தேர்ச்சி பெற்றவர்களாக ஓட்டப்பந்தயத்தில் ஓட விரும்பும் யாவரும் அக்கறையுள்ளவர்களாக உற்சாகத்துடன் தேவ ஓழியத்தில் ஈடுபடவேண்டும்.
நமக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தை உபயோகப்ப்டுத்தாமல், உலக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் அதைப் புதைத்து வைப்போமாகில் அவிசுவாசமுள்ள ஊழியக்காரனைப்போல நாமும் புறம்பான இருளிலே போகக் கூடியவர்களாக காணப்படுவோம்.
ஆவியின் அனலில்லாதவர்கள் மரித்தவர்களுக்கொப்பானவர்கள். விழிப்புடன் உற்சாகத்தோடு தேவ ஊழியத்தில் ஈடுபடும்போது நாம் பிரகாசிக்கிற விளக்குகளாகக் காணப்படுவோம்.