ஒவ்வொரு கிறிஸ்தவனும் தம் அனுதின வாழ்க்கையில், இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஓர் மாதிரியான ஜீவியத்தை உண்மையோடு ஆர்வமுள்ளவர்களாக செய்யவேண்டும்.
இது தற்காலத்தில் காணப்படக்கூடாத பூரணமும், மகிமையும், அழகும், பரிசுத்தமுமான ஜீவியம்.
இது இயேசுவினிடம் மட்டும் காணப்பட்டது.
இதைக்குறித்தே பவுல் சொல்லும்போது என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லாமல், "நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" என்றார். (1கொரி. 11:1)
பவுல் பூரண ஜீவியத்தில் நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார்.
ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண நிலையில் அல்ல.
ஆகிலும் இயேசுவின் பூரண குணங்களை தன் உள்ளத்திலே கொண்டு அவரைப்போல நாமும் பிரயத்தனப்படவே எச்சரிக்கப்ப்டுகிறோம்.
நம் ஜீவியம் அனேகருக்கு முன்பாக ஓர் நல்ல மாதிரியான ஜீவியமாக இருக்க வேண்டும்.