வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்குப் பாதப்படி ஏசா. 66:1
என் பாத ஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன் ஏசா. 60:13
பொதுவாக கிறிஸ்தவர்கள் மோட்சத்தைக்குறித்து அடிக்கடி பேசுகிறார்கள் ஆனால் இந்த பூமியின் எதிர்காலத்தைக் குறித்து சிந்திக்கிறதில்லை. ஏசா. 45:8- ல் எகோவா தேவன் தமது தீர்க்கன் மூலமாக இவ்வாறு கூறுகிறார் வானங்களை சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து அதை உற்வேற்படுத்தினார். பேதுரு தன்னுடைய நிருபத்தில், வானமும் பூமியும் வெந்து உருகிப்போம் என்று அடையாள பாஷையில் குரிப்பிட்டு, அவருடைய வாக்குத்தத்தின் படியே நீதியுள்ளவர்கள் வாசம் செய்யும் புதிய வானக்களும், புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம் ( 2 பேதுரு 3 :13) என்கிறார்.
ஏன் இந்த புதிய - புதுப்பிக்கப்பட்ட பூமி ?
Henry F Hill (ஹென்றி எப் ஹில்) என்ற வேத வல்லுனர் இந்த பூமி அழிக்கப்படாமல் அது ஏதேனின் மகிமைக்கு -அல்லது - அதைக் காட்டிலும் சிறந்ததாக புடுப்பிக்கப்படும் என்கிறார். தேவனுடைய வார்த்தைகளைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால் இது புலப்படும் என்கிறார். நாமும் வேதத்திலிருந்து சில காரியங்களைக் குறித்து சிந்திப்போம்.ஏசாயா 26:9 - ல் உம்முடைய நியாயத்தீர்ப்பு பூமியிலே நடக்கும் பொழுது பூச்சக்கரத்துக் குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். பூரண புருஷனும் அவனுடைய சுற்றுப்புற சூழலையுங் குறித்து ஏசாயா 35 -ம் அதிகாரத்தில் ஒவ்வொரு வசனமாகத் தியானித்தால் - பெரும் பாதையின் பரிசுத்தத்திற்கு - விழுந்து போன மனிதன் திரும்புவதைக் காண்கிறோம். இழந்து போன உரிமையை மீண்டும் பெற்றுக்கொண்டு இந்த புதுப்பிக்கப்பட்ட பூமியில் வாசம் செய்வதைக் குறித்து பேதுருவின் தேவாலய செய்தி மூலம் அறிகிறோம். இவ்வாறு வரப்போகும் மகிமையான எதிர் காலத்தில் மனிதனுக்காக தேவன் ஆயத்தம் பண்ணும் இந்த புதிய/புதுப்பிக்கப்பட்ட பூமியைக் குறித்து இன்னும் விரிவாக சிந்திப்போம்.