kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரகசியம்..?


Senior Member

Status: Offline
Posts: 147
Date:
இரகசியம்..?




-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:56 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புது சிருஷ்டியாக இருக்கிறான். அவ்வளவே. புதிய ஏற்பாட்டு சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கிறானா, இல்லையா என்பதே கேள்வி. அப்படி இருக்கும் பட்சம் சத்திய ஆவியினால் நடத்தப்பட்டு, தெளிந்த புத்தியுள்ள ஆவியில் (குழப்பமில்லாத ஆவியில்) இருப்பான். வேத வசனங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

இன்று ஆளாளுக்கு நான் 'ஊழியன்' என்று தங்களை தாங்களே விசேஷித்தவர்களாக காண்பித்துக்கொள்வதால் தான் எந்த 'ஊழியனுக்கு' வெளிப்படுத்தியது சரி என்று ஆராயவேண்டியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் 'வெளிப்படுத்தப்பட்ட' காரியங்கள் முரணாக உள்ளதே. முதலில் யார் உண்மை ஊழியன் என்று கண்டுபிடிக்கவே விஷேசித்த ஆவி தேவைப்படிகிறதே?

ஆகவேதான் நான் முதலில் பதித்தது போல முதலில் 'மரணம்' என்றால் என்ன? ஆத்துமா என்றால் என்ன என்று அவரவர்க்கு 'வெளிப்படுத்திய' காரியங்களை தெளிவாகப் பதித்தால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரலாம். அதன் பின் மற்ற ரகசியங்களை ஆராயலாமே!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:43 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம் எழுதுகிறார்: ""வேதம் பேசுமிடத்து பேசு; வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு" என்பதே வேதப் பண்டிதர்களின் தீர்க்கமான கருத்தாகும்;"

வேத‌ப்ப‌ண்டித‌ர்க‌ள் ஏதோ க‌ருத்தை சொல்லி விட்டார்க‌ள் ஆனால் இன்று எந்த‌ ஊழிய‌ன் இதை பின் ப‌ற்றுகிறான். அது தான் எல்லோரிட‌மும் இயேசு கிறிஸ்துவோ, ப‌ரிசுத்த‌ ஆவியோ வ‌ந்து முத‌ல் நாள் இர‌வில் பேசி விட்டு "இர‌க‌சிய‌ங்க‌ளை" வெளிப்ப‌டுத்தி விட்டு போகிறார்க‌ளே. ஆக‌வே தான் ச‌பைக‌ளில் குழ‌ப்ப‌மே த‌விர‌, வேத‌த்தை தீர்க‌மாக‌ வாசித்து ஆறாய்ந்தால் குழ‌ப்ப‌ம் அல்ல‌ தெளிவு தான் ஏற்ப‌டும்.

விசுவாசிக‌ள் (!!) என‌ப்ப‌டும் ஒரு கூட்டாத்தார் வாஞ்சிக்கும் காரிய‌மே என்ன‌ தெரியுமா, அந்த‌ ஊழிய‌ரிட‌ம் இயேசு கிறிஸ்து பேசினார் என்றால் என்னிட‌மும் பேசுவார் என்ப‌து தானே! ஆக‌வே தான் இப்ப‌டி பேசி பேசி ச‌பைக‌ள் வ‌ள‌ர்கிற‌தே த‌விர‌ வேத‌ ப‌ண்டித‌ர்க‌ள் சொல்லும் ப‌டி "வாசித்து வாசித்து அல்ல‌" என்ப‌து ஒத்துக்கொள்ள‌ வேண்டிய‌ ஒரு விஷ‌ய‌மாகிற‌து.

ஒரே ஆவி என்றும் ஒரே விசுவாச‌ம் என்றும் ஒரே கிறிஸ்து என்றும் சொல்லியும் விள‌க்க‌ங்க‌ள் ம‌ட்டும் எப்ப‌டி தான் மாற்றி மாற்றி இவ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌து என்ப‌து தான் விள‌ங்காத‌ "இர‌க‌சிய‌ம்"!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறதோ அதனை மறுத்து யாரும் எதையும் நிறுவ இயலாது;

இதைத்தான் நாங்களும் ஆதிமுதல் சொல்லிக்கொண்டுவருகிறோம். ஊழியக்காரரோ, மூப்பனோ, உதவிக்காரனோ எப்படி வேதத்துக்கு முரணாக போதிக்கிறார்கள் அல்லது போதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை 'விளக்கத்தான்' மரணம் பகுதியில் தங்கள் மேலான கருத்துக்களைப் பதிக்க வரவேற்கிறோம். யார் ஓநாய், யார் ஆடு என்பது வெட்ட வெளிச்சமாகும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:29 PM

__________________
"Praying for your Success"


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

chillsam wrote:

 அன்றைக்கு அப்போஸ்தலருடனிருந்து செயலாற்றிய அதே தேவ ஆவியானவர் இன்றைய காலக் கட்டத்திலும் தமது ஸ்தானாபதிகளாக விளங்கும் தமது ஊழியர்கள் மூலம் இடைப்பட்டு மறைபொருளை வெளிப்படுத்தி தமது ஜனங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துகிறார்;

 ஒன்றுமில்லாத "திருக்குறளுக்கு" எத்தனையோ புலவர்கள் விதவிதமான பொருளைத் தருகிறார்களே, பரிசுத்த வேதாகமமோ அள்ள அள்ளக் குறையாத பொக்கிஷம்; அதனை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் ஒவ்வொரு தோற்றத்தைத் தரும்; எனவே பக்திவிருத்தியடையும் நோக்கில் போதிக்கப்படுமானால் எதுவுமே தவறல்ல..!



மிக சரியான கருத்து!  
 
நமது தேவன் ஜீவனுள்ளவர்!  ஒரே ஒருமுறை எழுதி கொடுத்துவிட்டேன் இனி நான் எதுவும் செய்யமாட்டேன்  நீயேதான் ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டும் என்று விட்டுவிட்டு இளைப்பாற போகிறவர் அல்ல அவர்! கூட இருந்து கரம்பிடித்து வழி நடத்தும் தேவன் அவர்!
 
எப்படி ஆதாமிலிருந்து மனிதனை வழினடத்தினாரோ அதுபோல் இன்று ஆவியானவர் மூலம் கரம்பிடித்து வழிநடத்துகிறார்!     அவரை அறியாதவர்களுக்கு அதுபற்றி தெரியாது!
 
ஒரு சாதாரண  பத்தாம் வகுப்பு புத்தகத்தை போதிப்பதற்கு ஒரு வாத்தியார் உலகில் இருப்பதுபோல்  உன்னதமான வேதபுத்தகத்தில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லி போதிப்பதற்கு ஆவியானவர் என்னும் ஆசான் ஒருவர் இருக்கிறார்.
 
உமது வேதத்தில் உள்ள அதிசயங்களை பார்க்கும்படி கண்களை திறந்தருளும் என்று சங்கீதக்காரன்  சொல்கிறான். வேதம் அதிசயமானது! 

சாதாரணமாக படிக்கும்போது ஒரு கருத்து தரும் அதே வசனம் கடுமையாக ஜெபித்துவிட்டு படிக்கும்போது  வேறு கருத்து தரும்!   ஆளுக்கு ஒரு கருத்துசொல்கிரார்கள் என்றாலும் அது ஆண்டவரிடம் இருந்து பெற்றிருதால்   அத்தனையும் உண்மை என்றே நான் கருதுகிறேன்.
 
அழைப்பு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவரவர் அழைப்புக்கு தகுதிக்கு  தகுந்தால்போல் ஆவியானவர் வசனங்களை போதிக்கிறார். ஒன்றாம் வகுப்பு பிள்ளைக்கு அதற்குரிய பாடம்தான் சொல்லிகொடுக்க முடியும்!    
 
பவுலுக்கு பிறகு யாருக்கும் எந்த சத்தியத்தையும் வெளிப்படுத்த மாட்டேன் என்று தேவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?  வசனம் இருந்தால் காண்பிக்கவும். 

பைபிளில் எழுதப்பட்டவை எல்லாம் பொதுவான சத்தியங்கள்! அது எல்லோருக்கும் உரியது. ஆனால்   அவரவர் தனிப்படத் வாழ்க்கைக்கு தேவையானவற்றை ஆண்டவரே போதித்து நடத்துகிறார். அது அடுத்தவருக்கு அல்ல என்றாலும் பக்திவிருத்திக்காக  அதைப்பற்றி எழுதுவது போதிப்பது தவறல்ல!
 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உமது வசனமே சத்தியம் என்ற ஒரு வசனம் போதும். அதற்கு அர்த்தம் வசனம் மட்டுமே சத்தியம் என்பதுதான்.
வசனத்தில் இல்லாத வேதத்திற்கு புறம்பான எதுவுமே பிசாசின் போதனை அல்லது பொய். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தங்களை பிசாசு 'வெளிப்படுத்துவதால்தான்' தேவன் எனக்கு வெளிப்படுத்தியதுதான் சரி என்று ஆளாளூக்கு ஒரு 'சத்தியத்தை' சொல்லுகிறார்கள்.

"...ஒருவன் இவைகளோடே  எதையாகிலும் கூட்டினால் (சொந்த அனுபவங்களை)..வெளி22:18 என்று எச்சரிக்கிறார். 

போதிக்கிறவர் ஆவியானவர் என்றால் ஏன் எல்லாருக்குமே அவர் போதிப்பதில்லை? தேவ ஆவியானவரே போதிக்கும் போது ஏன் நீங்கள் எல்லா வசனங்களுக்கும் தெளிவான பதில் தருவதில்லை. ஓஹோ, ஆவியானவர் சகல சத்தியத்திலும் நடத்துவதில்லையோ? பொதுவான சத்தியம், ஸ்பெஷல் சத்தியம் என்பது எல்லாம் வேதத்தில் இல்லை. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுப்பதால்தான் தேவன் எனக்கு அதை செய்யச்சொன்னார், இதைச்செய்யச்சொன்னார் என்று ஆளாளுக்கு உளருகிறார்கள், ஜனங்களை மோசம் போக்குகிறார்கள்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:14 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இந்த "சற்று மாற்றி" யைத்தான் "...ஒருவன் இவைகளோடே  எதையாகிலும் கூட்டினால் (சொந்த அனுபவங்களை)..வெளி22:18 என்று எச்சரிக்கிறார்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:55:04 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பரவாயில்லையே அப்ப வெளிப்படுத்தின விசேஷம் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் கூட்டலாம், குறைக்கலாம் போலுள்ளதே. பேஷ் பேஷ், அதைத்தானே செய்றாங்க‌.

கூரை ஏறி கோழிபிடிக்காதவன் வாழை ஏறி வைகுண்டம் போனானாம். மரணம், ஆத்துமாவே தெளிவில்லை....
இதில் வெளிப்படுத்தல் வேறு?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:54:54 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ சில்சாம் அவர்களே

மீண்டும் தொடங்கி அதன் பலியை மற்றவர்கள் மேல் போடாதீர்கள்!!

ஒருமையின் வார்த்தைகளை தவிர்த்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்தாமல் வசனத்துடன் முடிந்தால் பதில் எழுதுங்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:54:40 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம், ஆத்துமா இவைகளில் ஆர்வம் இல்லை என்று சொன்ன முதல் ஆள் நீர்தான். மரணத்தைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஜீவனைப் பற்றி போதிக்க அருகதையில்லை. ஆத்துமா என்றால் என்னவென்றே தெரியாமல் ஆத்தும ஆதாயமா?

ஆர்வமில்லை என்று ஒதுங்க முடியாது.
அடிப்படை சத்தியத்தில் ஆர்வமில்லையெனில் மற்றவற்றை அறிந்துகொள்ளவே முடியாது.
இன்றைய so called    கிறிஸ்தவத்தின் குழப்பங்களுக்கெல்லாம் தாய் இந்த மரணம், மற்றும் ஆத்துமா பற்றிய தெளிவின்மைதான்.
இதை அறியாமல் மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம் காண்பிப்பது சரியல்ல‌.

மரணத்தைக் குறித்து வேதம் என்ன சொல்கிறதோ அதனை மறுத்து யாரும் எதையும் நிறுவ இயலாது;

என்று மட்டும் பதிக்கத்தெரிகிறது. ஆனால் வேதம் என்ன சொல்கிறதென்று விளக்கத்தெரியாமல் ஆர்வமில்லை என்று ஓடிப்போவது கோழைத்தனம்.

ஏன் 'பரிசுத்த ஆவி' யின் லீடிங் இல்லையோ?


-- Edited by soulsolution on Sunday 10th of January 2010 10:48:28 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மிஸ்டர் சில்சாம்,

தங்களை யாரும் எழுதும்படி வற்புறுத்தவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். தாங்கள் நிறுத்த வேண்டும் என்றால் தாராளமாக செய்யலாம். வேதத்தில் உள்ள அடிப்படை சத்தியங்களின் மேல் ஆர்வம் இல்லை என்பது எந்த அளவிற்கு வெளிப்பாடுகள், கிரியைகள் மேல் நம்பிக்கை வைத்து அதையே பிரசங்கித்தும் வருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.



ஒரு தீப்பெட்டிக்குள் ஆயிரம் ஆத்துமா அடங்கி விடுவார்கள் என்று யாரோ ஒரு பாஸ்டர் சொன்னது இப்படிப்பட்ட ஒரு வெளிப்பாடு தானோ. "தேவனே எங்கள் சபைக்கு ஆத்துமாக்களை தாருங்கள் என்றும், ஆத்துமா ஆதாயம் செய்கிறோம்" என்று சொல்லி கண்களுக்கு புலப்படாத ஜீவன்களுக்கு பின்னால் தான் இன்றைய ஊழியர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள் போல்!!


தயவு செய்து எங்கள் தளம் எங்கள் தளம் போல் இருக்கட்டும், வசனத்தால் விவாதிக்க வேண்டும் என்றால் செய்யுங்கள் எங்களுக்கு உங்களின் சொந்த கிரியைகளோ, அனுபவங்களோ தேவை இல்லை.



நன்றி
இப்படிக்கு மிஸ்டர் நிர்வாகி



-- Edited by bereans on Monday 11th of January 2010 07:17:11 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard