"அன்றியும், ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே," எபி 9:27
மனுஷருக்கு மரணம் ஒரேதரம்தான் என்று இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. ஒருதரம் அல்ல ஒரே தரம்.
Hapax (Greek) definition 1. once, one time 2. once for all
ஒரே என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கான அர்த்தம் தெளிவாக உள்ளது. இந்த வசனம் தெரியாத யெகோவா சாட்சியினர் மரிக்காமலேயே ராஜ்ஜியத்தில் பங்கடைவோம் என்ற முட்டாள்தனமான போதனையில் இருக்கின்றனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் எல்லாருக்காகவும் ஒரேதரம் மரித்து உயிர்த்தெழுந்ததால் நியாயத்தீர்ப்புக்கு எல்லா மனுஷரும் வாய்ப்பு பெறுகின்றனர்.
ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைந்து, பின்பு இரண்டாம்தரம் மரிப்பதும் வேதத்தில் இல்லை. இரண்டாம் மரணம் "மரணத்துக்குத்தானே" ஒழிய மனிதர்களுக்கு இல்லை.
"மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்." வெளி 20:14
"ஒருதரம்" அல்ல "ஒரேதரம்" என்றுதான் வேதத்தில் உள்ளது. இதை ஒருதரம் மரிப்பதும்.... என்று விவாதமே நடத்திக்கொண்டுள்ளனர். ஒரேதரம் என்றால் ஒரேதரம்தான் அதன்பின் (உயிர்த்தெழுதலுக்குப்பின்) இன்னொரு மரணம் இருக்கும் பட்சம் 'ஒரேதரம்' என்ற வார்த்தை வந்திருக்க வாய்ப்பில்லை.
ஏதோ ஒரு ஆவியில் இருந்து தரிசனங்களை தேவன் தான் தந்தார் என்று சொல்லிவருபவர்களுக்கு இது போன்ற ஆழமான விஷயங்கள் புரியாது பிரதர். அன்பான தேவன் அனைவருக்கும் ஒரு ஜீவனை வைத்திருக்கிறார் என்று தேவ தூஷனம் செய்யும் "வெளிப்பாட்டினர்" புரிந்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. ஆனாலும் நீங்கள் இப்படி தடாலடியாக எல்லாம் எழுதக்கூடாது. உங்களுக்கு வெளிப்பாடுகளை தேவன் தருவதே இல்லையா??