" என் சகோதரரே கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். " ( யாக். 5:10 )
ஒருவன் தன்னை முற்றிலும் வெறுத்து இழிவடைந்து குறுகிய பாதையில் நடப்பதே சரியான வழியாகும். இதுவே பணிவுடனும் சாந்தத்துடனும் செல்லும் வழி. இன்னல்களும் உபத்திரவங்களும் இந்த வழியில் நமக்குண்டாகும். நாம் எவ்வளவுக்கு அதிகமாக கிருபையிலும் தேவனை அறிகிற அறிவிலும் வளருகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக சோதனையும், துன்பமும் பெருகும். விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் தேவனுடைய ஊழியத்தில் முன்னேறும் பொழுது சாத்தான் அதிகமாக நம்மை பின்வாங்கச் செய்ய முயலுவான். உறுதியான விசுவாசம் நம்மைப் பலபடுத்தும்போது முன்பு துன்புறுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளை நினைவு கூற யாக்கோபு நம்மை அழைக்கிறார். இந்நிலையில் பொறுமையே மிக அவசியமானது. உபத்திரவங்களில் சந்தோஷப்படும்படி நம் இரட்சகரும் போதித்தார். ( மத். 5:12 )