"யெகோவா எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன், இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு யெகோவாவின் நாமத்தைத் தொழுது கொள்ளுவேன். நான் யெகோவாவிற்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்கள் எல்லாருக்கு முன்பாக செலுத்துவேன்." ( சங்கீதம், 116:12 - 14 )
வருஷத்தின் முடிவு சில புதுய திட்டங்களை வகுக்க ஏற்ற காலமானது.
வரும் வருஷத்தில் நாம் தேவனுடைய ஊழியத்தில் எவ்விதம் அவர் சித்தத்தை நிறைவேற்றலாம்,
எவ்விதம் அவர் கிருபைக்கு பாத்திரராகப் பாடுகளை அனுபவிக்கலாம் என்றும் அதிகமாக நாம் ஊழியம் செய்ய
எவ்வித முறைகளை கையாளவேண்டும் என்றும் திட்டமிடுவதே தேவனுடைய பிள்ளைகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் நாம் தேவனோடு செய்த பொருத்தனைகளை நிறைவேற்றினோமோ என்று சிந்தித்து, அவைகளை நிறைவேற்ற நம்மை உட்படுத்த வேண்டும். ( சங்கீதம், 150 )