" காலையிலே உன் விதையை விதை. மாலையிலே உன் கையை நெகிழ விடாதே. அதுவோ, இதுவோ எது வாய்க்குமோ என்றும் இரண்டும் சரியாய் பயன்படுமோ என்றும் நீ அறியாயே "
(பிரசங்கி, 11:6)
சத்திய ஊழியம் செய்ய தேவனால் அழைக்கப்பட்ட தேவ ஜனம் ஊழியம் செய்யும்போது எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாயிருந்து, ஊழியம் செய்யக்கூடிய சந்தர்ப்பத்தைக் கவனித்து இருக்க வேண்டும்.
இவர்கள் தேவனால் வழி நடத்தப்பட்டு, உபயோகப்படுத்தப்படத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவ பக்திக்குரிய அறிகுறிகள் காணப்படும் இடங்களில் கவனமாயிருந்து சற்றும் தயங்காமல் நாம் பெற்ற சத்தியத்தூதை அவர்களுக்கும் உதவி, அவர்களும் ஆசீர்வாதம் பெறும்படிச் செய்ய வேண்டும்.