kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு யார் காரணம்? வேத விளக்கம்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: தீமைக்கு யார் காரணம்? வேத விளக்கம்.


P(பிதற்றல்) சுந்தர் அவர்களே!

 உம்மை ஆரம்பத்தில் எடைபோடத்தவறியதாலும், உம்முடைய காமெடிகள் எங்கள் தளத்துக்கு கொஞ்சம் 'என்டர்டெயின்மென்ட்' ஆக இருக்குமென்பதாலும்தான் நீர் 165 பதிவுகள் செய்ய நேர்ந்தது. உம்முடைய அபத்த‌ பதிவுகளையும், அறிவுகெட்ட அனுபவங்களையும் அங்கீகரிக்கவில்லை என்பதை அறிக. இவற்றையெல்லாம் உம் முழுநேர காமெடி தளமான இறைவன் தளத்தில் வைத்துக்கொள்ளவும். கடைசி பதிவு பதித்து எங்கள் வயிற்றில் பால் வார்த்ததற்கு நன்றி.

உம்முடைய 165 பதிவுகளும் உமது முட்டாள்தனத்தை எங்களுக்கு இன்ஸ்டால்மென்டில் அறிவித்தன, அவ்வளவே. திருட்டுத்தனமாய் இத்தளத்தை நீர் விஸிட் அடிப்பீர். உமது தளத்தில் எங்களைப் பற்றி கேவலமாக எழுதுவீர் என்பதெல்லாம் நாங்கள் அறிவோம். கவலையே இல்லை. உம்முடைய முட்டாள்தனங்களின் அகல, ஆழ, உயரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

தொடரட்டும் உமது பணி...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மிக முக்கியமான பதிவு "தீமைக்கு யார் காரணம்?" என்பது. புதிதாக வந்தவர்கள் கவனத்திற்காக,

நன்றி!!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்தப்பதிவுக்கு விளக்கமளிக்கத் துப்பில்லாமல் இரண்டு ஊழியக்காரர்கள் துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார்கள் என்பது இப்பகுதியை முழுவதும் படித்தவர்கள் அறிந்து கொள்வார்கள். வசனத்துக்கு பதிலளிக்காமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு சாட்டையடியாக சற்றுக் காரமாக வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன். மாயக்காரனே, பிசாசின் மகனே, விரியன் பாம்புக்குட்டிகளெ என்று வேதத்திலும் அவ்வப்போது வசனத்தைப் புரட்டி பிழைப்பு நடத்தும் கூட்டத்தாரைக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

நடக்கும் எல்லா சம்பவங்களும் தேவனால் அனுமதிக்கப்பட்டவையே; அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று புற மார்க்கத்தார் இதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது தேவனுடைய சித்தமில்லாமல் உலகில் ஏதாவது ஒரு காரியம் நடந்தால் அவர் தேவன் என்ற தகுதியை உடனே இழந்து விடுவார். சகலமும் தேவ சித்தம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

பூமிக்கு வரப்போகும் கிறிஸ்துவின் ஆட்சியில் ஒருவர்கூட விடுபடாமல்(ஒருவனும் கெட்டுப்போகாமல்) நித்திய ஜீவனை அனுபவிக்கப்போகும் தேவதிட்டம் தேவ அன்பை வெளிப்படுத்துகிறதா அல்லது ஏதோ ஒரு சிறிய கூட்டத்தை பரலோகத்துக்கும் விட்டுப்போன கோடானு கோடி ஜனங்களை நரகம் என்று சொல்லக்கூடிய ஒரு கொடூரமான வேதனைக்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு மாபெரும் தோல்வியாளனாகச் சித்தரிக்கும் துர் உபதேசம் தேவ அன்பை விளக்குகிறதா என்பது தேவ அன்பில் இருக்கும் அனைவருக்கும் புரியும்.



-- Edited by soulsolution on Saturday 30th of April 2011 09:24:16 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்தப்பதிவின் வசனங்களின் சத்தியம் தாங்காமல் ஓடிப்போனவர்கள்,,,

பாவம் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 9
Date:

\\இந்தப்பதிவின் வசனங்களின் சத்தியம் தாங்காமல் ஓடிப்போனவர்கள்,,,

பாவம் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்...\\

 

SOUL SOLUTION TODAY :

 

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதக் குழந்தையையும், தேவன் நேரடியாகப் படைத்தார் என்பது தவறான கொள்கையாகும். எப்படியெனில் வேதாகமம் மறுக்கிற கருத்தை இவர்கள் ஆதரிக்கின்றனர். அப்படி ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்ப்து உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார். மாறாக "அவருடைய கிரியை உத்தமமானது" என்று வேதாகமம் விளம்புகிறது. (உபா 32:4). மனரீதியாகவும், உடல், ஒழுக்கரீதியாக குறைவுள்ள அங்ககீனங்களோ, பலவீனமோ, குறைபாடுள்ள எந்தப் பிறவியும் தேவனால் படைக்கப்பட்டதாய் இருக்க முடியாது. இவர்கள் பூரணமான ஆதாமின் விழுகைக்குப் பின்னால் பல காலமும், பல பாவங்களின் தொகுப்பினாலும் விபத்துகள் போல வந்து நேர்ந்த விபரீதப்பிறப்புகள். பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமை மட்டுமே தேவன் தனது பொறுப்பில் படைத்தார். தேவனே ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் பொறுப்பாளி என்பவர்கள், ஒவ்வொரு பிறவிக்கோளாருக்கும், அங்ககீனத்திற்கும், பைத்தியத்திற்கும் தேவனையே பொறுப்பாளியாக்குகிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து அங்கக் குறைபாடுகளையோ, புண்ணியமோ, பழியோ, கெட்ட பழக்கங்களையோ, நற்குணங்களையோ, திறமைகளையோ சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று வேதாகமும் அறிவியலும் சரியாக எடுத்துரைக்கின்றது.



__________________


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதை முன் கூட்டியே எதிர்பார்த்தேன். சந்தோஷ் சகோதரருக்கு வாழ்த்துகள். இது வேதத்தை புரிந்துகொள்ளும் முன்னேற்றத்தைச் சார்ந்த விஷயம். மேலும் சகலமும் தேவ சித்தம் என்ற வேதத்தின் நிலைப்பாட்டிற்கு இப்பதிவு எதிராக இருப்பதால் அப்போதைய இந்தப் பதிவு தவறென்று பொறுப்பேற்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. 

 பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து அங்கக் குறைபாடுகளையோ, புண்ணியமோ, பழியோ, கெட்ட பழக்கங்களையோ, நற்குணங்களையோ, திறமைகளையோ சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று வேதாகமும் அறிவியலும் சரியாக எடுத்துரைக்கின்றது. என்றாலும் இவையனைத்தும் தேவனால் தீர்மானிக்கப்பட்டவையாகும். 

இதைப் புரிந்து கொள்ள அதிக நேரமும் வேத ஆராய்ச்சியும் தேவைப்பட்டது. 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard