kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Daily Manna 02/02/2010


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
Daily Manna 02/02/2010


" மாமிசத்தின்படி பிழைத்தால் சாவீர்கள். "  ( ரோம. 8: 13 )

 மாமிசத்தின்படி பிழைப்பதென்றால் என்ன ? 

இது விழுந்துபோன மனுஷனுடைய வழிகளைப் பின்பற்றி, உலக ஆசாபாசங்களுக்கும், இச்சைகளுக்கும் தங்கள் வழிகளை உட்படுத்தி ஜீவிப்பதாகும்.

இது மிகவும் சுலபமானது.

புதிய ஜீவிகள் இப்படிப்பட்டவைகளுக்கு விலக்கப்பட்டவர்கள், பழைய மனுஷனை தரித்துப்போட்டுத் தங்கள் உள்ளத்திலே புதிதான சிந்தை உடையவர்களாக சிருஷ்டிக்கப்பட்டவர்கள்.

மேற்சொன்னவைகளுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.

இல்லையேல் சிறிது சிறிதாக இவர்கள் இழுக்கப்பட்டு இச்சை என்னும் ஆற்றிலே இழுத்துச் செல்லப்படுவார்கள்.

பின்னர் அதினின்று இவர்கள் வெளியேறுவது மிகக்கடினமானது.

மாமிசத்துக்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினால் அழிவை அறுப்பான். ஆவியினால் நடத்தப்படுவோமேயானால் நாம் மாமிச இச்சைகளுக்கு நீங்கலாயிருப்போம்.

நமக்கு முன் வைத்துள்ள பந்தயப்பொருளை எண்ணி இவ்வுலக ஆசை, இச்சைகளை அற்பமாக எண்ணக்கடவோம். 

( 2 பேது. 2: 9 - 10,  கலா. 5: 16 - 17 )



__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜேய் அங்கிள்க்கு ஒரு வேண்டுக்கோள்,

தாங்கள் பதியும் அனுதின மண்ணா முந்திய நாள் இரவிலே அடுத்த நாளிற்கான மண்ணாவை பதிந்து விட்டீர்களானால், அதிகாலையில் நம் தளத்திற்கு வருகை தருபவர்கள் வாசித்து பயன் பெற உதவியாக இருக்குமே.

தொடர்ந்து பதிய வாழ்த்துக்கள்.

அன்புடன்
தள நிர்வாகி



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 107
Date:

My desire ia also the same. Since I am staying away from my home ( for a short while) I am unable to abide by your request immediately. Will be able to do in a short while. Kindly bear with me please.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard