kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Jehowah Witness or Bible Students!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Jehowah Witness or Bible Students!!


வேத மாணவர்களின் வரலாறு

 

வேத மாணவர்கள் அமைப்பு 1860ல் அமேரிக்காவில் ஆலிகெனி என்கிற இடத்தில் தொடங்கியது. தேவனின் பொக்கிஷம் நிறைந்த வார்த்தைகளை கூட்டாக சேர்ந்து ஆராயும் படி முப்பரான பாஸ்டர் சார்லஸ் தேஸ் ரஸல் தலைமையில் கூடியது.

 

அப்படி என்றால் ரஸல் தான் யெகோவா சாட்சிகள் என்கிறா அமைப்பை தொடங்கி வைத்தவரா?

 

இது ஒரு த‌வ‌றான‌ புரிந்துக்கொள்ளுத‌ல். பாஸ்ட‌ர் ர‌ஸ‌ல் என்ப‌வ‌ர், உல‌க‌ வேதாகம‌ மாண‌வ‌ர்க‌ள் ஐக்கிய‌த்தை தொட‌ங்கிவைத்த‌வ‌ர் ஆவார். இந்த‌ ஒரு சிறிய‌ அமைப்புத்தான் "வாட்ச் ட‌வ‌ர் அன்ட் ட்ராக்ட் சொசைட்டி" என்கிற ப‌ததிரிக்கை வெளியிட்ட‌து.

 

இந்த‌ அமைப்பு தான் வேதாக‌ம‌ மாண‌வ‌ர் ச‌ம்மேல‌ன‌ங்களை ந‌ட‌த்திய‌து, ஆனால் எந்த‌ வித‌த்திலும் எந்த‌ ஒரு விசுவாச‌ பிர‌மான‌ங்க‌ளோ அல்ல‌து வேறு ச‌ட்ட‌ங்க‌ளோ போட்டு, கொடுக்க‌வில்லை.

 

பாஸ்ட‌ர் ர‌ஸ‌லின் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு, "வாட்ச் ட‌வ‌ர் அன்ட் ட்ராக்ட் சொசைட்டி" என்கிற‌ இந்த‌ அமைப்பு சுதந்திரமாக இருந்த வேத மாணவர்களை சில ச‌ட்ட‌ங்க‌ளுக்கு கீழ்ப‌டிய‌ சொன்ன‌து. அநேக‌ர் த‌ங்க‌ளின் கிறிஸ்த‌வ‌ சுத‌ந்திர‌த்தை விட்டுக்கொடுக்க‌ ம‌றுத்து, இந்த அமைப்பிலிருந்து வெளியேறினார்க‌ள். 1917ன்  தொட‌க்க‌த்தில், பாஸ்டர் ரஸலுடன் சேர்ந்து வேதத்தை கற்றவர்கள் இந்த‌ அமைப்பிலிருந்து வெளியேறி "Associated Bible Students" என்கிற‌ ஒரு அமைப்பை உருவாக்கினார்க‌ள்.

 

1930ல் பெரும்பாலுமான‌ வேதாக‌ம‌ மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ அமைப்பை விட்டு வெளியேறி விட்டார்க‌ள். 1931ல் மீத‌ம் இருந்த‌வ‌ர்க‌ள் திரு ரூத‌ர்ஃபோர்டு என்கிற‌ ஒரு வ‌ழ‌க்க‌றிஞ‌ரின் த‌லைமையில் "யெகோவா சாட்சிக‌ள்" என்று த‌ங்க‌ளை அழைத்துக் கொண்டார்க‌ள்.

 

வேதாகம மாணவர்களுக்கும், யெகோவா சாட்சிகளுக்கும் ஒரு சில கருத்துக்களின் ஒற்றுமையை தவிர‌ எல்லா வ‌ற்றிலும் வித்தியாச‌ம் இருக்கிற‌து.ஒற்றுமைக‌ள்:

 

இருவருமே இரு விதமான இரட்சிப்பு, அதாவது, ஒன்று பரலோகம், மற்றொன்று பூமிக்குரியது என்பதை விசுவசிப்பவர்கல். இருவருமே, தேவனின் ராஜியம் இந்த பூமியில் வரும் போது, பூமி தன் முந்தய சீருக்கு திரும்பும் என்று. இருவ்ருமே, "அக்கினி நரகமும் அதில் என்றென்றும் எரியும் ஆத்துமாக்கள்" என்கிற தத்துவத்தை நம்புவதில்லை. இருவருமே "திருத்துவம்" என்கிற வேதத்தில் இல்லாத ஒரு கோட்பாட்டை விசுவசிப்பதில்லை. இந்த சில ஒற்றுமைகளை தவிர இருவருமே வேற் வேற திசைகள் தான்.

 

இந்த‌ க‌ருத்துக்க‌ளை எழுதுவ‌தினால் நான் ஒரு யெகோவா சாட்சி அல்ல‌து ஒரு வேதாக‌ம் மாண‌வ‌ர் என்கிற‌ அமைப்பை சேர்ந்த‌வ‌ன் என்று த‌ப்பு க‌ண‌க்கௌ போட்டு விடாதீர்க‌ள்.

இவ‌ர்க‌ள் இருவ‌ருமே ஒன்று தான், வேதாக‌ம‌ மாண‌வ‌ர்க‌ள் தான் யெகோவா சாட்சிக‌ள் என்று அநியாய‌த்திற்கு இந்த‌ த‌ள‌த்தை குறித்து ம‌ற்ற‌ சில‌ த‌ள‌ங்க‌ளில் இல‌வ‌ச‌ பிர‌ச்சார‌ம் செய்து த‌ங்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை குள‌ர‌ வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்கு விவாதிக்க‌ விஷ‌ய‌ம் இல்லை போல், ஆக‌வே என்னை சீண்டுகிறார்க‌ள். எல்லா ம‌றைபொருளும் ஒரு நாள் வெளிச்ச‌மாகும். அப்ப‌டியே கால‌ம் நிறைவேரும் போது அவ‌ர்க‌ளும் இதை தெரிந்துக்கொள்ள‌ட்டும்.

 

நான் இந்த இரு அமைப்புக‌ளை சேராத‌வ‌ன் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னை விவாதிப்பார்க‌ள் ந‌ம்புவ‌த‌ற்கு அல்ல‌, இத‌ன் பின்னாவ‌து, அவ‌ர்க‌ள் எந்த‌ நோக்க‌த்திற்காக‌ த‌ள‌ங்க‌ளை துவ‌ங்கி இருக்கிறார்க‌ளோ, அதை தொட‌ர்ந்து செய்ய‌ட்டும் என்ப‌தால் தான்.என‌க்கும் வேதாக‌ம‌ மாண‌வ‌ர்க‌ளுக்கும் நிச்ச‌ய‌மாக‌ க‌ருத்து வேறு பாடுக‌ள் இருக்கிற‌து, ஒரு சிறிய‌ அள‌வில்.

 

ஆனால் இன்று புற்றீச‌ல் போல் ச‌பைக‌ளை தொட‌ங்கி, தேவ‌ன் இதை சொன்னார், தேவ‌ன் என்னிட‌ம் பேசினார், தேவ‌ன் அதை சொன்ன‌ர், தேவ‌ன் என்னிட‌ம் மாத்திர‌மே இதை தெரிவித்தார், தேவ‌ன் என்னை மாத்திர‌ம் ப‌ர‌லோக‌ம் கூட்டி சென்றார், தேவ‌ன் என்னை மாத்திர‌ம் ந‌ர‌க‌ம் கூட்டி சென்றார், என்று தங்களின் மேன்மைக்காக சொல்லி வ‌ருப‌வ‌ர்க‌ளை காட்டிலும், இந்த‌ வேத‌ மாண‌வ‌ர்க‌ள் இருக்கிற‌ இட‌ம் கூட‌ தெரியாம‌ல் எல்லாரிட‌மும் அன்பு உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள், இது எத்துனை பெரிய‌ காரிய‌ம்.

 

இந்த‌ பூமிக்குரிய‌ ச‌பைக‌ளும் அதை ந‌ட‌த்தும் ஆவிக்குரிய‌(!?) பாஸ்ட‌ர்க‌ள் தான் த‌ங்க‌ளை ப‌ர‌லோக‌ம் கூட்டி செல்ல‌ போகிறார்க‌ள் என்கிற‌ விசுவாசிக‌ள் (!?) கூட்ட‌ம் வேத‌த்தில் உள்ள‌ அநேக‌ரை போல் இருக்கிற‌து. அநேக‌ க‌ள்ள‌த்தீர்க்க‌த‌ரிசி, அநேக‌ர் வ‌ஞ்சிப்பார்க‌ள், அநேக‌ர் வ‌ஞ்சிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்கிற‌ வ‌ரிசையில் வ‌ரிந்துக்க‌ட்டி சேர்ந்துக் கொண்டிருக்கும் ஒரு "அநேக‌ர்" கூட்ட‌ம்!! இந்த‌ அநேக‌ர் நிறைந்த‌ கூட்ட‌த்தில் சில‌ த‌லைவ‌ர்க‌ள், த‌ங்க‌ளுக்கு நேர‌ம் போகாம‌ல் என்னையும், என் த‌ள‌த்தையும் விம‌ர்ச‌ன‌ம் செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள். இதில் வாய் கூசாம‌ல், தேவ‌ன் த‌ங்க‌ளிட‌ம் பேசினார்க‌ள் என்று வேத‌த்திற்கு புற‌ம்பான‌ தேவ‌ தூஷ‌ன‌ம் செய்ய‌ துனிந்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள். ப‌ரிசுத்த‌ம் இல்லாத‌வ‌ன் தேவ‌னை த‌ரிசிக்க‌ முடியாது என்று வேத‌ம் சொல்லுகிற‌து, அப்ப‌டி என்றால், இவ‌ர்க‌ள் எல்லாம்  வாழ்ந்துக்கொண்டிருக்கும் அப்ப‌டி ப‌ட்ட‌ ப‌ரிசுத்த‌வான்க‌ளா!? மேலும் தேவ‌னை ஒரு போதும் ஒருவ‌னும் க‌ண்ட‌தில்லை, இனி காண‌வும் முடியாது என்று வேத‌ம் சொன்னாலும் இவ‌ர்க‌ளை போன்றோர் பார்த்து பேசுவ‌து எந்த‌ தேவ‌னி என்று தான் தெரிய‌வில்லை, ஒரு வேளை "இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னோ"?

 

கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இப்ப‌டி தேவ‌னிட‌த்தில் அல்ல‌து தேவ‌ன் எங்க‌ளுட‌ன் பேசுகிறார் என்று நாங்க‌ள் ஒரு போதும் சொல்லுவ‌தில்லை, ச‌ற்றே சிந்தித்து பாருங்க‌ள், நீங்க‌ள்
எல்லோரும் ஒரே ஆவியில் இருப்ப‌தாக‌ வாரா வார‌ம் "ஆவியை புதிப்பித்து" கொண்டு வ‌ருகிறீர்க‌ளே, ச‌பையில் அனைவ‌ரும் ஒன்றாக‌ இருக்கீங்க‌ளே, அப்ப‌டி என்றால் உங்க‌ளை ந‌ட‌த்தும் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் பேசும் "தேவ‌ன்" உங்க‌ளிட‌த்தில் பேசுவ‌தில்லையா? வேத‌த்தை கைக‌ளில் வைத்தும் ஏன் இந்த‌ வ‌ஞ்சிப்போர் த‌லைமைக்கு த‌லை ஆட்டுகிறீர்க‌ள். வேத‌த்தை வைத்து ச‌த்திய‌த்தை தேடுங்க‌ள். த‌ங்க‌ளின் ஊழிய‌ர்க‌ளின் க‌ணிக‌ளை பார்த்து, அவ‌ரிட‌ம் தேவ‌ன் பேச‌ முடியுமா என்று பாருஙக‌ள். இப்ப‌டி தேவ‌ன் எல்லாரிட‌மும் பேச‌ வேண்டும் என்றால், வேத‌ம் தான் எத‌ற்கு? அதை ஓர‌மா வைத்து விட்டு இந்த‌ ந‌வீன‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் த‌ரிச‌ன‌ங்க‌ளையும், தேவ‌ன் அவ‌ர்க‌ளிட‌ம் பேசிய‌தை கேட்டாலே போதுமே!!

 

இனியும் இந்த‌ த‌ள‌த்திற்கு வ‌ருகை த‌ந்து பின்பு சொந்த‌மாக‌ த‌ள‌ம் தொட‌ங்கிய‌வ‌ர்க‌ள், உங்க‌ளிட‌ம் உங்க‌ள் தேவ‌ன் என்ன‌ பேசுகிறாரோ அதில் மாத்திர‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ள், என்னையோ என் த‌ள‌மான‌ truthseekersஐ ப‌ற்றி அநாக‌ரீக‌மாக‌ எழுதாதீர்க‌ள், அபாண்ட‌மாக‌ எழுதாதீர்க‌ள்.




-- Edited by bereans on Sunday 31st of January 2010 10:13:25 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 5
Date:

உங்கள் தரப்பை அழகாக- நன்றாகப் புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள்;
இதற்கு மேலும் தங்கள் மீது எந்த சந்தேகமும் எழாத வண்ணம் விவரமாகச் சொன்னதால் பலருக்கும் தற்போது நல்ல பாடம் கிடைத்திருக்கும்; உங்களோடு வாதாட முடியாமல் சென்று விட்டவர்களைக் குறித்து பேசி நீங்களும் உங்களைத தாழ்த்திக் கொள்ளவேண்டுமா?

நரகத்துக்கு போறவங்க போகட்டும்,
பாதாளத்துக்குப் போறவங்களும் போகட்டும்,
ஏழு வானமேறி பரலோகம் போறவங்களும் போகட்டும்;

இவங்கள நம்பி கெட்டவங்களுக்கும் சேர்த்துதானே இயேசு வரப்போறாரு?
அவரு தான் ஒருவரும் கெட்டுப்போகாம இருக்க நித்திய ஜீவனைக் கொடுக்கப்போறாரே,சிறு மந்தையான நமக்கு என்ன கவலை..?

திருந்தி கெட்டுப்போனவங்கள விட
திருந்தாமலிருந்து மீட்கப்படுவோர் பாக்கியவான்கள்;
ஏனெனில் ஒருவன் பாவத்திலிருப்பதற்கு அவன் காரணமல்ல என்கிறீர்கள்' சரிதானே..?




__________________
Iyer


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Glady அவர்களே,

 

தங்கள் பதிவிற்கு நன்றி. தாங்கள் யார் என்று எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முன்பே வேற் ஒரு தளத்தில் தங்களின் மற்றோரு பெயரில் எழுதியதை நீக்கிய போது தாங்கள் இந்த பெயரில் எழுதுவதை என்னிடத்திலே சொல்லி இருக்கிறீர்கள். இப்பவும் நீங்கள் எந்த தளத்தில் சேர்ந்த போதே அதை அறிந்துக்கொண்டேன். தங்களின் பதிவுகளின் வரிகள் தாங்கள் யார் என்று காட்டி கொடுத்து விடுகிறது.

 

தேவன் தங்களிடம் பேசுவதை தாங்கள் தொடங்கி இருக்கும் தளத்தில் எழுதி தள்ளுங்கள். நான் எப்படியோ, அப்படியே இருந்து விட்டு போகிறேன். என் விசுவாசம் எனக்கு என் தேவனாகிய யெகோவாவும் அவரின் ஒரே பெயரான இயேசு கிறிஸ்துவுமே அவர்களின் வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்திலிருந்து கொடுத்தது தான். அவர்களின் ஆவியை கொண்டு அதை உறுதியும் படுத்தியிருக்கிறார்கள்.

 

அவர் அனைவரையும் இரட்சிக்க வல்லவர் என்று வேதம்சொல்லுவது இன்று உங்க‌ளை போன்றோருக்கு விசுவாசிக்க‌ க‌டின‌மாக‌ தான் இருக்கும், "நீங்க‌ள் சாக‌வே சாவ‌தில்லை" என்று சொன்ன‌வ‌ன் தானே இன்றும் ச‌பைக‌ளை ந‌ட‌த்தி வ‌ருகிறான். அப்ப‌டியே தான் தேவ‌ன் "ந‌ம் எல்லோரையும் இர‌ட்சிக்க‌ வ‌ல்ல‌வ‌ராக‌" இருக்கிறார் என்று சொன்னாலும், அவ‌ன் "இல்லை இல்லை, அது எப்ப‌டி முடியும், நீயும் நீ செய்கிற‌ ஊழிய‌மும், நீ செய்கிற‌ கிரியைக‌ளையும் ந‌ம்பி தான் தேவ‌ன் இருக்கிறார், ஒரு சின்ன‌ கூட்ட‌ம் இப்ப‌டி தான் பொய் சொல்லி கொண்டிருக்கும், அதை எல்லாம் ந‌ம்ப‌ வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு வ‌ருகிறான், அதை தானே இன்று ஊழிய‌ர்க‌ள் என‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளை மேன்மை ப‌டுத்தி த‌ங்க‌ளிட‌ம் தேவ‌ன் பேசுவ‌தாக‌ சொல்லிக் கொண்டு தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிக்க‌ முடியாது என்கிற‌ தேவ‌ தூஷ‌ன‌ம் செய்ய‌ துனிந்திருக்கிறார்க‌ள்

 

ச‌ரி இது எல்லாம் சொன்னாலும் உங்க‌ளுக்கு புரியாது. தங்க‌ள் போன்றோரின் க‌ருத்துக‌ளுக்கு புதிதாக‌ இர‌ண்டு த‌ள‌ங்க‌ள் ஆர‌ம்பித்திருக்கிறார்க‌ள், அங்கே த‌ங்க‌ளை "ச‌கோத‌ர‌ர்" என்று அழைத்த‌தையும் அறிவேன், அதை தாங்க‌ள் ஆமோதித்த‌தையும் அறிவேன். த‌ய‌வு செய்து இங்கே ஒரு சிறு கூட்ட‌மே வ‌ந்து ப‌டித்து ப‌ய‌ன் பெற‌ட்டும். நாங்க‌ள் நாங்க‌ளாக‌வும், நீங்க‌ள் நீங்க‌ளாக‌வும் இருந்து விடுங்க‌ள். ந‌ன்றி



-- Edited by bereans on Sunday 31st of January 2010 10:21:15 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"யெகோவா சாட்சிகளின்" திருவிளையாடல்கள்..!"யொவன ஜனம்" என்கிற ஒரு தளத்தில் நம் தளத்தையும், தனிப்பட்ட என்னையும் தாங்கள் வழிப்படும் தேவனின் ஆவியில் நிறைந்து விமர்சனம் செய்திருப்பதை படித்து விட்டு, இவர் எந்த ஆவியில் இதை எல்லாம் எழுதி இருக்க முடியும் என்று அந்த தளத்தின் அன்பர்களும், இங்கு வாசிப்பவர்களும் தெரிந்துக்கொள்ளாம். ஒரு ஊழியக்காரர் என்று தன்னை சொல்லிக்கொண்டு வருபவர் எழுதும் வார்த்தைகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருக்கிறேன். "அவர்களின் கணியை பார்த்து அவர்களை அறிந்துக்கொள்ளுங்கள்".:


--------------------------------------------------------------------------------
 


"சத்தியத்தைத் தேடுவோர்" (truthseekers) என்ற பொதுவான பெயரில் சிலர் கிறிஸ்தவர்களைப் போன்ற வேடத்தில் நம்மிடையே உலா வருகிறார்கள்; அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல;

கைப்பிரதியின் மூலமும் புத்தகங்கள் மூலமும் பத்திரிகையின் மூலமும் தொலைக்காட்சி மூலமும்  நம்மை சந்தித்த காலம் போய் தற்போது நவீன வசதிகள் காரணமாக இணைய தளத்திலும்- அதாவது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வேகமாகக் கிளை பரப்பி வருகிறார்கள்;

வீடுகள்தோறும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் ஆராதனைக்குப் புறப்படும் சமயமாகப் பார்த்து உள்ளே நுழைந்து விடுவார்கள்; ஒரு நாகரிகத்துக்காக நாம் அமர வைத்து பேசினால் போதும், தொடர்ந்து வந்து தொல்லை செய்வார்கள்;

ஏன் நீங்கள் கிறித்தவர்கள் வீட்டுக்கே வருகிறீர்கள், ஆண்டவரையறியாத வேறே மார்க்கத்தவர் வீடுகளுக்குச் செல்லலாமே என்றால் தங்களது முக்கிய ஆதாயப்பணியே (?!) கிறித்தவர்களிடத்தில் தான் என்பார்கள்;

தங்கள் முழு விசுவாசத்தையும் முதலிலேயே சொல்லிவிட்டால்- அதாவது பெரும்பான்மை கிறித்தவ சபையாரிடமிருந்து இவர்கள் எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டால் ஏற்கவோ, மறுத்துப் பேசவோ நமக்கு வாய்ப்பாக இருக்கும்;

ஆனால் அதிகமாக வேதத்தை வாசித்தறியாத- சபைப் போதகரையும், ஐக்கியத்தையும், ஜெப வாழ்க்கையையும் மட்டுமே சார்ந்திருக்கும் எண்ணற்ற அப்பாவிகளை தங்கள் மாயமான‌ போதகத்தினால் எளிதில் கவிழ்த்துப் போடுவார்கள்;

அதிலும் சபைப் போதகரிடம் மனத்தாங்கலாக இருக்கும் குடும்பங்கள் இவர்களுக்கு வெல்லக்கட்டியாக்கும்; போதகர் ஏதோ சில அசௌகரியங்கள் காரணமாக வீடு சந்திப்புக்கு வாராது போனாலோ தங்களைவிட மற்றொரு குடும்பத்தாரிடம் அதிக கரிசனை காட்டினாலோ சிலருடைய மனம் சபைப் போதகருக்கு விரோதமாகத் தாங்கலடையும்; அந்த இடைவெளியில் தான் இதுபோன்ற சாத்தானின் போதகங்கள் உள்ளே நுழையும்;

நான் அடிக்கடி மீனவனுடைய பார்வையிலிருந்து ஒரு காரியத்தை யோசிப்பதுண்டு; அதாவது ஒரு மீனவன் பாடுபட்டு வலைவீசி மீன்களைப் பிடித்து அவற்றைக் கரையில் கொண்டு சேர்ப்பதற்குள் மறுபுறம் அவை துள்ளிக் குதித்து மீண்டும் தண்ணீரில் விழுந்தால் எப்படியிருக்கும்?

அதைப் போலவே அந்தகாரத்தினின்று ஒரு ஆத்துமாவை படாதபட்டு மீட்டுக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது அவை தடுமாறி மீண்டும் விழுந்துவிடாமல் பாதுகாப்பது பெரும்பணியாக இருக்கிறது;

எனவே ஒரு ஊழியனுக்கு இருவித சுமையுண்டு; ஒன்று ஆத்தும ஆதாயம் செய்வது; இரண்டு அவை நிலைத்திருக்கப் போராடுவது; இரண்டுமே அதிகக் கடினமானப் பணியாகும்;

"சத்தியத்தைத் தேடுவோர்" எனும் தளத்திலிருந்து ஒரு தன்னிலை விளக்கக் கட்டுரையினை வெளியிட்டிருக்கிறார்கள்;

அதனைப் படித்ததும் உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்போதாவது வெளிப்படையாக தங்கள் வரலாற்றைச் சொல்ல முன்வந்தார்களே, என;

எனது விசுவாச வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் இதுபோன்ற வித்தியாசமான போதனைகளைக் கொண்ட பல்வேறு குழுக்களை சந்திக்கும்போது நான் அவர்களிடம் கேட்ட முதல் கேள்வியே, நீங்கள் எந்த வகையில் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறீர்கள் என்பதே;

இதுபோன்ற துருபதேசக்காரர்களை அதாவது வித்தியாசமானவற்றையே போதித்து வாக்குவாதங்களைப் பற்றிய நோய் கொண்டவர்களை விட்டு வேகமாக விலகிச் செல்வதே பெரும்பாலான கிறித்தவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது; காரணம் இருப்பதைத் தக்கவைத்துக் கொள்ளும் சுயநலமாக இருக்கலாம்; ஆனால் எந்த ஒரு தீமையான காரியத்தையும் விட்டு விலகி ஓடுவது வேதத்தின் அடிப்படை சத்தியமாக இருந்தாலும் ஆவியானவருடைய உதவியுடன் எல்லா ஆவிகளையும் சோதித்தறிந்து அவற்றைக் குறித்து மற்றவரை எச்சரிப்பதும் நம்முடைய பணியாக இருக்கிறது;

உலகத்தார் மதநல்லிணக்கம் என்று பேசுகிறார்களே அதுபோன்ற வழிமுறை நமக்கு உதவாது; விரோதியை மன்னிப்பேன், துரோகியை மன்னிக்கமாட்டேன்; நெஞ்சிலே குத்துபவனை ஏற்றுக்கொள்ளுவேன், முதுகில் குத்துபவனை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்பார்களே அதுபோலவே இவர்களை அணுகவேண்டும்;

விசுவாசத்தில்- வேதவாசிப்பில்- பரிசுத்தத்தில் மந்தமாக இருப்பவ்ர்களிடம் பொறுமையாகவே இருக்கவேண்டும்; தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத் தக்கதாக காத்திருந்து ஜெபிக்கவேண்டும் என்பது சரியே; ஆனால் விசுவாச துரோகத்தினைப் போதிப்பவர்களைக் குறித்து ஆய்ந்தறிந்து ஏனையோரை எச்சரிப்பது நம்முடைய கடமையாகும்;

ஏனெனில் இந்து, முஸ்லிம் போன்ற வேற்று மார்க்கத்தவரை நம்மால் எளிதில் அடையாளம் காணமுடியும்; ஆனால் இதுபோன்ற ஓநாய்களை அடையாளம் காண்பது கடினம்; ஏனெனில் அவை தம்மை "ஆடுகள்" என்றும் மற்ற ஊழியர்களையும் சபை அமைப்புகளையும் "ஓநாய் கூட்டம்" என்றும் "பாபிலோன் வேசிமார்க்கத்தார்" என்றும் வசைபாடிக் கொண்டிருப்பதே வேடிக்கை;

அவர்கள் சத்தியத்தை (எந்த சத்தியமோ..?) வாஞ்சித்து நாடி கண்டுபிடித்துவிட்ட சிறுமந்தையாம்; சத்தானதைப் பிடித்து உண்ணும் கழுகுக் கூட்டமாம்; பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும் என்ற் ஆண்டவரது செய்திக்கு இவர்கள் தரும் புது விளக்கம் இது;

கட‌ந்த இரண்டு நூற்றாண்டுகளிலேயே ஆயிரக்கணக்கான சிறுசிறு குழுக்கள் புற்றீசலைப் போலப் புறப்பட்டன; கடந்த நூற்றாண்டில் கூட இத்தனை குழப்பங்கள் இருந்திருக்காது; ஆனால் தற்போதோ சரியானதைத் தேர்ந்தெடுக்க அதிகப் பிரயாசம் தேவைப்படுகிறது;

நான் பெற்றுக்கொண்ட விசேஷித்த தேவகிருபையினால் மார்க்க பேதங்களைக் குறித்த தெளிவான பார்வையையும் விசாலமான மனதுடன் கூடிய கண்ணோட்டத்தில் நிதானமாக ஆராயும் பக்குவத்தினையும் அடைந்தேன் அல்லது அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்;

அதன்படி நான் சுட்டிக்காட்டி எச்சரிக்கக்கூடிய துருபதேசங்கள் பல இருந்தாலும் நான் கடந்த சுமார் பத்து வருடங்களாக அதிகமாகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு குழுவைக் குறித்து அறிமுகப்படுத்தி விரிவாக எச்சரிக்க விரும்புகிறேன்;

அடுத்து நான் எதிர்த்துப் போராட முடிவு செய்துள்ள முக்கியக் குழுவானது, கள்ளத்தீர்க்கதரிசியான ப்ரன்ஹாம் மற்றும் அவர்களுடைய தற்போதய சூழ்ச்சிகள்; நான் இவர்களுடன் அதிகம் வாதித்து சோர்ந்துபோனேன்; மேற்கொள்ள முடியாததாலோ தோற்றுப்போனதாலோ அல்ல,இவர்களை எந்த வகையிலும் மீட்க முடியாதவண்ணம் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர்;

முதலாவது அவர்களுடைய தோற்ற வரலாற்றை விவரிக்கும்
அவர்களது தொடுப்பைக் கொடுத்துள்ளேன்; அதில் அவர்கள் ஏதேனும் திருத்தம் செய்தால் எனது சேமிப்பிலிருந்து சரியானதை எடுத்து பதிப்பேன்;

இது வாதமுமல்ல, விவாதமுமல்ல; எச்சரிப்பு அவ்வளவுதான்;வாசகர்கள் தங்கள‌து அனுபவத்தையும் சந்தேகங்களையும் தாராளமாக பகிர்ந்துக் கொள்ளலாம்; அவர்கள் தங்கள் தளத்தில் எழுதியுள்ள துருபதேசங்களுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாது ஆங்கில தளத்திலிருந்தும் ஆதாரங்களை மொழிபெயர்த்து பதிப்போம்; இங்கு அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் உள்ளே நுழையவிடமாட்டோம்; அவர்கள் தளத்திலும் நமக்கு எந்த வேலையுமில்லை; சாத்தானிடம் வேதம் கற்கவேண்டிய அவசியம் நமக்கில்லைதானே..?

மேற்கண்ட தொடுப்பில் காணும் அவர்களது தோற்ற வரலாற்றையும் பிரிவுகளையும் தொடர்ந்து நமது தளத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு செய்துள்ள விமர்சனங்களுக்கும் இதுவரை பொதுவானதொரு பதிலை வெளியிட்டிருக்கிறேன்;

தொடர்ந்து...

// என‌க்கும் வேதாக‌ம‌ மாண‌வ‌ர்க‌ளுக்கும் நிச்ச‌ய‌மாக‌ க‌ருத்து வேறு பாடுக‌ள் இருக்கிற‌து, ஒரு சிறிய‌ அள‌வில் //

அப்படியானால் இவர் மூன்றாவது குழுவா?
மொத்தத்தில் சபை அமைப்புக்கு அடங்காதவர்கள்,சரிதானே?

இவர்கள் குழுவைச் சேர்ந்த ஒரு சகோதரன் வீட்டுக்கு அவரது குழந்தைக்கு பிறந்த நாளுக்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன்; உண்மையிலேயே பாவமாக இருந்தது; கடந்த 40 வருடத்துக்கும் மேலாக அவர்களுக்கு யாருடனும் தொடர்பில்லையாம்; இதனால் சொந்தங்களோ ஊழியர்களோ மற்ற சபையார் யாருமே வரவில்லை; மனைவியும் பிள்ளைகளும் வீட்டின் வறுமையான சூழ்நிலை காரணமாக சோர்ந்திருந்தார்கள்;

ஆனால் இந்த சகோதரன் உற்சாகமாகவே இருந்தார்; பழக்கதோஷத்தில் எனக்குக் காணிக்கைக் கொடுக்கவந்தார்; நான் வைராக்கியத்துடன் வாங்க மறுத்துவிட்டேன்; அவருடைய பெயர் தேவக்கண்; தேவைப்பட்டால் அவருடைய புகைப்படத்தையும் இங்கே பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்; அவர் மூலமே இவர்களுக்கிடையே பிரிவுகள் போட்டிகள் பொறாமைகள் எல்லாம தெரியவந்தது; இவர்களுடைய பிரிவினைக்கு முக்கியக் காரணமாக இருப்பது வழக்கம்போல பணமும் சொத்துக்களும் பாகப்பிரிவினையுமே, சத்தியமல்ல..!

// வேத‌ மாண‌வ‌ர்க‌ள் இருக்கிற‌ இட‌ம் கூட‌ தெரியாம‌ல் எல்லாரிட‌மும் அன்பு உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்கள் //

ஏன்,ஜைனர்கள்,சீக்கியர்கள்,இஸ்லாமியர் என்று எல்லா மார்க்கத்திலும் சன்மார்க்கர் இருக்கிறார்கள்; இவர்கள் குழுவில் ஒரு முக்கியத் தலைவர் தான் பெறும் வெளிநாட்டு பணத்தினை தன் குழுவிலுள்ள வஞ்சிக்கப்பட்ட ஆடுகளுக்கு வட்டிக்கு விட்டு அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்; அந்த குழுவும் ஒரு பெண் விவகாரத்தில் தற்போது ரெண்டாக‌ உடைந்துவிட்டது;

தரிசனங்களையும் சொப்பனங்களையும் குறித்து வேதம் அதிகமாகவே பேசுகிறது;அவற்றை அதிகம் தியானிப்போரின் ஆழ்மனதில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவோ அல்லது தேவ தீர்மானத்தின் படியோ தங்களிடம் வரும் மக்களை சத்திய வசனத்தின்படி போதித்து எச்சரிப்பது தவறே இல்லை;அவர்கள் துணிகரமாகப் பொய் சொன்னாலும் விளைவை கவனிக்கவும்) நியாயந்தீர்க்கப்போவது தேவனே;உனக்கு அதைக் குறித்து கருத்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த எந்த அருகதையுமில்லை;

காண்கிற வசனத்தையே தந்திரமாக புரட்டி மொழிபெயர்ப்பு அது இது என பொய்யான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு ஜனங்களை வஞ்சிக்கும் உனக்கு மற்றவரை தூஷிக்க யார் அதிகாரம் கொடுத்தது?

நான் பணம் கொடுத்து அமர்த்திக் கொண்ட ஒரு சேவையாளர் எனக்கு தரக்குறைவான சேவை செய்வாரானால் நான் நிச்சயமாகவே போராடுவேன்; நான் ஒருக்காலும் ஏறியிராத விமானத்திலுள்ள தரக்குறைவான சேவையைக் கண்டிக்க எனக்கு எந்த தார்மீக உரிமையுமில்லையென்று எண்ணுகிறேன்;

ஊழிய நிறுவனங்களும் கூட அதுபோல சுயசார்பும் சுதந்தரமும் கொண்ட‌ தன்னார்வ அமைப்புகளாக விளங்குகிறது; அவற்றை நம்புபவர்கள் அவர்களது சேவையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்; போலியானது சீக்கிரமே அழிந்துவிடும் என்பது வேதத்தின் நடைமுறையாகும்;

// த‌ங்க‌ளுக்கு நேர‌ம் போகாம‌ல் என்னையும், என் த‌ள‌த்தையும் விம‌ர்ச‌ன‌ம் செய்துக்கொண்டிருக்கிறார்கள் //

ஐயோ பாவம், இவர்களுக்கு சாவுமணி அடிக்க நான் கூட வராவிட்டால் யார் வருவார் என்றே எனது பொன்னான நேரத்தை இங்கே செல‌விடுகிறேன்; இதுவே ரொம்ப லேட்,ஆமா..!

// உங்க‌ளை ந‌ட‌த்தும் த‌லைவ‌ர்க‌ளிட‌ம் பேசும் "தேவ‌ன்" உங்க‌ளிட‌த்தில் பேசுவ‌தில்லையா? //

மேய்ப்பனும் மந்தையும் என்பது வேதத்தின் நடைமுறையாகும் (பேதுரு,பவுல்,தீமோத்தேயு...நிருபங்கள்..!) ஒங்க புள்ளிங்களுக்கு இஸ்கோல் புஸ்தகத்த எல்லாம் வாங்கி குடுத்துட்டு வூட்லயே வெச்சுக்கலாமே,எதுக்கு இஸ்கோலுக்கு அனுப்புறீங்கோண்ணா..?

// இனியும் இந்த‌ த‌ள‌த்திற்கு வ‌ருகை த‌ந்து பின்பு சொந்த‌மாக‌ த‌ள‌ம் தொட‌ங்கிய‌வ‌ர்க‌ள், உங்க‌ளிட‌ம் உங்க‌ள் தேவ‌ன் என்ன‌ பேசுகிறாரோ அதில் மாத்திர‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ள், என்னையோ என் த‌ள‌மான‌ truthseekersஐ ப‌ற்றி அநாக‌ரீக‌மாக‌ எழுதாதீர்க‌ள், அபாண்ட‌மாக‌ எழுதாதீர்கள் //

அடடா...விட்டா ஒங்க தயவுலதான் எங்க வீட்டுல அடுப்பு எரியுதுன்னு சொல்வீங்க போலிருக்கே...ஒங்க க்ரூப் மொகத்திரையை கிழிக்கச் சொல்லியே ஆவியானவர் அனுப்பியிருக்காருங்ணா...அதான் மொத வேலயே...மத்ததுக்கெல்லாம் நெறய பெரியவங்க இருக்காங்க...

அப்புறம் அநாகரீகமா எழுதிறவங்களுக்கு தான் அதன் வேதனையும் வலியும் அதிகம் தெரியும் என்ற கொள்கையின்படி நீங்கள் ஊழியர்கள் செய்ததாகவும் செய்வதாக்வும் கூறும் அவதூறுகளை உங்கள் தளத்திலிருந்து நீக்கிவிட்டு பைபிள் மாத்திரம் படித்து சத்தியத்தினை மட்டும் உட்கார்ந்து தேடுங்க..தேடுங்க...தேடிக்கிட்டே இருங்க...எங்களுக்கு எந்த ஆட்சேபணையுமில்லை;அப்போதுதான் ஆரோக்கியமான விவாதம் துவங்கும்;மற்றபடி இதுவே தொடரும்..!


-- Edited by chillsam on Sunday 31st of January 2010 02:57:42 AM


__________________
"Taking care for every Soul through Counseling"


இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் தர எனக்கு அவசியம் இல்லை. இவரின் குணத்தை வெளிப்படுத்தும்படியாக தான் இந்த விமர்சனம் அமைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்னால் உள்ள பதிவின் மூலமாக ஒரு ஸ்த்ரியின் வேஷம் இட்டு நம் தளத்தில் வந்து சென்ற இவரை கண்டுபிடித்ததும் இந்த ஆவேசம். ஞாயிறு ஆறாத‌னை முடித்து வ‌ந்த‌ கைய்யுட‌ம் அதே ஆவியில் எழுதி த‌ள்ளிய‌ விம‌ர்ச‌ன‌ம் தான் இது.

இத்துட‌ன் விட்டு விடுவ‌து அவ‌ருக்கு ந‌ல்ல‌து என்று நான் நினைக்கிறேன். அவ‌ரை போல் என‌க்கு சாப‌ம் இட‌வோ, அல்லது சாவு மணி அடிக்கும் அள‌விற்கு துனிச்ச‌ல் இல்லை. அவ‌ர்க‌ள் வ‌ழிப்ப‌டும் தேவ‌னுக்கு வேண்டுமென்றால் அப்ப‌டி ஒரு என்ன‌ம் இருக்க‌லாம். என‌க்கு தெரிந்த‌தெல்ல‌ம், என் எஜ்மான‌னான‌ கிறிஸ்து ப‌ரிக‌சிக்க‌ப்ப‌ட்டார் என்றால், அவ‌ரை விசுவ‌சிக்கும் என‌க்கும் அதே நிலை தானே.

ந‌ன்றி.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலப்பட்டுச்சாம், வேசித்தனம் பண்ண இந்தத்தளத்தில் பொட்டப்புள்ள பேர் வச்சிட்டு வந்ததுலர்ந்தே இவனுக லட்சணம் தெரியுதே.

வேத அடிப்படைச் சத்தியமான மரணம், ஆத்துமா என்றால் என்னவென்று விளக்கத்துப்பில்லை. இந்த வேசிளோடு தேவன் பேசுகிறாராம். எந்த ஊழியனாவது மரணம் என்றால் என்னவென்று வேத அடிப்படையில் விளக்குகிறானா என்றால் ஒருவன் கூட கிடையாது. ஏதாவது பூசி, மழுப்பி குழப்புவார்களேதவிர புரியும்படி ஏதும் சொல்ல மாட்டார்கள். அவர்களுக்குப் புரிந்தால்தானே. அவர்கள் இப்பிரபஞ்சத்தின் தேவன் சொன்ன 'நீங்கள் சாகவே சாவதில்லை' என்ற மாபெரும் பொய்யைத்தான் இன்றுவரை சொல்லிவருகின்றனர். குழப்பத்தின் மொத்த உருவமே இவர்களது போலி சபை என்பதனால்தான் வேதமே 'சகல அருவருப்புகளுக்கும் தாய்' என்கிறது.

இந்த சுயநல மீனவர்கள் மீன் பிடிப்பது பொரித்து சாப்பிடவோ அல்லது அதை விற்று ஆதாயம் தேடவோதானேயன்றி மீனை வளர்த்து பாசம் காட்டவே அல்ல. இவர்கள் பிழைப்பே கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் அல்லது இவர்களால் மாற்றப்பட்டவர்களது சம்பாத்தியத்தில்தான். கிறிஸ்தவர்களல்லாத எத்தனை பேரிடம் இவர்கள்  எவ்வளவு நேரம்  செலவிடுகிறார்கள் என்பது அனவருக்கும் தெரிந்ததே. பிற ஊழியர்களைக் குற்றம் சொல்லியும், ரோமன் கத்தோலிக்கம், தென்னிந்தியத் திருச்சபை, லுத்தரன் உள்ளிட்ட மற்ற சபைகளை 'ஆவிக்குரிய' சபைகளே இல்லை என்று தங்களூக்குள் விவாதிக்கும் இவர்கள் தேவைப்பட்டால் அவர்களுடன் ஏதோ ஆதாயத்துக்காக உடன் ஊழியம் செய்யத் தயங்குவதில்லை. எந்த பாஸ்டருக்கு யாரோடு தொடர்பு உள்ளது என்பதெல்லாம் இவர்களது ஊழியத்தின் ஒரு பகுதி. தேவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்து வயிறுவளர்க்கும் இவர்கள் தேவைப்பட்டால் பணத்துக்காக வசனங்களைச் சொல்லி மிரட்டவும் தயங்கமாட்டார்கள்.

ஆத்தும ஆதாயம் செய்து தனது சபைக்கு கஸ்டமர்களை உருவாக்குவதும்,  மிரட்டி அவர்களைத் தனது சபையிலேயே தக்க வைப்பதற்குமே இவர்கள் பாடுபடுவார்கள். கஸ்டமர் போனால் வசூல் போகுமே.

வேதம்வாசிக்காத அரைகுறைக் கிறிஸ்தவர்களே பெரும்பாலும் இவர்களை ஊழியர்களாக அங்கீகரிப்பார்கள். ஏனென்றால் வேதம் வாசிப்பவர்கள் சந்தேகங்கள் கேட்பார்கள் ஆகவேதான் வேதத்தை ஆராயக்கூடாது (ஆராய்ந்தால்தான் இவர்கள் வண்டவாளங்கள் தெரிந்துவிடுமே) நாங்கள்தான் போதிக்கவேண்டும், நாங்கள் சொல்லும் போதகம்தான் சரி என்று வாதிடுவர்.

மேலும் ஒரே பாடத்திட்டமான ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு அவனவன் வேறு வேறு அர்த்தம் சொல்லிக்கொண்டு நான் சொல்வதுதான் சரி, நீ சொல்வது தவறு என்று சொல்லிவருவதால்தான் இன்றைக்கு ஆயிரக்கணக்கான இஸ்கோல்கள், என் இஸ்கோல்தான் சரி என்று வாதிடும் இந்த அறிவுகெட்ட  வாத்திமார்கள் அடுத்த இஸ்கோல் நல்லது இனி அந்த இஸ்கோலுக்கே போய்க்கோ என்று ஒரு விசுவாசியையும் சொல்லமாட்டார்கள்.

இந்து, முஸ்லிம் போன்ற வேற்று மார்க்கத்தாரை நாம் அறிந்துகொள்ளலாம், ஆனால் தங்களை தேவனால் வழிநடத்தப்படும் ஊழியக்காரன் என்று காண்பித்துக்கொள்ளும் இந்த ஓநாய்களுக்குத்தான் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி வேதம் போதிக்கிறது. கடந்த நூற்றாண்டில்கூட இத்தகைய குழப்பங்கள் அதிகம் இல்லை. ஏனென்றால் கடைசிக் காலத்தில்தான் இப்படிப்பட்ட வேசித்தனம் அதிக முனைப்புடன் நடக்கும் என்றுதான் அதைவிட்டு வெளியேறு என்று ஆண்டவர் கட்டளையிட்டுள்ளார். அநேகர்தான் வஞ்சிக்கப்படுவார்கள், 'சிலர்' அல்ல என்பதை இவர்கள் உணராததனால்தான் அநேகர் நம்புவதுதான் சரி என்று வாதிடுவர்.


இன்னும் முகத்திரையைக் கிழிப்பேன்.....



-- Edited by bereans on Sunday 31st of January 2010 04:18:19 PM

-- Edited by soulsolution on Sunday 31st of January 2010 09:55:52 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம் என்று வேதம் எதைப்போதிக்கிறது என்றே தெரியாத இந்த முட்டாள்களிடம் 'ஆவியானவர்' பேசுகிறாராம்.

இதில் இவர்கள் இஸ்கோல் நடத்துகிறார்களாம். கேட்டால் போதக ஊழியமாம். இவர்களுக்கெல்லாம் அடுத்தவன் சம்பாத்தியத்தில் வயிறுவளர்ப்பதாலோ என்னவோ (உழைகாமல் சாப்பிடும் சாப்பாடு) கொழுப்புச்சத்து அதிகமாகி புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.

இவர்கள் சொல்லும் புருடாக்களை நம்பி மோசம்போக 100பேர் இருந்தாலும் சத்தியத்தைத் தேடி சமாதானத்தைப்பெறும் 5 பேர் இருக்கத்தான் செய்வார்கள். எங்கள் நோக்கம் அந்த 5 பேர் சத்தியத்தைத் தெரிந்து கொள்ளட்டுமே என்பதுதான். அந்த 5 பேர் இத்தளத்தின்மூலம் பயனடைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது. இவர்கள் நோக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் கேட்பதுதான். அதற்குத்தான் இந்த ஆத்தும ஆதாயம், முழுநேர ஊழியப் போர்வையெல்லாம். அடுத்தவன் பணம் என்றால் வாயைப்பிளந்து கொண்டு திட்டம் தீட்டுவார்கள். பவுல் சொன்ன 'வேலை செய்யாவிட்டால் ஒருவன் சாப்பிடவுங்கூடாது' என்பது இவர்களைப் பொறுத்தவரை வேறு யாருக்கோ.

தங்கள் வேத அறிவைக் காண்பிக்க இவர்கள் பிடிப்பது அரைகுறை விசுவாசிகளைத்தான். எதிர்த்துக் கேள்விகேட்கும் யாரையும் இவர்களுக்குப் பிடிக்காது. இவர்கள் ஓசியில் வயிறுவளர்ப்பது போதாதென்று வாரிசுகளையும் அப்படியே சோம்பேறிகளாக வளர்ப்பார்கள். பரம்பரை ஊழியமாம். இந்த வெக்கங்கெட்ட  வேசிமார்க்கத்தாருக்கு காணிக்கை கொடுப்பதை மாத்திரம் நிறுத்திப்பாருங்களேன். இவர்கள் உண்மை நிலை புரியும். தேவன் எனக்குத்தருகிறார் என்று 'விசுவாச ஊழியம்' செய்யும் இவர்கள் கையேந்துவதோ மனிதர்களிடத்தில்தான்.

எவனொருவன் அடுத்தவன் பணத்தில், அடுத்தவர் உழைப்பில் திருடியே பிழைப்பு நடத்துகிறானோ அவனை நிச்சயம் வேசிமார்க்கமான மகாபாபிலோனியன் என்று புரிந்துகொள்ளலாம். இவர்களுக்கு எப்படித்தான் ஜீரணமாகிறதோ தெரியவில்லை. இவர்கள் சபை வளர்ப்பது தங்கள் வருமானத்தைப் பெருக்கத்தான். அதுவும் தன்னைவிட அதிகம் 'சம்பாதிக்கும்' சக பாபிலோனியனையும் பொறாமையினால் இவர்கள் தூஷிக்கத் தவறுவதில்லை.

இந்த முட்டாள்களுக்குப் போதிக்கும் இவர்களது 'ஆவியானவர்' ஏன் இவர்களது சபை விசுவாசிகளுக்குப் போதிப்பதில்லை?

ஒரே பைபிளை வைத்துக்கொண்டு வேறு வேறு உபதேசங்களை சொல்லிக்கொடுக்கும் 'கலை' இவர்களது. ஒரு இஸ்கோலில் தெளிப்பு ஸ்நானம், இன்னொன்றில் முழுக்கு ஸ்நானம். ஒரு இஸ்கோலில் நகை அணியலாம், இன்னொன்றில் கூடாது. ஒரு இஸ்கோலில் அந்நிய பாஷை உண்டு, இன்னொன்றில் இல்லை. கர்த்தருடைய பந்தியிலும் இதே நிலைதான், வாரமொருமுறை, மாதமொருமுறை, எப்போது வேண்டுமானாலும்.... என்று.

ஆண்டவரின் முதல்வருகையின் காரணமே தெரியாத அறிவாளிகள் இரண்டாம்வருகையைப் பற்றிவேறு பிரசங்கிப்பார்கள். தன்னுடைய கஸ்டமரான விசுவாசி 'தேவைக்குமேல்' வேதம் அறிந்துகொள்வதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள். முக்கியமாக தங்கள் சபை விசுவாசி வேறு சபைக்குப் போவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் இவர்கள் அற்புத சுகம் பற்றி பேசுவார்கள் தனக்கோ, குடும்பத்துக்கோ வியாதிவந்தால் உடனடியாக டாக்டரைத்தான் பார்ப்பார்கள்.

இன்னும் வரும்....


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்களது சிறிய ஊரில் இவர்களின் 30 "ஸ்கோல்" இருக்கிறது. ஒவ்வொன்றிலும் சராசரியாக 7 குடும்பங்கள் என்று வைத்து ஸ்கோல் நடத்தும் கூட்டத்தார். எங்கள் தெருவிலே 2 ஸ்கோல்களும், எங்கள் ஏரியாவில் சுமார் 7 "ஸ்கோல்" இருக்கிறது. இதிலிருந்து இரண்டு மூன்று வாத்தியார்களை தவிர மற்றவர்கள அனைவரும் "ஃபீஸை" நம்பி தான் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் இருக்கிறார்கள். கேட்டா, தேவன் தான் அவர்களை இப்படி எல்லம் செய்ய சொன்னாராம். ஒரே பாடம் தான் சொல்லி கொடுக்கிறோம் என்று சொன்னாலும் ஒருவர் "ஸ்கோல்" க்கு மற்றவர் தன் "ஸ்கோல்" மாணவர்களை அனுப்ப மாட்டாராம். ஆனால் இரண்டு இடங்களிலும் ஒரே போதனை தானாம். "இவன் என் ஆட்டை திருடிவிட்டான்" அவன் என் மந்தையை களைக்கிறான் என்கிற குற்றச்சாட்டுகள் வேறு எழும்பும்.

பெரிய சபைகளான கத்தோலிக்க சபை, தென் இந்திய திருச்சபை போன்றவற்றை சேர்த்து சுமார் 350 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கும் எங்கள் ஊரில் 30 சபைகள் என்றால் யோசிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் தானே.

இதில் "சுவிசேஷ‌ பெருவிழா" போன்ற‌வ‌ற்றை ந‌ட‌த்துவார்க‌ள் பார்க்க‌னும், குடுமி புடி ச‌ண்டை போடாத‌ குறை தான். இவ‌ர்க‌ளின் ஆவியான‌வ‌ர் இவ‌ர்க‌ளுக்கு இப்ப‌டி எல்லாம் போதிக்கிறார் போல்!! அந்த‌ ச‌ண்டையே வ‌ருகிற‌ வ‌ருமான‌த்தை பிரித்துக்கொள்வ‌திலோ, என்னை மேடை ஏற்ற‌வில்லை என்றோ, என‌க்கு மைக் கொடுக்க‌வில்லை என்றோ, என்னை முக்கிய‌ ப‌டுத்த‌வில்லை என்றோ போன்ற‌ ஆவியின் க‌னிக்கு ச‌ற்றும் பொருந்தாத‌ ப‌ன்புக‌ள் வெளிப்ப‌டும். இப்ப‌டி மாறுப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் "ஸ்கோலில்" ப‌டிக்கிற‌ மாண‌வ‌ர்க‌ளின் க‌தியை யோசித்து பாருங்க‌ள்!!

ஒரு வாத்தியார் த‌ன‌க்கு ச‌ரி வ‌ர‌ வ‌ருமான‌த்தை பிரித்து கொடுக்க‌வில்லை என்கிற‌ ஆத‌ங்க‌த்தில் த‌னியாக‌வே ஒரு "விழாவை" ந‌ட‌த்தி இங்கு உள்ள‌ வாத்தியார் போத‌வில்லை என்று வெளிநாட்டிலிருந்து இற‌க்கும‌தி செய்தார். அது ஒரு பெரிய‌ த‌மாஸ். அந்த‌ வெளிநாட்டு வாத்தியார் வ‌ந்த‌வுட‌ன், "என்னிட‌ம் தேவ‌ன் சொன்ன‌ காரிய‌ங்க‌ள் என்று தொட‌ங்கி, இன்று தேவ‌ன் இந்த‌ கூட்ட‌த்தாருக்கு பெரிய‌ காரிய‌ங்க‌ளை செய்ய‌ போகிறார் என்றும் அப்ப‌டி சொன்ன‌ர் என்றும் இப்ப‌டி சொன்னார் என்றும்" பித‌ற்ற‌ ஆர‌ம்பித்து, பார்ப்ப‌வ‌ர்க‌ள் மேல் எல்லாம் "அக்கினியை" இற‌க்கி த‌ள்ளினார். அந்தோ ப‌ரிதாப‌ம், ச‌ற்று நேர‌த்திலே அங்கே ம‌ழை கொட்டி அதுவும் நிற்க‌ கூட‌ முடியாத‌ அள‌விற்கு ம‌ழை கொட்டி, அந்த‌ வாத்தியாரும் அவ‌ரின் கைத‌டிக‌ளும் துண்டை காண‌ம் துனியை காண‌ம் என்று ஓட்ட‌ம் எடுத்த‌தை பார்க்க‌னுமே. அநியாய‌மாக‌ பிற‌ர் ம‌த்தியில் தேவ‌னின் நாம‌த்தை தூஷித்த‌வ‌ர்க‌ள் "ஆவியை" பெர்ற‌வ‌ர்க‌லாம், எந்த‌ ஆவி என்று தெரிய‌வில்லை. ஆனால் என் தேவ‌ன் செய்த‌ அற்புத‌மே, அந்த‌ அப்பாவி ம‌க்க‌ளை அந்த‌ "ஃப்ராடு" வாத்தியாரிட‌ம் இருந்து காப்பாற்றிய‌து தான் பெரிய‌ அற்புத‌ம் என்று நினைக்கிறேன். இந்த‌ வாத்தியார் வ‌ந்த‌வுட‌ன் அவருக்கு ஊரெல்லாம் பிசாசின் கூட்ட‌மாக‌ தெரிந்த‌தாம். எப்ப‌டி தான் ஆவியில் நிறைந்த‌ "விசுவாசிக‌ள்" த‌ங்க‌ளை இந்த‌ வாத்தியார்க‌ள் "பிசாசுக‌ளின் ஆவி" பிடித்த‌வ‌ர் என்று சொல்ல‌ அனும‌திக்கிறார்க‌ளோ!! ஒரே "ஆவியில்" இருப்ப‌தாலோ!!

இந்த‌ வாத்தியார்க‌ள் என்ன‌ சொன்னாலும் ச‌த்திய‌த்தை வாஞ்சிக்கிற‌ நாங்க‌ள் ஒரு காரிய‌த்தை விசுவ‌சிக்கிறோம்,

மத்தேயு 5 "11. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

12. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே" என் எஜ்மான‌னையே இந்த‌ "ப‌ரிசேய‌ வ‌ர்க்க‌ம்" துன்ப‌ப்ப‌டுத்திய‌ போது, நான் எம்மாத்திர‌ம். ஆனால் பரலோகத்தில் (தேவனின் பார்வையில்) என‌க்கு உண்டான‌ பலன் மிகுதியாயிருக்கும் என்கிற‌ விசுவாச‌ம் மாத்திரம் பெருகி வருகிறது, உபயம், இப்ப‌டி மட்டமாக எழுதும் வாத்தியார்கள்.

இன்னும் ஒரு வ‌ச‌ன‌ம் இந்த‌ வாத்தியார்க‌ளுக்கு பொருந்தும்,

மத்தேயு 7 "21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்."

இந்த‌ "ஸ்கோல்" வாத்திமார்க‌ளுக்கு இந்த‌ வ‌ச‌ன‌ம் எல்லாம் க‌ண்னிலே ப‌டாது போல், ப‌ட்டாலும், இது ப‌க்க‌த்து ஸ்கோல் கார‌ண‌க்கு தான் என்று ஒதுக்கி த‌ள்ளிவிடுவார்க‌ள் போல்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தில்/சபைகளில் நிலவும் வியாபாரத்தையும் வியாபாரப் போட்டிகளையும் ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் சகோ.பெரியன்ஸ் எடுத்துரைத்துள்ளார்.

தேவாலயத்தில் வியாபாரம் நடத்தி தேவாலயத்தை கள்ளர் குகையாக்கினவர்களை இயேசு விரட்டியடித்தார் (லூக்கா 19:45,46).

இன்று ஒவ்வொரு விசுவாசியும் தேவனின் ஆலயமாக இருப்பதாக பவுல் கூறுகிறார்.

தேவனின் ஆலயமாக விளங்கும் விசுவாசிகளிடம் வியாபாரம் நடத்தி அவர்களைக் கள்ளர் குகையாக்கும் போலிஊழியர்களை சகோ.பெரியன்ஸ் அடையாளம் காட்டியுள்ளார். இது இக்கால கட்டத்திற்கு தேவையான ஒரு செயலே.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"யொவன் ஜனம்" என்கிற தளம் நமக்கு வழங்கும் இன்றைய செய்தி. இவரின் எழுத்தை வாசித்தாலே இவர் எந்த ஆவியில் செயல் படுகிறார் என்று தேவன் யார் என்று தெரிபவர்கள் அறிந்துக்கொள்வார்கள். மற்றபடி இவருக்கு "தளம் நடத்தும்" ரசிகர்கள் இருக்கிறார்கள், எல்லாம் தேவனோடு பேசுபவர்கள். இவர்கள் பேசி வருவது இந்த பிரபஞ்சத்தின் தேவனிடத்தில் தான் என்பது இவர்களின் எழுத்தே சாட்சி. (பழைய வழிப்பாடு முறைகள் ஏதாவது விட்ட குறை தொட்ட குறைக்கு கூட இருக்கும் போல், ஆகவே தான் கிறிஸ்துவிற்குள் இன்னும் வளராமல் ஆண்டவரை தெரியாதவர்கள் உபயோகப்படுத்தும் பாஷைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்).


"கோவைபெரேயன்ஸிலிருந்து":

"//இத்துட‌ன் விட்டு விடுவ‌து அவ‌ருக்கு ந‌ல்ல‌து என்று நான் நினைக்கிறேன் //


"யொவன ஜனம்":

என்ன மிரட்டலா? இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டால் எப்டீங்கோ? இன்னும் உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் வரிக்கு வரி எழுதி உங்களைத் தோலுரிப்பதாக புது வருட சபதம் எடுத்திருக்கேனே..!


"கோவைபெரேயன்ஸிலிருந்து":

// அவ‌ரை போல் என‌க்கு சாப‌ம் இட‌வோ, அல்லது சாவு மணி அடிக்கும் அள‌விற்கு துணிச்ச‌ல் இல்லை;அவ‌ர்க‌ள் வ‌ழிப‌டும் தேவ‌னுக்கு வேண்டுமென்றால் அப்ப‌டி ஒரு எண்ணம் இருக்க‌லாம்; என‌க்கு தெரிந்த‌தெல்லாம், என் எஜ‌மான‌னான‌ கிறிஸ்து ப‌ரிக‌சிக்க‌ப்ப‌ட்டார் என்றால், அவ‌ரை விசுவாசிக்கும் என‌க்கும் அதே நிலை தானே //

"யொவன ஜனம்":

உன‌க்கு அந்த நிலை வர வாய்ப்பில்லை,தம்பி..!
நீ தூக்குல தான் தொங்குவே, இல்லை குடல் வெடிச்சி செத்துப் போவே, யூதாசுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும்; ஆமாம் , அவனுக்கும் அவருதானே கொஞ்சநாள் எஜமானரா இருந்தாரு..!

{இறுதியாக இந்த ஆசாமிகள் நேர்மையாளர்களாக இருந்தால் எனது தளத்தின் தொடுப்பை இணைத்திருக்கவேண்டும்;நான் அவர்களுடைய தொடுப்பை நாகரீகத்துடன் இணைத்துள்ளேன்;அவ்ளோ தைரியம்..ம்..ம்..!}"

பிசாசின் தளத்திற்கு எல்லாம் எங்களுக்கு வழி சொல்ல அவசியம் இல்லை. அவனை பெரிய ஆள் ஆக்கும் அளவிற்கு உங்களை போல் எங்களுக்கு என்னம் இல்லை. நாகரீகத்தை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் அந்த வார்த்தையே பயன் படுத்த தகுதி இல்லாதவர்கள். உங்களின் சாப்ங்களை சுமக்க எங்களுக்கு நேரம் இல்லை, ஆகவே அதை உங்கள் வீட்டிலோ, உங்களின் ரசிகர்கள் யாராவது இருப்பார்கள் அவர்களே சுமக்கட்டும், அப்படி யாரும் கிடைக்க வில்லை என்றால் உங்கள் சாபங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், எங்களுக்கு வேறு வேலைகள் இருக்கிறது.



-- Edited by bereans on Tuesday 2nd of February 2010 07:15:00 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவர்களது விசுவாச அறிக்கையில் இருக்கும் உண்மைகளும் அபத்தங்களும் இவர்களுக்கே தெரியாது. "அவர் பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார்"  என்பதற்குப்பதிலாக அவர் பரிசுத்த ஆவியானவரால் என்று கொச்சைப்படுத்தியுள்ளனர். வேற்று மார்க்கத்தார் என்ன எண்ணுவார்கள்? பரிசுத்த ஆவியை ஒரு ஆள் என்றுவேறு சொல்கின்றனர்.

'மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார்' என்பதற்கு தெளிவான விளக்கம் கேளுங்கள். பேந்தப் பேந்த முழிப்பார்கள். ஏனென்றால் நான் முன்பே சொன்னதுபோல் மரணம் என்றால் என்னவென்றே தெரியாது, பாதாளம் என்றால் சரியான விளக்கம் கொடுக்கமாட்டார்கள்.

இவர்கள் அறிக்கையில் தெளிவாக பிதா வேறு குமாரன் வேறு என்று இருந்தாலும் அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாழைப்பழக் காமெடி செய்வார்கள்.

'உயிருள்ளோருரையும், மரித்தோரையும் நியாயம்தீர்க்க வருவார்' என்று விசுவாசிக்கும் இவர்கள் அதற்கும் விளக்கம் சொல்ல மாட்டார்கள். மரித்தோரை எப்படி நியாயம் தீர்ப்பார்? பாவத்தின் சம்பளம்(நியாயத்தீர்ப்பு)தானே மரணம்?

சரீர உயிர்த்தெழுதலை விசுவாசிக்கும் இவர்கள் அது வானத்துக்குரிய சரீரமா? அல்லது இதே சரீரமா? இவை யார் யாருக்கு என்றும் விளக்க மாட்டார்கள்.

இந்தப் பெருங்குழப்பக் கூட்டத்தைத்தான் 'மகாபாபிலோன்' (குழப்ப போலி சபை) என்று வெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கிறோம்.

ஜாக்கிரதையாக இருப்போம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Newbie

Status: Offline
Posts: 2
Date:

Will you kindly throw some light on the differences between Bible Students & Jehovah's Witnesses please.

(Berean's Bible Institute

Layman's Home Missionary Movement

Dawn Bible Students 

Associated Bible Students
etc.)


-- Edited by harvestsiftings on Tuesday 2nd of February 2010 10:57:01 PM

__________________
"வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களை திருப்பிவிடும்" சங்கீதம் 119:37 (பொது மொழிபெயர்ப்பு)


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Dear Br Harvestsiftings,

You can go to the following links to know more about what you had asked.

1. Bereans Bible Institute:

 
http://www.bereanbibleinstitute.org/home.html

2. Layman's Home Missionary Movement:

http://en.wikipedia.org/wiki/Laymen's_Home_Missionary_Movement

3. Dawn Bible Students : http://www.dawnbible.com/

4. Associated Bible Students:

 
http://en.wikipedia.org/wiki/Associated_Bible_Students

The Most interesting part is the difference between The Bible Students and The Jehovah's Witnesses. Christiandom in totality or in part believes that these two groups are one and the same. I think you know about Charles Tez Russel, the founder of Bible Students Movement and of course Rutherford the founder of Jehovah's witness, a one time Bible Student and associate of Charles Russel. I will just give link to a non denominational, and which has nothing to do with Christianity page, the wikipedia encyclopedia which will tell the difference of both. But at large, the Christiandom has already fed in their database, that both the groups are same. Let them think of which I am not bothered, for I belong neither to both these groups.

http://en.wikipedia.org/wiki/Bible_Student_movement

http://en.wikipedia.org/wiki/Jehovah%27s_Witnesses

Please know the difference between these two groups. The second group was formed after the death of the founder of the first group. As from Catholic came out Protestant which further branched out, and then came out the Pentecostal movement would you consider that the Pentecostal churches and the Catholic churches are one and the same in this context.

One more useful link:

http://en.wikipedia.org/wiki/Bible_Students

If you find these useful, pl comment.

Thanks



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Newbie

Status: Offline
Posts: 2
Date:

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு!

தங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி !

நீங்கள் ஒருவேளை நான் யெகோவாவின் சாட்சியும் அல்ல வேத மாணாக்கர்களில் ஒருவரும் அல்ல என கூறினாலும் உங்களுடைய சிந்தையில் வேத மாணாக்கர்களின் தாக்கம் அதிகம் இருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா.

அப்படியானால் நூற்றுக்கணக்கன வேத மானாக்கர் தொகுதிகளில் நீங்கள் எந்த தொகுதியோடு கூட்டுறவு கொள்கிறீர்கள்.

__________________
"வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களை திருப்பிவிடும்" சங்கீதம் 119:37 (பொது மொழிபெயர்ப்பு)


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ள சகோதரர் ஹார்வெஸ்ட் அவர்களே,

    நீங்கள் உங்களால் முடிந்தவரையில் யூகித்தி இருக்கிறீர்கள். நான் நிச்சயமாக இந்த இரு குழுவை அல்லது இவர்களின் தொகுதிகலோடு கூட்டுறவு இல்லாதவன். இவர்களின் (வேத மாணவர்கள்) வேத பாடங்களை வாசித்திருக்கிறேன். சரியாக பட்டது. ஆனால் அத்துடன் நிறுத்தி விடாமல், இன்னும் சில காரியங்களை ஆராய்ந்ததால் இவர்களுடன் கை கோர்த்து செல்ல முடியாத சூழ்நிலை. வேண்டும் என்றால் அது என்ன காரணம் என்று வேறு ஒரு பதிவில் தருகிறேன்.

ஒரு வேளை நீங்கள் இந்த இரு கூட்டத்தாரில் எதாவாது ஒன்றின் உறுப்பினரோ?!

வேதத்தை ஆராய்வதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. கத்தோலிக்கர்களின் சில காரியங்களை ப்ரொட்டஸ்டென்டில் பார்க்கலாம், இவர்களின் சில பாதிப்புகள் பெந்தெகோஸ்தே சபைகளில் பார்க்கலாம், அதற்காக இவர்கள் அனைவரும் என்ன கூட்டுறவா வைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நாள் விரைவில் வரும் என்றே எதிர்ப்பார்க்கிறேன், வேத வசனம் நிறைவேற‌.

நன்றி



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஏதாவது ஒரு குழுவையோ அல்லது ஒரு 'சபையையோ' சார்ந்துதான் இருக்க வேண்டும் என்று ஒரு போலியான நிர்ப்பந்தம் எல்லார் மேலும் நேரடியாகவோ, மறைமுகமாக்வோ சுமத்தப்படுவதால் இந்தக் கேள்வி எழும்பியிருக்கலாம். ஒருமனத்தின் ஆவி இருக்கும் பட்சம் இத்தகைய காரியங்கள் நடக்காது.

ஞானஸ்நானம் கட்டாயம் எடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் அது முதலில் ஆவிக்குரிய காரியம் என்பதை மறந்துவிடுகிறார்கள். Nothing Physical makes one More Spiritual      என்பதை புரிந்துகொள்ள எத்தனப்படுவதில்லை. Symbolic    காக எடுக்கப்பட்ட ஞானஸ்நானம் தற்போது அவசியமில்லை என்பது என் கருத்து.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Newbie

Status: Offline
Posts: 2
Date:

இன்னும் சில காரியங்களை ஆராய்ந்ததால் இவர்களுடன் கை கோர்த்து செல்ல முடியாத சூழ்நிலை. வேண்டும் என்றால் அது என்ன காரணம் என்று வேறு ஒரு பதிவில் தருகிறேன்.

We are waiting for your reasons. Thanks

__________________
"வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களை திருப்பிவிடும்" சங்கீதம் 119:37 (பொது மொழிபெயர்ப்பு)


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"இவர்களுடன்" என்றால் யாரை குறித்து சொல்லியிருக்கிறீர்கள்? யெகோவா சாட்சிகளா அல்லது வேத மாணாக்களா? தங்களின் ஆராய்சியை பதியும்படியாக கேட்டுக்கொள்கிறேன்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

நண்பர் harvestsiftings அவர்களே!!!!
நீங்கள் எழுதிய பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து வாசித்தேன். நீங்கள் குறிப்பாக எந்த போதகத்தை கொண்டவர் என்பதை சரியாகப் புரிந்து கொண்டேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் கூட அண்மைக் காலமாகத்தான் சத்தியத்தை அறிய ஆரம்பித்து இருக்கிறேன். பைபிளில் அப்படி என்ன தான் சொல்கின்றன என்று அறிய தங்களின் உதவியை நாடுகிறேன். எனக்கு ஒரு சகோதரரைத் தெரியும். அவர் ''யகோவாவின் சாட்சியைச்'' சேர்ந்தவர். மிகவும் அருமையாக, என் மீது உண்மையாகவே அன்பு காட்டுபவர். நான் அவர்களிடம் ''பைபிள் கற்பிக்கிறது'' என்ற புத்தகத்தில் ஒவ்வொரு பகுதியாக படித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றும் அவர் எனக்கு சொன்ன விடயம், நான் சிறு வயது முதல் தெரிந்த நம்பிக்கைக்கு எதிர் மாறான போதனைகளை கொடுக்கிறார். ஆனாலும் அந்த நபர் மிகவும் அழகாக, தன்மையாக, பொறுமையாக வேதத்தில் இருந்து ஆதாரங்களைச் சொல்கிறார். எனக்கு சற்று குழப்பமாக இருந்தாலும் சரியானது எது என்பதை அறியவே முயற்சிக்கிறேன். தாங்கள் அந்த பிரிவை சேர்ந்தவர் என்பதால் ஜெகோவாவின் சாட்சி அமைப்பினரின் போதனைகள் தொடர்பான சிறு விளக்கம் கொடுக்க முடியுமா? சிரமத்துக்கு மன்னிக்கவும். நன்றி ''தேநீர் பூக்கள்''


-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 05:07:25 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard