" என் பிள்ளைகளே நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவங்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்" . ( 1 யோ. 2:1 )
நம்முடைய மாமிச பலவீனத்திலோ, விசுவாச பலவீனத்திலோ நாம் தவறி பிதாவின் சித்தத்திற்கு மாறாக எதையும் செய்வோமேயானால், அவைகளை உணர்ந்தபின் நம்மை அழைத்து வழி நடத்துகிற தேவனிடம் உடனடியாக மன்றாடி ஜெபித்து நம் வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
நமக்காக பரிந்து பேசுகிறவர் தேவனின் வலது பாரிசத்தில் இருந்து நமக்காக வேண்டுதல் செய்கிறவராயிருக்கிறார்.
சாத்தானின் சோதனைகளுக்கு நாம் விலகி ஜீவிக்கவே தேவன் விரும்புகிறார்.