மரணம் என்றால் என்ன? வேதம் மரணத்தை குறித்து என்ன சொல்லிகிறது? சபைகளில் மரணத்தை குறித்து என்ன பிரசங்கிக்கப்படுகிறது? ஒரு மனிதன் மரித்தால் ஆவி, ஆத்துமா வெளியேறுகிறதா?
இந்த விவாத பகுதியில் மரணத்தை குறித்து மாத்திரமே விவாதிக்கலாம், வேறு ஒன்றும் வேண்டாமே!!
வேதம் மரணம் என்று ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிக்கிறது. ஆவிக்குரிய மரணம், சரீரமரணம் என்று எங்குமே இல்லை.
"...இவைகள் (மிருகங்கள்) சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலிருந்து உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத்(பிரேதக்குழிக்கு) திரும்புகிறது. பிரசங்கி 3:19,20.
அனைவரும் பிரேதக்குழியில்தான் உள்ளனர் என்று யோவான்5:28ம் தெளிவாகக் கூறுகிறது.
இதற்கு எதிராக 'இல்ல பிரதர், மரிக்கும்போது உங்கள் சரீரம் மட்டும்தான் மண்ணுக்குப் போகும், நீங்கள் (ஆத்துமா) சாவதில்லை, பரலோகத்திற்கோ(யோவான்3:13க்கு எதிராக), பரதீசுக்கோ(என்கிருக்கிறதென்று யாரும் சொல்ல மாட்டார்கள்), ஆபிரகாம் மடிக்கோ(?) போவீர்கள், அவிசுவாசிகள் மரித்தால் அவர்கள் பாதாளத்துக்கு(அக்கினி எரியும்) போவார்கள். என்று போதிப்பவர்கள், சாத்தான் சொன்ன சாகவே சாவதில்லை என்ற உபதேசத்தைத்தான் போதிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க. இதைத்தான் பேய்த்தனத்துக்கடுத்த உபதேசம் என்கிறார் போல அப்.பவுல்.
soulsolution wrote: //வேதம் மரணம் என்று ஒரே ஒரு விஷயத்தைத்தான் குறிக்கிறது. ஆவிக்குரிய மரணம், சரீரமரணம் என்று எங்குமே இல்லை.//
இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களின் (அல்லது நீதிமான்களின்) ஆத்துமா தற்போது பரதீசில் இளைப்பாறுகிறதென்றும் இயேசுவை விசுவாசிக்காதவர்களின் (அல்லது துன்மார்க்கரின்) ஆத்துமா தற்போது பாதாள அக்கினியில் வாதிக்கப்படுகிறதென்றும் ஒரு கருத்து பெரும்பாலானவர்களால் நம்பப்படுகிறது, போதிக்கப்படுகிறது. இக்கருத்துக்கு வேதஆதாரம் நிச்சயமாக இல்லைதான். ஆனால், சரீரத்தை அழித்தல், ஆத்துமாவை அழித்தல் எனும் பதங்கள் பின்வரும் வசனத்தில் காணப்படுகின்றன.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
இவ்வசனத்திற்கு முழுமையான விளக்கம் கொடுத்தால், மரணத்தைக் குறித்த தெளிவான கருத்து புலனாகும் என்பதோடு, நரகம் என்றால் என்ன என்பதும் புரிந்துவிடும்.
மிக நல்ல கேள்வி, அருமையான வசனம். இதற்கான பதிலை ஆத்துமா பகுதியில் பதிக்கவிருக்கிறேன். ஏனென்றால் ஆத்துமா என்னால் என்னவென்றே தெரியாமல் அதைக் கொல்வதைப் பற்றி விவாதிக்க இயலாது.
-- Edited by soulsolution on Monday 11th of January 2010 12:13:38 AM
சுருக்கமாகச் சொன்னால் தேவன் மாத்திரமே மனிதனை 'இரண்டாம் மரணத்தில்' நித்தியமாக அழிக்க வல்லவர். அங்கிருந்து வேறு உயிர்த்தெழுதல் இல்லை. மனிதர்கள் சரீர்த்தை மாத்திரமே அழிக்க வல்லவர்கள், ஏனென்றால் அவர்களால் மீண்டும் அந்த மனிதன் உயிர்த்தெழுந்து ஜீவாத்துமா ஆவதை ஒரு போதும் தடுக்க முடியாது. கெஹன்னா என்ற வார்த்தை இங்கு நரகமாகிவிட்டது. அது இயேசு இரண்டாம் மரணத்தைக் குறிக்க உபயோகித்த பதம். இதைக் குறித்து பின்னர் 'நரகம்' என்ற பகுதியில் தெளிவாக ஆராயலாம்.