" நீங்கள் வலது புறமாய்ச் சாயும் போதும், இடது புறமாய்ச் சாயும் போதும் வழி இதுவே. இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். " ( எசா. 30:21 )
நம் அனுதின வாழ்க்கையில் அனேக சூழ்நிலைகள் நமக்கு ஏற்படக்கூடும்.
இந்நிலையில் நாம் ஓர் உச்ச நிலையை அடையும் போது பல வழிகளில் நம்மைக்கலங்கச்செய்யும்.
எப்பக்கம் நாம் செல்ல வேண்டும் என்றும், எதைச் செய்ய வேண்டும் என்றும் நாம் திகைக்கும் போது நாம் சற்று ஜெபித்து தேவன் நமக்கு காட்டும் வழிக்காகக் காத்திருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தைகள் இச்சந்தர்ப்பங்களில் நமக்கு அருளப்படும்.
இக்காரியத்தை நாம் எவ்விதம் மேற்கொள்ளவேண்டும் என்பதைத் தேவன் நமக்குப் போதிப்பார்.