" என் மகனே என் வார்த்தைகளைக்கவனி, என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு, அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்."
( நீதி. 4:20 22 )
உடலின் பேரில் நம்முடைய சிந்தனை எவ்வள்வாக இருக்க வேண்டும் என்று ஒரு சிலரே புரிந்து கொள்கின்றனர்.
தேவன் நாம் சுத்த இருதயமுள்ளவர்களாகவும், பெருந்தன்மையும், பரிசுத்த சிந்தை உடையவர்களாகவும் இருக்க விரும்புகிறார்.
இவைகள் நம் சரீரத்தை காத்துக்கொள்ளும்.
இதற்கு மாறாக அவர் வார்த்தைகளை கவனியாமலும், செவிகொடாமலும் இருப்பவர்கள் தங்கள் சரீரத்தை அழிவுக்கு ஒப்புக் கொடுத்து சகல துர் இச்சைகளால் நிறைந்திருப்பார்கள். இவைகள் மரணத்துக்கேதுவாக இவர்களை வழி நடத்தும்.
தேவனுடைய வார்த்தையோ ஞானத்தைப் போதித்து, அறிவை உணர்த்தும். அவருடைய வார்த்தைகளுக்கு செவி கொடுப்போருக்கு தம்முடைய வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.