்சையும், விருப்பமும் உள்ள இருதயமுடையவர்களை தேவன் அவர்கள் விருப்பத்திற்கேற்றதாகப் பூரணப்படுத்த சித்தமுள்ளவராக இருக்கிறார்.
நமது சரீரம் மரணத்துகேதுவானதாக இருந்தாலும் நாம் ஆவியின்படி நடக்க முடியும். நம் சிந்தனைகள் ஆவிக்குரியதை சிந்தித்து நடக்க முடியும்.
நம் எண்ணங்களும் பூரணமானதாக இருக்கும் போது இப்படிப்பட்ட ஆத்துமாக்களைப் பூரணப்படுத்த தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்.