kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இவைகளை விட்டு விலகு.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
இவைகளை விட்டு விலகு.


கொள்கை விபரீதங்கள்!

இவைகளை விட்டு விலகு.


இக்கொள்கைகள் விபரீதங்கள் மட்டுமல்லாது கேட்பவர்களை முட்டாள்களாக்கும் போதனைகளாக இருக்கிறது.

வேதத்துக்கும், தேவனுடைய தன்மைகளுக்கும் எதிரான இக்கொள்கைகளை விட்டு விலகுவோமே.

கிறிஸ்தவம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அநேகர் (ஏராளம் பேர்) இந்தக் கொள்கை விபரீதங்களுக்குள் சிக்கித்தவித்துக்கொண்டுள்ளனர். அது என்ன கொள்கை விபரீதம்?

இரட்சிப்பு என்ற வார்த்தை சம்பந்தப்பட்டதுதான் இது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் எல்லா மனுஷருக்கும் ஈவாகக் கிடைத்த இந்த இரட்சிப்பை கிறிஸ்துவின் சபையாகிய சரீத்துக்குக் கிடைத்த, ஆளுகைக்குத் தகுதியாகும் 'அந்த' விசேஷ  இரட்சிப்போடு  1தீமோ4:10. குழப்பிக்கொண்டு குழ்ப்பத்தின் சிகரங்களாக விளங்குகின்றனர்.

உயிர்த்தெழுதல் எல்லாருக்கும் உண்டு என்று போதிக்கும் இவர்கள் அது எதற்காக் நிகழ்கிறது என்பது பற்றி கொஞ்சம் கூட விளக்குவதில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று இருக்கும்பட்சம், ஏற்கனவே பாவம் செய்து 'மரண தண்டனை' அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜனங்களை எதற்காக மீண்டும் உயிரோடு எழுப்பவேண்டும் என்று கேட்டால் அது அவர்களை நியாயந்தீர்த்து மீண்டும் தண்டிக்கவாம். சற்றேனும் யாரும் யோசித்தால் இதிலுள்ள அபத்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். அதுவும் இன்னும் இவர்கள் கூறும் வரப்போகும் நிகழ்வுகளைக் கேட்டால் பைத்தியம்தான் பிடிக்கும். சற்று இவர்கள் காமெடியைத்தான் கவனியுங்களேன்.

மனிதனுக்குள் ஒரு ஆத்துமா இருக்கிறது. இது சாகாது (பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும் என்பதற்கு எதிரானது). மரிக்கும்போது இது வேறொரு இடத்திற்குப் போகிறது (விசுவாசி ‍‍‍@ ஆபிரகாம் மடி, அவிசுவாசி@ பாதாளம்). பாதாளத்திற்குப் போகும் ஆத்துமா பார்க்கும், பேசும், உணரும், வேதனைப்படும் ஆனால் சாகாது. (மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்ற வசனத்திற்கு எதிரானது). கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் அப்போது இந்த ஆத்துமா சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று சரீரத்துக்குள் புகுந்து கொள்ளும். நியாயத்தீர்ப்பு நடந்த பின்பு அவிசுவாசிகள் யாவரும் நரகத்தில்(அக்கினிக்கடல்) தள்ளப்பட்டு நித்தியத்துக்கும் வேதனைப் பட்டுக்கொண்டே.................. இருக்க வேண்டியதுதான். ஒருவேளை பாதாளத்தில் சூடு அதிகமாக இல்லாததால் நரகத்துக்குப் போகிறார்களோ என்னவோ? அதாவது முதலில் சரீரமில்லாமல் ஒரு ஆத்துமாவாக வேதனைப் பட்டவர்கள் சரீரத்தோடு உயிரோடு எழுப்பப்பட்டு பின்னர் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள்.

ஆனால் இவர்களிடம் பரலோகம் போகுமளவு ஒரு உன்னத, பரிசுத்தமான வாழ்வு வாழ்பவர்கள் எத்தனை பேர் என்று கேட்டால் அட குறைந்த பட்சம் 'எங்கள் பாஸ்டர்' என்று கூட தைரியமாக சொல்லமாட்டேன் என்கிறார்கள். ஆக பாஸ்டரே போக  வாய்ப்பில்லாததை ஒத்துக்கொள்ளும் இவர்கள் மற்றவர்களுக்கு இந்த சுவிசேஷத்தைச் சொல்லி அவர்களை பரலோகத்திற்கு தயாராக்குகிறார்களாம்.

தியோடர் வில்லியம்ஸ் பரலோகத்தில்தான் இருக்கிறார் என்று சாட்சியளிக்கும் சேலம் குழப்ப டாக்டர் புஷ்பராஜ் DGSதினகரன் 'அங்கிள்' மட்டும் நரகத்தில்தான் இருக்கிறார் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார். அவர் காமெடியை அவரது ஜாமக்காரன் தளத்தில் பார்க்கலாம்.

விக்ரக ஆராதனையை எதிர்க்கும் இவர்கள் ரோமன் கத்தோலிக்கர்களை எதிப்பதில்லை. ஆளாளுக்கு ஒரு உபதேசத்தை வைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் 'பொதுவான' காரியங்களில் மட்டும் கூடிக்குலாவுவார்கள். வெளி வேஷம், இதைத்தான் வேசித்தனம் என்று வெளிப்படுத்தலில் வாசிக்கிறோம். ஆசீர்வாதத்துக்கு பழைய ஏற்பாட்டு வசனங்கள், வல்லமைக்கு வரங்களுக்கு மாத்திரம் புதிய ஏற்பாட்டு வசனங்கள்.

இந்த வேசித்தனத்துக்குத்தான் விலகி ஓடு என்று பவுல் அப்போஸ்தலன் சொன்னார் போலும்.......



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்ன சகோதரரே இப்படி எழுதி விட்டீர்கள்,

பாதாளம், அது மூன்று அடுக்குகளில் இருக்கிறது என்றும், அங்கு நடக்கும் பல காரியங்கள் அப்போஸ்தலர்களுக்கே வெளிப்படுத்தாத தேவன் 2000 வருடங்களுக்கு உண்டான மனிதனர்களுக்கும் சொல்லாமல் இன்று இந்த நாட்களில் பலருக்கு கூட்டி கொண்டு கான்பித்திருப்பதாக செய்திகள் கிடைக்கிறதே! அது என்னவாம்!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பவுல் அப்போஸ்தலன் எச்சரித்த கட்டுக்கதை அளப்பவர்கள் இவர்களே.
பேய்த்தனத்துக்கடுத்த போதனைகள் இவர்களுடையதே.
இராஜ்ஜியத்திலும் வந்து இவர்கள் காமெடியைத் தொடராமலிருந்தால் சரி.
ஒக்காந்து யோசிப்பானுகளோ?

மரணத்தைப் பற்றி வசனத்தோடு விளக்கச்சொன்னால் இந்தச் சாத்தான்கள் கூட்டம் காததூரம் ஓடிப்போகிறது. வசனமென்றால் அவ்வளவு பயம். சொந்த அனுபவங்களைச் சொல்லிச்சொல்லியே ஊரை ஏமாற்றி சுயமேன்மையைத் தேடும் பாபிலோனிய வேசியின் வாரிசுகள். மரணமில்லா நித்திய வாழ்வு என்று வேதத்தில் இல்லாத வார்த்தைகளை  பிரயோகப்படுத்தி குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். வேதத்தை ஆராயக்கூட நேரமில்லாமல், அறிவில்லாமல் தாங்களும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வேறு வேலையே எதுவும் இல்லாததால்தான் தளத்தில் குறுகிய காலத்தில் இத்தனைப் பதிவுகள். இவர்கள் ஒன்று முழுநேரங்கள் என்று சொல்லிக்கொண்டு அடுத்தவர் பணத்தில் வயிறுவளர்க்கும் பெருவயிற்றுச் சோம்பேறிகளாக இருப்பார்கள் அல்லது வேலை செய்கிறேன் பேர்வழி என்று சம்பளம் கொடுக்கும் எஜமானனை ஏமாற்றி அலுவலகங்களிலேயே அவருடைய செலவில் தங்களுடைய பெயரைப் பிரஸ்தாபம் செய்பவர்கள்.

வேதத்தைவிட வெளிப்பாடுகள்தான் முக்கியம் என்று இவர்கள் நம்புவதால் சாத்தானும் இவர்களை நரகத்துக்கெல்லாம் கொண்டுபோய்க் காண்பித்து தன்னுடைய ஊழியத்துக்கு இவர்களைப் பயன்படுத்துகிறான்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard