" உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என் மேல் விழுந்தது. ( ரோமர், 15:3)
கிறிஸ்து அனேகரின் நிந்தனைகளை ஏற்றுக்கொண்டது போல துன்மார்கத்திலே ஜீவித்து, மனந்திரும்பி, தேவனையும் குமாரனையும் அறிந்தபின் கிறிஸ்துவின் நல்ல போர் வீரராகிய நாமும் அவர் நிந்தனைகளில் பங்கு பெற வேண்டும்.
அவர் பூமியில் இருந்த போது தம்முடைய பாடுகளை சற்றும் கருதாது துன்மார்க்கரின் நடுவே நிந்தைகளையும், இகழ்ச்சிகளையும், துன்பங்களையும் சகித்து, பொறுமையுடனும், அன்புடனும் மற்றவர்களுக்காகச் சேவை செய்தார்.
அவரை வெறுத்தவர்களைக் குறித்து அவர் ஆச்சரியப்படவில்லை.
இவ்வுலகம் சாத்தானுடையதென்றும், தம்மை இவ்வுலகத்தார் பகைப்பார்கள் என்பதையும் அறிந்திருந்தார்.
அவரைப் பின்பற்றுகிற யாவரும், அவருடைய நிந்தைகளில் பங்குபெறுவது மிக அவசியமானது.