" நீங்கள் பேராசை இல்லாதவர்களாக நடந்து உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் " ( எபி. 13: 5 )
தன்னயமான ஜெபம் பிரயோஜனமற்றது.
அது தேவனுடைய பார்வையில் பலனளிக்கக் கூடாதது.
ஒரு சிலர் ஆஸ்தியைச் சேர்த்து இதனிமித்தம் தேவ ஊழியத்திலிருந்தும் , சத்தியத்திலிருந்தும் விலகி விடுகின்றனர்.
சிலர் சரீர பெலனைப் பெற்று பல சோதனைகளைப் பெறுகின்றனர்.
ஆவிக்குரிய இஸ்ரவேலர் தேவனிடம் விண்ணப்பம் பண்ணும் போது உலக ஆஸ்தி அந்தஸ்திற்காக அல்ல ஆவிக்குரிய வரங்களுக்காகவும், மன திருப்திக்காகவும், பொறுமையுடன் தேவ ஊழியத்தைச் செய்ய ஞானத்தை மட்டுமே கேட்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.
தேவன் நமக்கு தந்தருளும் சகல நல் ஈவுகளுக்காக நாம் நன்றியுடன் ஸ்தோத்திரம் செலுத்தி நமக்கு உள்ளவைகளில் மனத்திருப்தி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.