" உன்னை விசேஷித்தனாகும்படி செய்கிறவர் யார் ? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது ? " (1கொரி. 4:7)
தேவனால் அழைக்கப்பட்டு பிரதிஷ்டைக்குட்பட்ட தேவனுடைய பிள்ளைகள் தாங்கள் சத்தியத்திலும் கிருபையிலும் அவரிடம் சேர்ந்து நிலை கொண்டிருப்பது தங்களுடைய சொந்த ஞானத்தினாலோ அல்லது தங்களுக்குப் போதித்தவர்களின் ஞானத்தினாலோ அல்ல, தேவனுடைய ஞானத்தினாலும், கிருபையினாலும் உண்டானதென்பதை உணரவேண்டும்.
தேவனுடைய சபையிலே ஊழியம் செய்யும் ஒவ்வொருவரும் எந்த நிலையில் அவர்கள் அந்த ஊழியத்தில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் சுய பெலத்தினாலோ அல்லது ஞானத்தினாலோ அதைப் பெற்றதாகக் கருதாமல் தேவ ஞானத்தை அவர் மூலமாகப் பெற்றோம் என்று உணர வேண்டும்.
சகலத்திலும் நான் அல்ல, அவரே என்னை நடத்துகிறார், என்று அறிக்கை செய்கிறனாகவும் காணப்பட வேண்டும்.
இவ்விதம் செய்யாதவன் அவர் கிருபையை ம்றுதலிக்கிறவனா யிருப்பான்.