" என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். " ( மத். 11: 29 )
கிறிஸ்துவின் இந்த நுகத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவானதாக இருக்குமென்று தேவ வார்த்தை உறுதிப்படுத்துகிறது.
சுமை எவ்வளவுக்கெவ்வளவு பளுவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆசீர்வாதங்களும் அதிகமாகவே இருக்கும்.
தற்காலத்தில் இது எவ்வள்வு கொடூரமாகக் காணப்படுமோ அவ்வள்வுக்கு அதிகமாக மகிமையும், பிரகாசமுமாக அவர்கள் ஜீவியம் காணப்பட்டு பரலோக இராஜ்யத்திற்குரியவர்களாக வடிவமைக்கப்பட இந்த அனுபவங்கள் முழு நம்பிக்கையையும் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த மேன்மையை நம் முன்பாக வைக்கும் பொழுது சகல பாரமும் இலகுவாகவே காணப்படும்.
மேலும் கிறிஸ்து நம்மோடிருப்பதால் இந்த நுகம் மிக மெதுவாகவே காணப்பட்டு சுமை இலகுவாக்கப்படுகிறது.