kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூன்று பாதைகள்!!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மூன்று பாதைகள்!!!


மத்தேயு 7:13,14 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

ஏசாயா 8.9. அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.

மேலே உள்ள வசனங்களில் வரும் மூன்று விதமான வாசல், அல்லது வழி அல்லது பாதைகள் குறித்து சற்று ஆராயலாம்.

1. விசாலமான வழி அல்லது கேட்டுக்கு போகிற வாசல்: என்றால் என்ன? ஆதாம் தொடங்கி கடந்த சுமார் 6000 வருடங்களுக்கு மேலாக அநேகர் இந்த வழியில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  ஏனென்றால் இந்த பாதை அநேகருக்கு நியமிக்க பட்ட ஒரு பாதை. இந்த பாதையில் நடப்போருக்கு சுவிசேஷம் என்கிற‌ வெளிச்சம் தெரியாமல் எதிராளியான சாத்தான் கண்களை குறுடாக்கிவிட்டதால் நடக்க முடிவதில்லை. ஆனால் நடக்கும் போது அந்த பாதை விசாலமாக இருப்பதால், நாம் நடந்து செல்வது சரியான பாதை தான் என்கிற மமதையில் இருப்பார்கள், ஏனென்றால் அந்த பாதையில் நினைக்கும்படியான பாடுகள் இல்லை, வேதனைகள் இல்லை, கிறிஸ்துவ ஜீவியம் இல்லை. இந்த பாதையில் உலகத்தார் மாத்திரம் இல்லை, பெரும்பாளுமான கிறிஸ்தவர்களும் தான் நடக்கிறார்கள். தாங்கள் அதில் தான் நடக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் நடக்கிறார்கள்.

2.  இடுக்கமான வாசல் அல்லது ஜீவனுக்கு போகும் வழி: என்றால் என்ன‌? இயேசு கிறிஸ்துவின் பாடுக‌ளின் பாதையில் ந‌ட‌ந்து செல்லும் பாதையே ஜீவ‌னுக்கு போகும் பாதை அல்ல‌து இயேசு கிறிஸ்துவை போல் சாகாமையை த‌ரித்துக்கொள்ள‌ பிர‌யாசிக்கும் ஒரு சிறு கூட்ட‌ம் ந‌ட‌க்கும் வ‌ழி தான் இடுக்க‌மான‌ வாச‌ல். இந்த‌ வாச‌லை க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளே சில‌ர் தான் என்கிற‌து வேத‌ம், ஏனென்றால் இந்த‌ பாதை அத்துனை சுல‌ப‌மாக‌ ந‌ட‌க்க‌ கூடிய‌து அல்ல‌, பாடுக‌ளும் துன்ப‌ங்க‌ளும், இயேசு கிறிஸ்துவின் ஜீவ‌னும் நிறைந்த‌ பாதை இது. க‌ஷ்ட்ட‌மான‌ ஒரு பாதையினால் இதை க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ள் சில‌ரே என்கிறார் இயேசு கிறிஸ்து. உல‌காத்தாரை விடுங்க‌ள், இன்று பெரும்பாளுமான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இந்த‌ பாதையில் ந‌ட‌ப்ப‌தில்லை என்ப‌து நிச்ச‌ய‌ம். ஏனென்றால் க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ள் சில‌ராக‌ இருக்கும் போது, அதில் ந‌ட‌ப்ப‌வ‌ர்க‌ள் இன்றைய‌ கோடிக்க‌ண‌க்கான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக் இருக்க‌ முடியாது!! ஆனாலும் ஒவ்வொரு கிறிஸ்த‌வ‌ரும் நாங்க‌ள் இந்த‌ பாதையில் தான் ந‌ட‌க்கிறோம் என்பார்க‌ள், அது செழிப்பின் உப‌தேச‌ம் செய்ப‌வ‌ராக‌ இருந்தாலும் ச‌ரி, அல்ல‌து மேடை ஏறி ஐந்து இல‌ட்ச்ச‌ம் பேரை கூட்டுகிற‌வ‌ராக‌ இருந்தாலும் ச‌ரி, அல்ல‌து விஷ‌த்தை மாத்திர‌ம் குடித்து தேவ‌னை சோதிக்க‌ மாட்டோம், ஆனால் ம‌ற்ற‌ அற்புத‌ங்க‌ள் அடையாள‌ங்க‌ள் செய்து தேவ‌னை சோதிப்போம் என்கிற‌வ‌ர்க‌ளானாலும் ச‌ரி, அல்ல‌து டிர‌ம்ஸ் வாசித்தால் ப‌ரிசுத்த‌ ஆவி வ‌ந்து போகும் ச‌பையாக‌ இருந்தாலும், இத்துனை வேறுபாடுக‌ள் இருந்தாலும் நாங்க‌ள் எல்லோரும் இடுக்க‌மான‌ வாச‌ல் வ‌ழியாக‌ தான் ந‌ட‌க்கிறோம் என்கிறார்க‌ள். ஆனால் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், இந்த‌ வாச‌லை க‌ண்டுப்பிடிப்ப‌வ‌ர்க‌ளே சில‌ர் தான், அதை தான் வேத‌ம் சிறு ம‌ந்தையான‌ ஒரு சின்ன‌ கூட்ட‌ம் என்கிற‌து. இந்த‌ பாதையில் ந‌ட‌ப்ப‌வ‌ர்க‌ள் தான் இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் உறுவேற் ப‌ட‌ப்போகிற‌வ‌ர்க‌ள்.
   


3. பெரும்பாதையான‌ வ‌ழி அல்லது கர்த்தரால் மீட்க்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ட‌க்க‌ போகும் ஒரு வ‌ழி என்கிற‌து வேத‌ம். இன்று இந்த‌ உல‌க‌த்தில் விசால‌மான‌ பாதையில் ந‌ட‌ந்து கொண்டிருக்கும் கூட்ட‌ம், உயிர்த்தெழுந்த‌ பிற‌கு (இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தின் ப‌ல‌னாக‌) இந்த‌ பாதையில் தான் ந‌ட‌க்க‌ இருக்கிறார்க‌ள். பாதை என்றால் அப்பொழுது வ‌ரவிருக்கும் உல‌க‌த்தை குறிக்கும். வ‌ர‌ இருக்கும் அந்த‌ உல‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் மாறாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ளே தான், சாவாமைக்கு ப‌தில் நித்திய‌ ஜீவ‌னுக்கு உடைய‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள்



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

முதலாவது தாங்கள் ஒரு புதிய தளத்தை துவக்கி உள்ளீர்கள் என்பதை நான் அறிந்துக்கொண்டதை தெரிய படுத்த விரும்புகிறேன். வாழ்த்துக்க‌ள், அநேக‌ர் வ‌ந்து அதில் விவாதிக்க‌ வாழ்த்துகிறேன்.

ச‌ரி மூன்று பாதைக‌ள் என்ப‌தில் ப‌திய‌ வேண்டிய‌தை ஏன் இங்கு கேட்டிருக்கிறீர்க‌ள்? நான் தாங்க‌ள் "முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ஒரு ஆய்வு" என்கிற‌ த‌லைப்பின் கேட்ட‌ கேள்விக்கு "மூன்று பாதைக‌ள்" என்கிற‌ த‌லைப்பின் கீழேயே ப‌தில் த‌ருகிறேன்.

விசால‌மான‌ வாச‌ல் வ‌ழியாக‌ போகிற‌வ‌ர்க‌ள் "கேட்டுக்கு" போகிற‌வ‌ர்க‌ள், அதாவ‌து பொதுவான‌ கிறிஸ்தவ‌ விள‌க்க‌த்தின் ப‌டி "ந‌ர‌க‌த்திற்ககு" போகிற‌வ‌ர்க‌ள் ஆவார்க‌ள். ஆனால் கேட்டுக்கு போகிற‌வ‌ர்க‌ள் என்றால் "ஒரு இழ‌ப்பை கொண்ட‌வ‌ர்க‌ள்" அல்ல‌து "நியாய‌த்தீர்ப்புக்கு போகிற‌வ‌ர்க‌ள்" என்ப‌து தான் அத‌ன் அர்த்த‌ம். நீங்க‌ளும் வேத‌த்தை ஆராய்கிற‌ப‌டியால் இந்த‌ வார்த்தையின் அர்த்த‌த்தை பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

சாவாமை: இயேசு கிறிஸ்துவின் சாயலில் (அதாவ‌து ஆவியாக‌) உயிர்த்தெழுந்து, என்றென்றும் தேவ‌னோடு இருக்கும் ஒரு நிலை ஆங்கில‌த்தில் "Divinity" என‌லாம். இவ‌ர்க‌ள் உன்ன‌த‌மான‌ தேவ‌னின் குமார‌ன‌னான‌ இயேசு கிறிஸ்துவின் உட‌ன் சுத‌ந்திர‌வாளிக‌லாவார்க‌ள். தேவ‌னின் குமாரார் என்ப்ப‌டுவார்க‌ள். நித்திய ஜீவன்க்கு வந்திருக்கும் ஜனங்களை இயேசு கிறிஸ்துவுடன் சேர்ந்து நீதியின் வழியில் நடத்துவார்கள். ஏனென்றால் நீதி என்னவென்று இவர்கள் பூமியில் இருக்கும் போது கற்று அந்த விசுவாசத்தை காத்துக்கொண்டவர்கள் ஆவர்.

நித்திய‌ஜீவ‌ன்: மாம்ச‌த்தில் இதே பூமியை சுத‌ந்த‌ரித்துக்கொள்ளும் ப‌டி உயிர்த்தெழுந்து, நீதியை க‌ற்றுக்கொண்டு, என்றென்றும் உயிரோடு (தேவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு வேற் திட்ட‌ம் வைத்திருக்கிறாரா என்ப‌து வேத‌த்தில் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை) இருப்பார்க‌ள். பூமியில் இருப்ப‌தால் பூமிக்குறிய‌ மேனியோடு இருப்பார்க‌ள், ஆதாம் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ அதே ம‌கிமையான‌ ச‌ரீர‌த்தில் இருப்பார்க‌ள். பூமி முந்திய‌ சீருக்கு திரும்பிய‌வுட‌ன் இந்த‌ பூமி அத‌ன் முழு விளைச்ச‌லை த‌ந்து கொண்டிருக்கும். ஜீவ‌னுக்கு வேண்டபூமியில் உள்ள‌ ம‌னித‌ன் சாப்பிட‌ வேண்டியிருக்கும். இந்த‌ கூட்ட‌த்தார் முத‌லில் பூமியில் இருந்த‌ போது விசால‌மான‌ பாதையில் ந‌ட‌ந்து உயிர்த்தெழுந்து "பெரும் பாதையிலி" ந‌ட‌ப்பார்க‌ள், ஏனென்றால் இவ‌ர்க‌ள் யாவ‌ரும் என்றென்றும் மரணத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள் தான் ஆனால் இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் சிந்துத‌லின் ப‌ய‌னாக‌ உயிர்த்தெழுந்து நீதியை க‌ற்றுக்கொள்ளும் ஒரு கூட்ட‌ம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//முதலாவது தாங்கள் ஒரு புதிய தளத்தை துவக்கி உள்ளீர்கள் என்பதை நான் அறிந்துக்கொண்டதை தெரிய படுத்த விரும்புகிறேன். வாழ்த்துக்க‌ள், அநேக‌ர் வ‌ந்து அதில் விவாதிக்க‌ வாழ்த்துகிறேன்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரரே!

2 நாட்களுக்கு முன் ஒரு பெயரில் ஆரம்பித்து, பின்னர் அதை நீக்கிவிட்டு, சிறிய மாற்றத்துடன் வேறு பெயரில் தொடங்கியுள்ளேன். நீங்கள் எதைப் பார்த்தீர்கள் என்பது தெரியவில்லை. இன்னும் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடையாததால் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. விரைவில் எல்லோருக்கும் அழைப்பு விடுப்பேன். நீங்களும் உங்கள் குழுவினரும் அதில் சிறப்பான பங்காற்றுவதோடு ஆக்கபூர்வமான/ அனுபவபூர்வமான ஆலோசனைகளையும் தரும்படி வேண்டுகிறேன். எனது தளத்தை எவ்வாறு அறிந்தீர்கள் என்பதைத் தெரிவிக்கும்படியும் வேண்டுகிறேன்.

சாவாமைக்கும் நித்தியஜீவனுக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று தாங்கள் கொடுத்த விளக்கம் சரியாகவே தோன்றுகிறது. ஆனால், புதிய ஏற்பாட்டு உபதேசங்கள் யாவும் நித்தியஜீவனுக்கடுத்தவைகளாக இருக்கையில், அதை எப்படி சாவாமைக்குரியவர்களான முன்குறிக்கப்பட்டவர்களுக்கானது எனக் கூறுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

மேலும் இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள் என இயேசு கூறியிருக்கையில், உபதேசங்களின்படி நடக்க நாம் பிரயாசப்படவேண்டியதில்லை என்பதுபோல் நீங்கள் கூறுகிறீர்கள்.

கேட்டுக்குப் போகிறவர்கள் என்றால், ஓர் இழப்பைக் கொண்டவர்கள் அல்லது நியாயத்தீர்ப்புக்கு போகிறவர்கள் என்கிறீர்கள். சரி, அப்படியே இருக்கட்டும்.

ஆனால் அந்த இழப்பைத் தவிர்ப்பதற்கு நாம் பிரயாசப்படவேண்டியது அவசியந்தானே? அதனால்தானே இடுக்கமான வாசல்வழியாய் பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள் என இயேசு கூறுகிறார்? இக்கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?

இயேசுவின் நியாயத்தீர்ப்பு நடக்கையில் அவர் புடமிடுகிறவனுடைய அக்கினையைப் போலவும் வண்ணாருடை சவுக்காரத்தைப் போலவும் இருப்பார் என மல்கியா 3:2 கூறுகிறது. அவ்வாறே நல்ல கனிகொடாத மரம் வெட்டப்படும், பதர் அக்கினியில் போடப்படும், அக்கினியால் ஞானஸ்நானம் கொடுப்பார் என பல வசனங்கள் கூறுகின்றன. இவையெல்லாம் மனிதன் ஒருவித வேதனையை அனுபவிக்கவேண்டியதாக இருக்கும் என்றுதானே கூறுகின்றன? அந்த வேதனையிலிருந்து தப்பிக்க நாம் பிரயாசப்படவேண்டும்தானே? அதைதானே புதிய ஏற்பாட்டு உபதேசங்கள் கூறுகின்றன? இக்கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சகோதரர் அன்பு அவர்களே,

இதையே நான் மாற்றிக் கேட்கிறேன். நம் தமிழர்களையே எடுத்துக்கொள்வோம், வேதத்தை ஆராயாமல், அல்லது குறைந்தபட்சம் சுயமாக வாசிக்காமல் நீங்கள் சொல்லும் 'உபதேசங்களை' யார் அறிய முடியும்? இந்த முன்னேறிய காலகட்டத்திலேயே வசனங்களை இவ்வளவு ஆராய்ந்து பார்க்கும் நமக்கே ஆயிரத்தெட்டு கேள்விகள் உள்ளது. தமிழ் வேதாகமம் வெளிவந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்றாலும் எத்தனை பேர் அதை வாசிக்க முடிந்தது? எத்தனை பேர் ஆராயமுடிந்தது? ஏன் இப்பொழுது கூட படிக்கத்தெரியாத கோடிப்பேர் உண்டே. படிக்கத்தெரிந்த எத்தனைபேர் வேதத்தைப் படிக்கிறார்கள். இன்றைக்கு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் எல்லாம் வேதம் வாசிப்பதிலோ, அல்லது ஆராய்ந்து அறிவதிலோ ஆர்வம் காட்டுகிறார்களா என்ன?

மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த வேதம் உலகத்தில் யாருக்குமே கிடைக்கவே இல்லையே. அவர்கள் கதிதான் என்ன என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார் என்று டெக்னிகலாக பதில் சொல்பவர்கள் உண்டு. அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார்கள் என்றால் இப்போது அறியாதவர்களையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்பதுதான் என் வாதம்.

உலகத்தில் எல்லாருக்குமே வேதம் தெளிவாக போதிக்கப்பட்டு, அதை அவர்கள் கைக்கொள்ள முடியாதபட்சம் நீங்கள் சொல்லும் தண்டனை கொடுப்பது மிகவும் நியாயமான தீர்ப்பு, ஆனால் பள்ளிக்கே போகாதவனுக்கு பரீட்சை வைத்தால்... என்ன நியாயம்?

பாவத்தின் சம்பளம் மரணம், அப்படியே நீங்கள் சொன்னபடி கீழ்ப்படியாதவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் மீண்டும் எதற்கு உயிரோடு எழுப்பவேண்டும்? வேதம் எல்லோருக்கும் உயிர்தெழுதல் உண்டு என்றல்லவா வாக்களிக்கிறது!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

   தாங்கள் சாவாமை மற்றும் நித்தியஜீவனை குறித்த பதிலில் சற்றே திருப்தியாகியிருப்பதற்கு நன்றி. இயேசு கிறிஸ்துவின் உபதேசம் நித்தியஜீவனுக்கு அடுத்ததாக இருந்தாலும், முன்குறிக்கப்பட்ட சிலர் அந்த இடுக்கமான வாசலில் விழுந்தாலும் எழுந்து நடந்து சாவாமையை அடைவார்கள். ஆகவே தான் தன் சபையை இயேசு கிறிஸ்து ஒரு சிறு மந்தையாக இருப்பதாக குறிப்பிடுகிறார். லூக்கா 12:32 "பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்."

புதிய ஏற்பாட்டிற்கான உபதேசங்களை இன்று கிறிஸ்தவர்கள் உட்பட உலகத்தார் கடைப்பிடிப்பதில்லையே! அப்படி என்றால் இடுக்கமான வாசலை இன்னும் கண்டு பிடிக்காத கோடா கோடி ஜனங்கள் இருக்கிறார்களே, இருந்தார்களே!

"உபதேசங்களின்படி நடக்க நாம் பிரயாசப்படவேண்டியதில்லை என்பதுபோல் நீங்கள் கூறுகிறீர்கள்."

ஒரு காலும் அப்படி சொல்ல நாங்கள் துனியவில்லை. மாறாக அன்பின் பிரமானமாக‌ இயேசு கிறிஸ்துவின் உப‌தேச‌ங்க‌ள் வ‌ந்த‌ பிற‌கு க‌ண்ணுக்கு க‌ண், ப‌ல்லுக்கு ப‌ல் என்கிற‌ நியாய்ப்பிர‌மான‌ங்க‌ளை விட்டு விடும்ப‌டி தான் சொல்லி வ‌ருகிறேன். அப்போஸ்த‌ல‌ர்க‌ளும் அதையே தான் செய்தார்க‌ள்.

விசால‌மான‌ பாதையில் நுழைந்த‌வ‌ர்க‌ள் அந்த‌ வ‌ழி தான் ப‌ர‌லோக‌ம் செல்கிற‌ வ‌ழி என்று அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌லேயே, இந்த‌ பிர‌பஞ்ச‌த்தின் தேவ‌னான‌ சாத்தானினால் குறுடாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ ந‌ட‌ந்து செல்கிறார்க‌ள்! எப்ப‌டி குறுக‌லான‌ பாதையில் ந‌ட‌ப்பார்க‌ள் அல்ல‌து பிர‌யாசிக்க‌ தான் முடியும்?

அஸ்திவார‌த்தை ந‌ம்பாம‌ல் எப்ப‌டி க‌ட்டிட‌த்தை எழுப்ப‌ முடியும்? கிறிஸ்து ம‌ற்றும் அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் அஸ்திவார‌ம் தேவை இல்லை, எங்க‌ளுக்கு என்று த‌ரிச‌ன‌ங்க‌ள் இருக்கிற‌து, என்னிட‌ம் தான் தேவ‌ன் பேசுகிறாரே, என்று சொல்லி வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ இடுக்க‌மான‌ வாச‌ல் எப்ப‌டி தெரியும் (தேவ‌ சித்த‌ம் அவ‌ர்க‌ள் அறியும்ப‌டி இருந்தால் நிச்ச‌ய‌மாக‌ ச‌வுல் போல் அரிந்து ப‌வுலாக‌ மாறுவார்க‌ள்)

அக்கினி என்ப‌து நிச்ச‌ய‌மாக‌ சுத்திக‌ரிப்போ அல்ல‌து ஒரு த‌ண்ட‌னையை தான் குறிக்கிற‌து. அதில் எந்த‌ முற‌ன்பாடும் கிடையாது. கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இன்றுய் க‌னியை ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளாக‌வும், ப‌த‌ரை கெட்ட‌வ‌ர்க‌ளாக‌வும் எடுத்துக்கொள்ள‌ தெரிந்திருக்கிறார்க‌ள், ஆனால் அக்கினியை மாத்திர‌ம் அக்கினி என்றே எடுத்துக்கொண்ட‌தால் தான் "எரி ந‌ர‌க‌ம்" போன்ற‌ கோட்பாடுக‌ள்!!

மத்தேயு 7:22. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்."

வ‌ச‌ன‌ம் இப்ப‌டி இருந்தாலும் ஏன் இவைக‌ளை எந்த‌ ச‌பையோ அல்ல‌து அதை ந‌ட‌த்தும் ஊழிய‌ர்க‌ள் இது த‌ங்க‌ளை ப‌ற்றியான‌ வ‌ச‌ன‌ம் என்று போதிப்ப‌தில்லை. இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை குறித்து தான் அதிக‌மாக‌ தெரிந்துக்கொண்ட‌வ‌ன் அதிக‌மாக‌ அடிப்ப‌டுவான் என்கிற‌து வேத‌ம். இந்த‌ ப‌ற்க‌டிப்பு, அழுகை எல்லாம் இவ‌ர்க‌ளுக்கு தான் பொருந்தும்.

இப்பொழுது பூமியில் இருக்கும் போது எப்ப‌டி எல்லாம் க‌தை சொல்லி வ‌ருகிறார்க‌ள். நான் ப‌ர‌லோக‌ம் போய் வ‌ந்தேன், என‌க்கு உண்டான‌ க‌ட்டிட‌த்தை பார்த்து வ‌ந்தேன். இயேசு கிறிஸ்துவே என்னை க‌ர‌ம் பிடித்து கூட்டி சென்றார், என் கூட‌ பேசினார் போன்ற‌வைக‌ள்..ஆனால் நியாய‌த்தீர்ப்பின் நாட்க‌ளில் இவ‌ர்க‌ளும் இவ‌ர்க‌ள் சொன்ன‌ க‌தைக‌ளை கேட்ட‌ ம‌க்க‌ளும் இவ‌ர்க‌ளுட‌ன் இருக்கும் போது, இவ‌ர்க‌ளுக்கு அழுகை, ப‌ற்கடிப்பு இருக்காதோ!! நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ அழுகையும் ப‌ற்க‌டிப்பும் அந்த‌ நியாய‌த்தீர்ப்பின் நாட்க‌ளில் தான். இதுவே ஒரு பெரிய‌ த‌ண்ட‌னையாக‌ தான் இவ‌ர்க‌ளுக்கு இருக்கும். ஆனால் தேவ‌னின் அன்பினால் அதுவும் சீக்கிர‌ம் ச‌ரியாகி, அவ‌ர்க‌ளும் அந்த‌ மெய்யான‌ ச‌த்திய‌த்தை அறிந்துக்கொண்டு, தேவ‌ன் யார் என்றும், இயேசு கிறிஸ்து யார் என்றும் தெரிந்துக்கொள்வார்க‌ள் என்ப‌தில் எந்த‌ ச‌ந்தேக‌மும் இல்லை, அது தான் தேவ‌ சித்த‌மும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard