" நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை சோதிக்கிறார். " ( உபா. 13 : 3 )
தேவனுடைய இராஜ்யம் நம் இரட்சகரான இயேசு கிறிஸ்துவைப் போன்ற இருதயமுள்ளவர்களுக்கு மட்டுமே தேவ கிருபையினால் அருளப்படுகிறது.
இந்த கிருபையினால் ஒவ்வொருவரும் தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு ஆத்துமாவோடும்,
" என் சித்தத்தின்படி அல்ல உம்முடைய சித்தமே ஆகக்கடவது " என்று சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.
நம்மை முற்றிலுமாக தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதே அல்லாமல் வேறே எந்த நிபந்தனைகளும் அந்த இராஜ்யத்தைப் பெற தகுதியுள்ளதாயிராது.
இதில் மட்டுமே நம் பூரண அன்பை தேவன் பேரில் காட்ட முடியும்.
யார் யார் இப்படிப்பட்ட மேலான அன்பைத் தேவனிடம் காட்டுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே,
" கண் காணாதவைகளும், காது கேளாததும், மனிதனுடைய இருதயத்தில் தோன்றாததுமான "