" சுத்தமுள்ளவர்களுக்கு சகலமும் சுத்தமாயிருக்கும். அசுத்தமுள்ளவர்களுக்கும், அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமிராது. அவர்கள் புத்தியும், மனசாட்சியும் அசுத்தமாயிருக்கும். தேவனை அறிந்திருக்கிறோமென்று அவர்களும் சொல்லுகிறார்கள். கிரியைகளிலே அவரை மறுதலிக்கிறார்கள். ( தீத்து. 1: 15 - 16 )
இது எவ்வள்வு கடினமானதோர் காரியம் என்பதை காண்கிறோம்.
தேவ பிள்ளைகள் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக ஜீவிக்க எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் சுத்த இருதயமும், புத்தியுள்ளவர்களுமாய் இருந்தால் மட்டும் போதாது.
தங்கள் கிரியைகளிலே தேவனுடைய வார்த்தைகளை உண்மையாகக் கைக்கொண்டு அதன்படி ஜீவிக்கவும் வேண்டும்.
நாம் நம்மை சோதித்தறிந்து நடந்தால் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்.
தேவ அன்பை நாம் எந்த அளவுக்குக் காட்டி வருகிறோம் என்பதை, அவர் நமக்கு போதித்துக் கொடுத்த அன்பின் கட்டளைகளைக் கைக்கொண்டு நடப்பதின் மூலமாகவே நாம் வெளிப்படுத்த முடியும்.
தேவனிடம் உள்ளான அன்பு இல்லாதவன் அவரை அறிந்தும் மறுதலிக்கிறவனாக இருப்பான்.