" நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. " ( 1 தெச . 4:3 )
தேவ சித்தம் இன்னதென்பதை நாம் வேதத்தின் மூலம் அறியவேண்டுமானால், முதலாவது நம்மை முற்றிலும் அடக்கி, நம் சித்தத்தை வெறுத்து நம்மை நாம் ஆளக்கூடியவர்களாகக் காணப்படவேண்டும்.
நாம் விசுவாச வீட்டாருக்குச் செய்யும் ஊழியமும், மற்ற மனிதர்களுக்குச் செய்யும் உதவிகளும், இன்னும் பல நற்குணங்கள் அடங்கிய கிரியைகள் யாவும் நம்மை அடக்கி ஆளும் ஒரே காரியத்தில் அடங்கியுள்ளது.
நாம் பரிசுத்தராக விளங்க இது மிக அவசியமானது.
அப்போஸ்தலன் சொன்னது போல நாம் எவ்வளவாக தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்குப் போதித்தாலும், நமக்குண்டான யாவற்றையும் ஏழைகளுக்குக் கொடுத்தாலும் அல்லது ஒரு நல்ல காரியத்தித்ற்காக தன் உயிரையும் தியாகம் செய்தாலும் அன்பின்றி செய்யப்பட்டால், அவன், பிதா, குமாரனின் ஆவியின்றி அவருடைய பார்வையிலே ஒன்றுமில்லாதவனாக காணப்படுவான்.