" ஆகையால் நாளைக்காக கவலைபடாதிருங்கள். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காக கவலைப்படும். ( மத். 6: 34 )
நாம் தேவனை நேசிக்கிறவர்களாக அவர் ஊழியத்திலே முழு மனதுடன் ஈடுபட்டு நீதிக்குரிய காரியங்களையும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவ இராஜ்யத்தையும் தேடுவோமேயாகில், வருங் காலத்திற்குரிய காரியங்களில் நம் கவனத்தை செலுத்த அவசியமே இல்லை என்று இயேசு கூறினார்.
அவருடைய சீஷர்களைப் போல நமக்கு சோதனைகளும், உபத்திரவங்களும் உண்டு.
ஆகிலும் நாம் அனுதினமும் நம் நேசர் மேல் சார்ந்து, அவர் கைகளுக்குள்ளாக அடங்கி குறுகிய பாதையில் நடக்க பிரயாசப்பட வேண்டும்.
அந்தந்த நாளுக்கு அனுதினத்தின் பாடுகள் போதும்.
இந்த எல்லாப்பாடுகளிலும், அவர் வாக்குத்தத்தம் பண்ணின கிருபை நமக்குப் போதும்.
இதுவே நம் அனுதின மன்றாட்டாகவும் இருக்க வேண்டும்.
முதலாவது அவருடைய இராஜ்யத்தைத் தேடும் போது மற்ற யாவும் அவராலே கொடுக்கப்படுகிறது. ( மத். 6:8 )