சர்வலோகத்தையும் படைத்து, காத்து ஆண்டு வருகிறவரும், சகல சிருஷ்டியையும் சிருஷ்டித்தவருமான தேவனுக்கு செலுத்தப்பட வேண்டிய காரியம் இதுவே.
இதனிமித்தம் அவர் பேசும்போது அவர் சத்தத்திற்கு நம் செவி எப்பொழுதும் கவனிப்பாக இருந்து அவர் வார்த்தைகளின்படி சகலத்தையும் செய்ய விழிப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
நாம் காக்கப்படுவதும், சந்தோஷப்படுவதும், சகல நற்குணங்களிலும் முன்னேற்றம் அடந்து தேவனை அறிகிற அறிவிலும் ஞானத்திலும் வளருவதும், நாம் அவரை பயத்துடன் சேவிப்பதின் மூலமாகவே பெற்றுக்கொள்கிறோம்.
நாம் அவரைக் கண்டு பயப்படத்தக்கக் கொடூரமான தேவன் அல்ல.
தேவன் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், கிருபை நிறைந்தவர் என்பதை அவர் சித்தத்தின்படி நடப்பதன் மூலம் அறியலாம்.
அவர் நீதியுள்ள தேவனானபடியினால் துன்மார்க்கத்தாருக்கு அவர் பயங்கரமான தேவன்.
நம் இரட்சகரான இயேசுவும் பிதாவுக்குப் பயந்து ஜீவித்தார்.