சந்தோஷ் அவர்களே, நீங்கள் கிறிஸ்தவரா அல்லது வேற்று மதமா என்று தெரியவில்லை. கிறிஸ்தவராக இருந்தால் தயவு செய்து இது போல் கருத்துக்களை இங்கு பதிவு செய்யாதீர்கள், இதற்கு என்று வேறு தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியும். வேதத்தை வாசித்து எழுதுபவரா அல்லது "தரிசனங்களையும்" "வெளிப்பாடுகளை"யும் மாத்திரம் நம்பும் கிறிஸ்தவரா என்றும் புரியவில்லை. நீங்கள் இரண்டாம் ரகம் என்றால் உங்களிடத்திலிருந்து இப்படி பட்ட பதிவுகளை தான் எதிர்ப்பார்க்க முடியும் என்று என்னுகிறேன்.
தயவு செய்து கிறிஸ்துவின் உன்னதமான பலியை கொச்சை படுத்தாதீர்கள். அவர் எல்லா மனுஷர்களுக்காகவும் தான் மரித்தார். அவர் நம் பாவங்களுக்கு மாத்திரம் இல்லை "சர்வ லோகத்தின்" பாவங்களையும் நிவர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார் என்கிறது வேதம் 1 யோவான் 2:2ல்.
தயவு செய்து வேதத்திற்கு புறம்பான மனித கோட்பாடுகளை கொடுத்து ஒரு புதிய சபைக்கு அஸ்திபாரம் போட முயற்சி செய்யாதீர்கள்!!