அனேக சந்தர்ப்பங்களில் நாம் மற்றவர்களுக்கு பிரயோஜனமான காரியங்களை செய்ய விரும்பினாலும் அல்லது செய்ய அவா இருந்தாலும், இது அனேகருக்கு திருப்திகரமாக இராது.
தேவன் இவைகளை அறிந்தவரான படியால் நம்மை உயர்த்துவோ, தாழ்த்தவோ அவராலேயன்றி ஒருவராலும் கூடாது. நம் கிரியைகளை அவர் அறிவார்.
வாஞ்சையுள்ளவர்களை ஊக்கமுள்ளவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும், தேவனுடைய சித்தத்தை மனப்பூர்வமாகச் செய்யவும் பெலனளிக்கிறார்.
இவரகள் சகல உபத்திரவத்திலும் பொறுமையுள்ளவர்களாகவும், தங்களை முற்றிலுமாக வெறுத்து தேவனுக்கே ஊழியம் செய்வதாக எண்ணி கிருபையினால் நிறைந்தவர்களாக நீதியுள்ள நியாதிபதி தங்களுக்கு ஏற்ற காலத்தில் பதிலளிப்பார் என்ற சிந்தையோடு நற்காரியங்களை செய்வர். ( நீதி. 3:35; எபி. 10: 30 - 31 )