விசுவாசத்தை பலப்படுத்தவும், அவிசுவாசத்தை மேற்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும் ?
இதற்குரிய பதில் யாதெனில் முற்கால அப்போஸ்தலரைப்போல, பிதாவே எங்கள் விசுவாசத்தை பலப்படுத்தவேண்டும் என்று ஜெபித்தல் வேண்டும்.
இந்த ஜெபத்துடன் தங்கள் இருதயங்களில் விசுவாசத்தை அதிகப்படுத்த முயற்சிக்கவும் வேண்டும்.
இவர்கள் தேவனின் வாக்குத்தத்தங்களின் பேரில் அடிக்கடி சிந்தனை உள்ளவர்களாக இருந்து, பிதாவின் வார்த்தைகளின் பேரில் அதிக பற்றுதல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
தான் தேவனோடு செய்த உடன்படிக்கையை உணர்ந்து, அதை அடிக்கடி தன் நினவிற்கு கொண்டு வர வேண்டும்.
தேவ வாக்குத்தத்தங்கள் தன்னுடையதென்று தன் இருதயத்திலும், தன் உதடுகளினாலும் தேவனுக்கு முன் அறிக்கையிட்டு, ஜெபத்திலே அவருக்கு நன்றி செலுத்தவும் வேண்டும்.
விசுவாசம் தேவ பலம். விசுவாச தளர்ச்சி பெலவீனம்.
ஒருவர் இதை அடைய சகோதரர் இடையே இதைகுறித்துப் பேசி, தன் விசுவாசத்தை பெலப்படுத்த வேண்டும்.