" நியாயம் செய்து, இரக்கத்தை நேசித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை எகோவா தேவன் உன்னிடம் கேட்கிறார். " ( மீகா, 6:8 )
இவை சகலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் நியாயமான தேவை. வருங்காலத்தில் இப்பூமியை நியாயந் தீர்க்க தேவனால் போதிக்கப்படுவோருக்கு இக்குண லட்சணங்கள் மிக அவசியமானது. மீகா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட இம் மூன்று குணாதிசயங்களும் அன்பு என்னும் ஒரே வார்த்தைக்குள் அடங்கியுள்ளது. அன்பு என்பது பிறனிடத்திலும், சகோதரரிடத்திலும், குடும்பத்திலும், விசேஷமாக நம்மிடத்திலேயும் நியாயமாக இருக்க வேண்டிய குண லட்சணம். நாம் இதை விரும்பி நம் வாழ்க்கையிலே இவற்றை பயிற்சித்து பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களையே தேவன் நம்மிடத்தில் விரும்புகிறார். மனத்தாழ்மை இல்லாத இடத்தில் அன்பு இல்லை. ( யாக். 4:10, 1 கொரி. 13: 1 - 7 )