" நான் உனக்குப்போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன் மேல் என் கண்களை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன். " ( சங். 32: 8 )
தேவ சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பதே தேவ பிள்ளைகள் அறிய வேண்டிய ஓர் முக்கிய பாடமாகும். தங்கள் வாழ்க்கையில் சகல காரியங்களையும் தங்கள் சுய சித்தத்தின்படி செய்யாமல் தேவ சித்தம் இன்னதென்பதை உணர்ந்து அவர் நடத்துதலுக்காக காத்திருக்கவேண்டும். நாம் பரம கானானுக்கு வழி நடத்தப்படுகிறோம். வாக்குத்தத்தின்படி இதில் பிரவேசிக்க பல பாடுகள் உண்டு. நாம் முறு முறுப்பில்லாமல் சந்தோஷத்துடன் தேவ நடத்துதலுக்கு கீழ்படிதலுடன் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். விசுவாசமும் தேவன் பேரில் நம்பிக்கையும் உள்ளவர்கள் மட்டுமே இந்த நிலையைப்பெற்று வாழ முடியும். கிறிஸ்துவும் பிதாவின் சித்தம் இன்னதென்பதை அறிந்ததினால் என் சித்தத்தின்படி அல்ல உம் சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபித்தார். ( சங். 73: 23 - 24, 143: 10 )